அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி
Appearance
வகை | அரசினர் மகளிர் கலைக்கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1992 (அன்னை சந்தியா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி என) |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
முதல்வர் | எம். ஆர். ஜெயசக்தி |
அமைவிடம் | , , |
இணையதளம் | http://gacwkgi.org |
அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, கிருட்டிணகிரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கிருட்டிணகிரி மாவட்டத்தில் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1992ஆம் ஆண்டில் அன்னை சந்தியா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி என்றபெயரில் தொடங்கப்பட்டது. 1997ஆம் ஆண்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[2] சேலம் பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[3] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) அனுமதியுடன் மொத்தமாக 13 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு செயற்பட்டு வருகிறது.[4] முனைவர் எம். ஆர். ஜெயசக்தி தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[5]
இதனையும் காண்க
[தொகு]- தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல்
- கிருட்டிணகிரி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Colleges in Tamil Nadu
- ↑ கல்லூரி வரலாறு
- ↑ பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்
- ↑ "13 ஏக்கரில் செயற்பட்டுவரும் கிருஷ்ணகிரி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி". Archived from the original on 2016-01-23. பார்க்கப்பட்ட நாள் 2015-10-28.
- ↑ கிருட்டிணகிரி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முதல்வர்