தோமினிக் சாவியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித தோமினிக் சாவியோ
ஒரு செப அட்டையில்
புனித தோமினிக் சாவியோ.
ஒப்புரவாளர்
பிறப்பு(1842-04-02)ஏப்ரல் 2, 1842
சான் ஜியோவன்னி, ரிவா ப்ரெஸோ சியரி, பைட்மான்ட், இத்தாலி[1]
இறப்புமார்ச்சு 9, 1857(1857-03-09) (அகவை 14)
மொன்டொனியோ, பைட்மான்ட், இத்தாலி[1]
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்கம்
அருளாளர் பட்டம்மார்ச் 5, 1950 by திருத்தந்தை 12ம் பயஸ்
புனிதர் பட்டம்ஜூன் 12, 1954 by திருத்தந்தை 12ம் பயஸ்
முக்கிய திருத்தலங்கள்கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பேராலயம், தூரின், இத்தாலி[2]
திருவிழாமே 6 (முன்பு மார்ச் 9)[3]
பாதுகாவல்பீடச்சிறார், பாடகர் குழுச் சிறார், தவறுதலாக குற்றம் சுமத்தப்பட்டோர்[4]

புனித தோமினிக் சாவியோ (இத்தாலியம்: Domenico Savio; ஏப்ரல் 2, 1842 – மார்ச் 9, 1857[5][6]), இத்தாலியைச் சார்ந்த புனித ஜான் போஸ்கோவின் வளரிளம் பருவ மாணவர்களில் ஒருவர். இவர் குருவாகும் ஆசையில் படித்துக் கொண்டிருந்தபோது தனது 14ஆம் வயதில் நோயுற்று இறந்தார்.[7]

பதினான்கு வயதே நிரம்பிய தோமினிக் சாவியோவின், வீரத்துவம் நிறைந்த அன்றாடப் புண்ணிய வாழ்வே இவரைப் புனிதர் நிலைக்கு உயர்த்தியது.[8] கத்தோலிக்க திருச்சபையில் மறைசாட்சியாக இறக்காத புனிதர்களில் இவரே மிகவும் இளையவர்.[9]

தொடக்க காலம்[தொகு]

வீட்டு வாழ்வு[தொகு]

தோமினிக் சாவியோ, 1842 ஏப்ரல் 2ந்தேதி இத்தாலியில் உள்ள ரிவா ப்ரெஸோ சியரியில் பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்தே இயேசுவிடமும் அன்னை மரியாவிடமும் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். இவரது குடும்பமும் சூழ்நிலையும் இவரை புனிதத்தில் வளர்த்தன. இவரது பெற்றோர் இவரை கிறிஸ்தவ மதிப்பீடுகளில் வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டினர்.[10] நான்கு வயதிலேயே இவர் தனியாக செபிக்கும் திறமை பெற்றிருந்தார்.[11]

சாவியோ தான் முதல் நற்கருணை பெற்ற நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது, "என் வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியானதும் அற்புதமானதுமான நாள் அது" என்கிறார்.[12] இவர் ஆலயத்தின் பீடச் சிறுவர்கள் குழுவில் இணைந்து திருப்பலியில் குருக்களுக்கு உதவி செய்தார்; அதிகாலை 5 மணிக்கே ஆலயம் சென்றுவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். மழையிலும், குளிரிலும் இவர் ஆலயத்திற்கு தவறாமல் சென்றார்.

ஆரட்டரியில்[தொகு]

12 வயதில் கடவுளின் அழைப்பை உணர்ந்து, புனித ஜான் போஸ்கோ நடத்திய ஆரட்டரியில் சாவியோ சேர்ந்தார். 1854 அக்டோபர் முதல் திங்கள் கிழமை தனது தந்தையுடன் புனித ஜான் போஸ்கோவை சந்தித்த இவர்,[13] “நான் தைக்கப்படாத துணியாக இருக்கிறேன், என்னை இயேசுவுக்கு உகந்த நல்ல சட்டையாகத் தைப்பது உங்கள் பணி” என்று அவரிடம் கூறினார்.

கெட்ட வார்த்தைகள் பேசிய சிறுவர்களை சாவியோ கண்டித்து திருத்தினார்; சண்டையிட்டுக் கொண்ட சிறார்களுக்கிடையே சமாதானம் செய்துவைத்தார். தீய வழிகளில் இருந்து விலகி, களங்கமற்ற தூய்மையான புண்ணிய வாழ்வு வாழ்ந்தார். தனது செயல்கள் அனைத்தையும் இறைவனின் புகழ்ச்சிக்காகவே செய்து வந்தார்.

குருத்துவ படிப்பு[தொகு]

இறுதியில் சாவியோ குரு மடத்தில் சேர்ந்தார். ‘பாவம் செய்வதை விட சாவதே மேல்’ என்பது இவரது விருதுவாக்கு ஆகும். 14ஆம் வயதில் இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மிகவும் பலவீனம் அடைந்தார். 1857 மார்ச் 9ந்தேதி விண்ணகக் காட்சியால் பரவசம் அடைந்து, “ஆகா, எவ்வளவு இன்பம் நிறைந்த அற்புத காட்சி!” என்று கூறியவாறே தோமினிக் சாவியோ உயிர் துறந்தார்.

தோமினிக் சாவியோ இறந்ததும் புனித ஜான் போஸ்கோ இவரது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதினார்.[4] அது இவரது புனிதர் பட்டமளிப்பு நடவடிக்கைகளில் முக்கிய ஆதாரமாக விளங்கியது.

புனிதர் பட்டம்[தொகு]

சாவியோவின் புனிதர் பட்டத்திற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிவைத்த திருத்தந்தை 10ம் பயஸ்,[14] “தோமினிக் என்னும் இளைஞர், திருமுழுக்கில் பெற்ற புனிதத்தைப் பழுதின்றி காப்பாற்றிக் கொண்டவர்" என்று இவரைப் புகழ்கின்றார்.

1933ல் இவருக்கு வணக்கத்திற்குரியவர் பட்டம் வழங்கிய திருத்தந்தை 11ம் பயஸ், “தூய்மை, பக்தி, ஆன்மீகத் தாகம் ஆகியவற்றின் ஆற்றலால் சாவியோவின் கிறிஸ்தவ வாழ்வு நமக்கு முன்மாதிரியாக உள்ளது” என்று கூறுகிறார்.

திருத்தந்தை 12ம் பயஸ், தோமினிக் சாவியோவுக்கு 1950 மார்ச் 5ந்தேதி அருளாளர் பட்டமும், 1954 ஜூன் 12ந்தேதி புனிதர் பட்டமும்[15] வழங்கி உரை நிகழ்த்திய போது, “இளைஞர்கள் சாவியோவின் வழிகளைப் பின்பற்ற வேண்டும். தீய சக்திகளின் தாக்கங்களைப் புறக்கணித்து, தூய்மையில் நிலைத்து நின்ற சாவியோவின் புனித வாழ்க்கை இளைஞர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு” என்று கூறினார்.

ஆதாரங்கள்[தொகு]

 1. 1.0 1.1 Santiebeati.it: Domenico Savio; Retrieved on 24 November 2006.
 2. Boychoirs.org: Saint Dominic Savio: Patron Saint of Choirboys: 1842 – 1857; Retrieved on 24 November 2006.
 3. Dailycatholic.org: Friday-Saturday-Sunday- March 8–10, 2002; volume 13, no. 45; Retrieved on November 24, 2006.
 4. 4.0 4.1 Saintpatrickdc.org: Saints of the Day பரணிடப்பட்டது 2007-10-18 at the வந்தவழி இயந்திரம் at the website of the Saint Patrick Catholic Church, Washington, D.C.; Retrieved on 24 November 2006.
 5. Salesianvocation.com: Biography of St.Dominic Savio பரணிடப்பட்டது 2004-10-20 at the வந்தவழி இயந்திரம்; Retrieved on 24 November 2006.
 6. Santiebeati.it: San Domenico Savio Adolescente; Retrieved on 24 November 2006.
 7. Bosconet.aust.com: Memoirs of the Oratory of Saint Francis de Sales by St. John Bosco (footnote 19, Chapter 6) பரணிடப்பட்டது 2006-05-09 at the வந்தவழி இயந்திரம்; Retrieved on 24 November 2006.
 8. Stthomasirondequoit.com: Saints Alive: St. Dominic Savio பரணிடப்பட்டது 2006-11-18 at the வந்தவழி இயந்திரம்; Retrieved on November 24, 2006
 9. Donbosco-torino.it: Main Altars in the Church பரணிடப்பட்டது 2012-02-06 at the வந்தவழி இயந்திரம்; Retrieved on November 24, 2006
 10. Bosconet.aust.com: Don Bosco's Three Lives: The Life of Dominic Savio (Chapter 1: Home – The boy's character – His early goodness) பரணிடப்பட்டது 2006-10-28 at the வந்தவழி இயந்திரம்; Retrieved on November 24, 2006;
 11. Traditionalcatholic.net: The Life of Dominic Savio: Chapter 1-Early Life and Extraordinary Gifts; Retrieved on November 24, 2006.
 12. Bosconet.aust.com: Don Bosco's Three Lives: The Life of Dominic Savio (Chapter 3: His first communion – Preparation, recollection and memories of the day) பரணிடப்பட்டது 2006-10-28 at the வந்தவழி இயந்திரம்; Retrieved on November 24, 2006.
 13. Traditionalcatholic.net: The Life of Dominic Savio: Chapter 6-My First Meeting with Dominic Savio. Some Curious Incidents Connected With It.; Retrieved on November 24, 2006.
 14. Americancatholic.org: Saint of the day: St.Dominic Savio பரணிடப்பட்டது 2002-09-11 at the வந்தவழி இயந்திரம்; Retrieved on 24 November 2006.
 15. Catholic-forum.org: Dominic Savio பரணிடப்பட்டது 2006-09-19 at the வந்தவழி இயந்திரம்; Retrieved on 24 November 2006.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமினிக்_சாவியோ&oldid=3369967" இலிருந்து மீள்விக்கப்பட்டது