இருளா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இருளா | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், பெரியார், சேலம், செங்கை அண்ணா மாவட்டங்கள்; கர்நாடகம்; கேரளாவின் பாலக்காடு மாவட்டம்; ; ஆந்திரப் பிரதேசம். | |
| பேசுபவர்கள்: | 200,000 (2003) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் தென் திராவிடம் தமிழ்-கன்னடம் தமிழ்-குடகு தமிழ்-மலையாளம் தமிழ் இருளா |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | iru | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
இருளா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 200,000 மக்களால் பேசப்படுகிறது. இது எரவல்லன், எருக்கலா, இரவா, இருளர் மொழி, இருளவன், இருளிகா, இருளிகர், கொரவா போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு.
இருளா மொழிக்கும் தமிழுக்கும் இடையில் புரிந்து கொள்ளக்கூடிய தன்மை மிகவும் குறைவு. தமிழுடன் இம்மொழிக்கு ஏறத்தாழ 50% சொல்லொற்றுமை உண்டு.