திராவிட மொழிக் குடும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திராவிட மொழி பேசப்படும் இடங்கள்
திராவிட மொழி பேசப்படும் இடங்கள்

தென்னிந்தியாவைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிகள் பற்றி ஆராய்ந்து, 'திராவிட மொழிகளின் ஒப்பியலிலக்கணம்' என்ற நூலையெழுதிய கால்டுவெல் அடிகளார், 1856ல், இந்த நான்கு மொழிகளுடன், தென்னிந்தியாவிலிருந்த, வேறு சில மொழிகளையும் சேர்த்துத் திராவிட மொழிகள் என்று பெயரிட்டார். பின்னர் வந்த ஆய்வாளர்கள், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சில மொழிகள், மத்திய இந்தியா, வட இந்தியா, பாகிஸ்தானிலுள்ள பலூச்சிஸ்தான், நேபாளம் ஆகிய இடங்களில் வழங்கிவருவதை எடுத்துக் காட்டினர். இன்று திராவிட மொழிக் குடும்பத்தில், சிறிதும் பெரிதுமாகச் சுமார் 73 மொழிகள்[1] வரை இருப்பது அறியப்பட்டுள்ளது.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

கிமு 1500 அளவில், ஆரியர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன், இந்தியா முழுவதும் திராவிட மொழிகளே வழங்கி வந்தது என்பது பல ஆய்வாளர்களது கருத்து.[2] திராவிட மொழிகளில் இருந்து இந்திய ஆரிய மொழிகளுக்குச் சென்றிருக்கும் நாமடங்கு ஒலியன்கள் முதலிய மொழியியல் சான்றுகள் கிடைத்தாலும் இதை அறுதியிட்டுக் கூறும் அளவிற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. சரஸ்வதி - சிந்து பள்ளத்தாக்குகளில் வளர்ச்சிபெற்ற நாகரிகமும் திராவிட நாகரீகமே என்ற கருத்தும் பல முன்னணி ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது..[2] ஆனால் , பல ஆய்வாளர்கள் அக்கருத்தை விட்டு விட்டார்கள் ஹரப்பா, மொஹெஞ்சதாரோ முதலிய சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட, இன்னும் வாசிக்கப்படாத எழுத்துக்களும், அக்காலத்தில் வழங்கிய திராவிட மொழிக்கானவையே என்பதும் அவர்கள் கருத்து. சி.ச. குறியீட்டுகளை யாரும் இன்னும் அடையாளம் கண்டு கொண்டு, அது இந்த மொழிதன் என்று யாராலும் சொல்ல முடியவில்லை

திராவிட மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் அவற்றின் புவியியற் பரம்பலைக் கருத்திற் கொண்டு ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:

  1. தென் திராவிடம்
  2. தென்-நடுத் திராவிடம்
  3. நடுத் திராவிடம்
  4. வட திராவிடம்
  5. வகைப்படுத்தப்படாதவை

என்பனவாகும்.

இவற்றுள் தென் திராவிடப் பிரிவில் 34 மொழிகளும், தென்-நடுத் திராவிடப் பிரிவில் 21 மொழிகளும், நடுத் திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வட திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வகைப்படௌத்தப் படாதவையாக 8 மொழிகளுமாக மொத்தம் 73 மொழிகள் கண்டறியப் பட்டுள்ளன.

[தொகு] திராவிட மொழிகளின் பட்டியல்

[தொகு] எண்கள்

ஒன்று முதல் பத்து வரையான எண்கள் பல்வேறு திராவிட மொழிகளில் கொடுக்கப் பட்டுள்ளன.

எண் தமிழ் தெலுங்கு கன்னடம் துளு மலையாளம் குறுக் கோலமி பிராகுயி மூலத் திராவிடம்
1 ஒன்று ஒக்கட்டி ஒந்து onji onnu ஒந்நு oa okkod asi *oru(1)
2 இரண்டு ரெண்டு எரடு radu randu ரண்டு indiŋ irā irā *iru(2)
3 மூன்று மூடு மூரு mūji nnu மூந்நு mūnd mūndiŋ musi *muC
4 நான்கு நாலுகு நாலக்கு nālu nālu நாலு kh nāliŋ čār (II) *nāl
5 ஐந்து ஐது ஐது ainu añcu அண்சு pancē (II) ayd(3) panč (II) *cayN
6 ஆறு ஆறு ஆறு āji āru ஆறு soyyē (II) ār(3) šaš (II) *caru
7 ஏழு ஏடு ēlu ēlu ēzhu ஏழு sattē (II) ē(3) haft (II) *eu
8 எட்டு எணிமிதி எண்ட்டு ēma eu எட்டு ahē (II) enumadī (3) hašt (II) *eu
9 ஒன்பது தொம்மிதி ஒம்பத்து ormba onbatu ஒன்பது naiyē (II) tomdī (3) nōh (II) *to
10 பத்து பதி ஹத்து pattu pathu பத்து dassē (II) padī (3) dah (II) *pat(tu)

[தொகு] வெளி இணைப்புகள்

[தொகு] குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Ethnologue
  2. 2.0 2.1 Trask, Robert Lawrence (2000). The Dictionary of Historical and Comparative Linguistics. Routledge, 97. “It is widely suspected that the extinct and undeciphered Indus Valley language was a Dravidian language, but no confirmation is available. The existence of the isolated northern outlier Brahui is consistent with the hypothesis that Dravidian formerly occupied much of North India but was displaced by the invading Indo-Aryan languages, and the presence in the Indo-Aryan languages of certain linguistic features, such as retroflex consonants, is often attributed to Dravidian substrate influence.”
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்