இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1962

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1962

← 1957 மே 7, 1962 1967 →
  Photograph of Sarvepalli Radhakrishnan presented to First Lady Jacqueline Kennedy in 1962.jpg No image.svg
வேட்பாளர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் சவுதிரி ஹரி ராம்
கட்சி சுயேச்சை சுயேச்சை
சொந்த மாநிலம் தமிழ் நாடு பஞ்சாப்

தேர்வு வாக்குகள்
5,53,067 6,341

முந்தைய குடியரசுத் தலைவர்

ராஜேந்திர பிரசாத்
காங்கிரசு

குடியரசுத் தலைவர் -தெரிவு

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
சுயேட்சை

இந்தியக் குடியரசின் மூன்றாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1962 இல் நடைபெற்றது. 1952 முதல் துணைக் குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், இத்தேர்தலில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவரானார்.

பின்புலம்[தொகு]

மே 7, 1962ல் இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. 1950 முதல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் ஓய்வு பெற்றதால் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. குடியரசுத் துணைத் தலைவராக பத்தாண்டுகள் பதவி வகித்திருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளராக ஏற்றுக் கொண்டன. கட்சி சார்பற்ற வேட்பாளராகவே அவர் போட்டியிட்டார். மேலும் இரு சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். மிகப்பெரும்பாலான கட்சிகளின் ஆதரவையும் மதிப்பையும் பெற்றிருந்த ராதாகிருஷ்ணன் 98.2 % வாக்குகளுடன் எளிதில் வெற்றி பெற்றார்.

முடிவுகள்[தொகு]

ஆதாரம்:[1][2]

வேட்பாளர் வாக்காளர் குழு வாக்குகள்
சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை 5,53,067
சவுதிரி ஹரி ராம் 6,341
யமுனா பிரசாத் திரிசூலியா 3,537
மொத்தம் 5,62,945

மேற்கோள்கள்[தொகு]