அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி, நந்தனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி (தன்னாட்சி)
வகைஅரசு கலைக்கல்லூரி
உருவாக்கம்1901
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம், ,
இணையதளம்http://www.nandanamartscollege.info/

அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி, நந்தனம் (Government Arts College for Men, Nandanam), சென்னையின் நந்தனம் பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பெற்ற அரசு ஆடவர் கலைக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் மதரசா பள்ளியாகத் துவக்கப்பட்டது. 1901இல் இசுலாமிய மாணவர்களை இலக்காகக் கொண்டு கல்லூரியாக மேம்படுத்தப்பட்டது. இந்நிலையில் 1948ஆம் ஆண்டிலிருந்து அரசுக் கல்லூரியாக அனைத்து சமயத்தினரும் கற்கும் விதமாக உருமாறியது.[1]

பாடத் திட்டங்கள்[தொகு]

இக்கல்லூரியில் கலை, அறிவியல் மற்றும் வணிகத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பாடத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. கலைத்துறை பட்டப்படிப்புகளில் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வரலாறு, பொருளியல் மற்றும் புதியதாக துவங்கப்பட்டுள்ள வணிக மேலாண்மையில் பட்டப்படிப்புகள் உள்ளன. அறிவியல் துறையில் கணினியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பம், மற்றும் விலங்கியல் என ஆறு பட்டப்படிப்புக் கல்வித்திட்டங்கள் உள்ளன. வணிகத்துறையில் வணிக இளங்கலைப் பட்டமும் நிறுவன செயலர் பணிக்கான கல்வித்திட்டமும் கற்பிக்கப்படுகின்றன. மேற்படிப்பு கல்வித்திட்டங்களில் வணிக/அறிவியல் முதுகலை திட்டங்களைத் தவிர நீர் வேளாண்மையிலும் பாடத்திட்டம் உள்ளது. புதியதாக கணிதத்திலும் கணி அறிவியலிலும் முதுகலைப் பட்டப்படிப்பு பாடங்களை வழங்கத் தொடங்கியுள்ளது. விலங்கியல் துறை முனைவர் பட்டத்திற்கான ஆய்வுகளை வழங்குகின்றது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "BRIEF HISTORY OF THE COLLEGE". அரசினர் கலைக்கல்லூரி, நந்தனம் அதிகாரபூர்வ வலைத்தளம். Archived from the original on 2015-08-23. பார்க்கப்பட்ட நாள் 11 ஆகத்து 2015.