இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1957

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1957

← 1952 மே 6, 1957 1962 →
  No image.svg No image.svg No image.svg
வேட்பாளர் ராஜேந்திர பிரசாத் சவுதிரி ஹரி ராம் நாகேந்திர நாராயண் தாஸ்
கட்சி சுயேட்சை சுயேட்சை சுயேட்சை
சொந்த மாநிலம் பீகார் பஞ்சாப் அசாம்

தேர்வு வாக்குகள்
4,59,698 2,672 2,000

முந்தைய குடியரசுத் தலைவர்

ராஜேந்திர பிரசாத்
கட்சி சார்பற்றவர்

குடியரசுத் தலைவர் -தெரிவு

ராஜேந்திர பிரசாத்
கட்சி சார்பற்றவர்

இந்தியக் குடியரசின் இரண்டாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1957 ல் நடைபெற்றது. 1950 முதல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத், இத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் குடியரசுத் தலைவரானார்.

பின்புலம்[தொகு]

மே 6, 1957ல் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. முன்பு இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக இருந்த ராஜேந்திர பிரசாத் அனைத்து சாரருக்கும் ஏற்புடையவராக இருந்தார். பல எதிர்க்கட்சிகளும் அவரைத் தங்கள் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு போட்டி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. கட்சி சார்பற்ற வேட்பாளராகவே அவர் போட்டியிட்டார். மேலும் இரு சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். மிகப்பெரும்பாலான கட்சிகளின் ஆதரவையும் மதிப்பையும் பெற்றிருந்த ராஜேந்திர பிரசாத் 99 % வாக்குகளுடன் எளிதில் வெற்றி பெற்றார்.

முடிவுகள்[தொகு]

ஆதாரம்:[1][2]

வேட்பாளர் வாக்காளர் குழு வாக்குகள்
ராஜேந்திர பிரசாத் 4,59,698
சவுதிரி ஹரி ராம் 2,672
நாகேந்திர நாராயண் தாஸ் 2,000
மொத்தம் 4,64,370

மேற்கோள்கள்[தொகு]