உள்ளடக்கத்துக்குச் செல்

அழுந்தூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அழுந்தூர்
அழிந்தியூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
621 651

அழுந்தூர் (Alundur) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊரில் கிடைத்த கல்வெட்டுகளில் இந்த ஊர் முன்பு அழிந்தியூர் என்று அழைக்கப்பட்டது தெரியவருகிறது.[1]

அமைவிடம்

[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான திருச்சிராப்பள்ளிக்கு தெற்கே மேலூர் சாலையில் 19 கிலோமீட்டர் தொலைவிலும், மணிகண்டத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 372 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 651 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2643 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 1340 (50.7 % ) என்றும், ஆண்களின் எண்ணிக்கை 1303 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 62.9 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

ஊரில் உள்ள கோயில்கள்

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. "Varalaaru - A Portal For South Asian History". www.varalaaru.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-28.
  2. "Alundur Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-28.