அழகு முத்துக்கோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாவீரன் அழகுமுத்துக்கோன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வீர அழகுமுத்துக்கோன் (1728-1757) கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். ஜெகவீரராமபாண்டி எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னருக்கு சிறந்த நண்பராக விளங்கினார்..[1] அழகுமுத்து சேர்வைக்காரனின் முன்னோர்கள் கட்டாலங்குளம் பகுதியை அரசாலும் உரிமையை, மதுரையை ஆண்ட மன்னர் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் குமாரர் பெரிய வீரப்ப நாயக்கர் அவர்களிடம் ஒரு செப்பேட்டின் மூலம் பட்டயம் பெற்று அரசாண்டார். கப்பம் கட்ட மறுத்து முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்ததாலும் மருதநாயகம் யூசுப்கான்சாகிப்பை எதிர்த்து பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டு அதில் வீரன் அழகுமுத்து கோன் மற்றும் 6 படைத்தளபதிகளும் மற்றும் 248 போர் வீரர்களும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டு இறந்தனர்.[2] பீரங்கி முன் நின்ற சாகும் தறுவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவன் இவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.[3] பெரிய வீரப்ப நாயக்கர் எழுதிக் கொடுத்த செப்புப் பட்டயத்தில் இடம் பெற்றுள்ள கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம் என்ற சொற்களைக் கொண்டு இவர் யாதவர் குலத்தவர் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது

இவர் கோனார் குலத்தில் சேர்வைக்காரர் என்ற பட்டம் பெற்றவர் . இன்றும் வாழ்ந்து வரும் இவரது வாரிசுகள் அனைவரும் யாதவர்களே ஆவர். இன்றும் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் நேரடி வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. டபிள்யு.இ.கணபதி பிள்ளை 1890ஆம் ஆண்டு எழுதிய Ettayapuram past and presen
  2. எட்டையாபுரம் சமஸ்தானத்தில் வேலை செய்த சுவாமி தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்ட வம்சமணி தீபிகை
  3. "மாவீரன் அழகுமுத்துக்கோன்", குங்குமம் வார இதழில் வெளியான தமிழ் மன்னின் வீர மைந்தர்கள் என்ற தொடர்கட்டுரைகளில் ஒன்று

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகு_முத்துக்கோன்&oldid=2066943" இருந்து மீள்விக்கப்பட்டது