உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக் கல்லூரி
வகைஅரசு, கலைக் கல்லூரி
உருவாக்கம்1965
முதல்வர்டி. சேகர்
அமைவிடம், ,
இணையதளம்http://www.lngovernmentcollege.com/

உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக் கல்லூரி இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரியில் செயல்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இக்கல்லூரி 1965ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1] சென்னை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[2]

வரலாறு[தொகு]

உலகநாதன் மற்றும் நாராயணசாமி ஆகியோரால் தமிழக அரசின் நிதியுதவியுடன் 1965 ஆம் ஆண்டில் இக்கல்லூரி நிறுவப்பட்டது. நிலம் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக, உலகநாதன், நாராயணசாமி ஆகிய இருவரும் இணைந்து 5 இலட்சம் ரூபாய் வழங்கினர். தமிழக அரசு சார்பில் இக்கல்லூரிக்கு 3 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

இளநிலைப் படிப்புகள்[தொகு]

கலைப் பாடங்கள்[தொகு]

 • தமிழ்
 • வரலாறு
 • அரசியல் அறிவியல்
 • ஆங்கிலம்

அறிவியல்[தொகு]

 • கணிதம்
 • இயற்பியல்
 • வேதியியல்
 • தாவர உயிரியல் & தாவர உயிர்த்தொழில்நுட்பம்
 • கணினி அறிவியல்

முதுநிலைப் படிப்புகள்[தொகு]

கலை[தொகு]

 • வரலாறு
 • அரசியல் அறிவியல்

அறிவியல்[தொகு]

 • கணினி அறிவியல்

அமைவிடம்[தொகு]

திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரியில் இக்கல்லூரி அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]