உள்ளடக்கத்துக்குச் செல்

அரம்பையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்சராவின் மணற்கல் சிற்பம் ஒன்று (மத்தியப் பிரதேசம், இந்தியா)

அரம்பையர் அல்லது அப்சராக்கள் எனப்படுபவர்கள் இந்து, பௌத்தப் பழங்கதைகளில் வரும் பெண்கள். இவர்கள் அழகாகவும் தெய்வீக ஆற்றல் பெற்றவர்களாகவும் இருப்பர். இவர்கள் தேவ லோகத்தில் உமையம்மைக்கு துணையாக இருக்கும் தோழிகளாவர். இவர்கள் காந்தர்வர்களின் மனைவியர் ஆவர். சிறப்பாக நடனமாட வல்லவர்களான இவர்கள் கடவுளரின் சபையில் தம் கணவர்களது இசைக்கேற்ப நடனமாடுவர். இவர்கள் தாம் விரும்பியபடி தமது உருவத்தை மாற்றிக்கொள்ள முடியும் என்று கருதப்படுகிறது. ஊர்வசி, ரம்பை, மேனகை, திலோத்தமை ஆகியோர் நன்கு அறியப்பட்ட அப்சரசுகள். அப்சரசுகள் லவுகீக (பொருளுலக), தெய்வீக (கடவுள் தன்மையுடைய) அப்சரசு என இருவகையாகக் குறிக்கப்படுகின்றனர்.[சான்று தேவை] இவர்கள் பாற்கடலை கடையும் பொழுது தோன்றியவர்கள். இவர்களுக்கு அரம்பை தலைவியாக அறியப்படுகிறாள். அரம்பையர்கள் தேவ மகளீர், தேவ கன்னிகள், அப்சரஸ்கள் என்றும் அறியப்படுகிறாகள். ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, கிருகத்தலை, சிகத்தலை, சகசந்திசை, பிரமலோசத்தி, அநுமுலோசை, கிருதாசி, விசுவாசி, உருப்பசி, பூர்வசித்தி என்ற சிலர் அவர்களில் புகழ்பெற்றவர்கள்.

சொல்லிலக்கணம்

[தொகு]

'அப்ஜம்’ என்றால் தாமரை; 'சரஸ்’ என்றால் நீர்நிலை. இரண்டு சொல்லும் சேர்ந்து அப்ஜசரஸ்- அப்சரஸ் ஆனது. தாமரை மலர் நிறைந்த குளம் போல மனதுக்கு மகிழ்ச்சியும் இதமும் தரும் தேவ மங்கையர் என்று பொருளாகும்.

சிவனை நோக்கி தவம்

[தொகு]

பாற்கடலில் அறுபதாயிரம் (60,000) அரம்பையர்கள் தோன்றினார்கள். அவர்கள் வசிப்பதற்காக தனித்த உலகம் வேண்டியும், என்றுமே இளமை குன்றாக் கன்னிகளாகவும் இருக்க வேண்டி சிவபெருமானை நோக்கி தவமிருந்தார்கள். அவர்களின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அறுபதாயிரம் தேவ கன்னிகள் வாழ அப்சரஸ் லோகம் என்பதை உருவாக்கி தந்தார்.

குணங்கள்

[தொகு]
சுக்கிரனை மயக்கும் ரம்பை.

அரம்பையர்கள் சிவபூஜையை மேற்கொள்கின்றவர்கள். உமையவளுக்கு துணையாக இருக்கின்றவர்கள். பேரரழகு வாய்ந்தவர்கள். பலவித இசையை யாழில் மீ்ட்டுகின்ற திறனும், மயக்கும் குரலில் பாடலை இயற்றுபவர்களாகவும், நடனக் கலையில் வல்லமை படைத்தவர்களாகவும் அறியப்படுகிறார்கள்.

வழிபாடு

[தொகு]

அரம்பையர்களை வழிபட்டால் இளமையும், செல்வமும், மகிழ்ச்சியும் கிடைக்குமென புராணங்கள் கூறுகின்றன. இந்த வழிபாட்டு முறை பழங்காலத்தில் இருந்துள்ளது. தற்போது இந்தியாவின் வடக்கு பகுதியில் ஸ்ரீலட்சுமி பூஜையில் அரம்பையர்களை வழிபடும் வழக்கமும் உள்ளது.

அரம்பையர்கள் வழிபாடு செய்த தலம்

[தொகு]

மேலும் அரம்பையர்கள் வழிபாடு செய்த தலங்களாக திருநீலக்குடி, பந்தநல்லூர் ஆகியவை அறியப்படுகின்றன.

இலக்கியங்களில்

[தொகு]

குலசேகராழ்வார் - பெருமாள் திருமொழி

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வான் ஆளும் செல்வமும் மண்-அரசும் யான் வேண்டேன் [1]

கவிமணி - கவிமணியின் கவிதைகள்

முன்னம் அரம்பையர்கள் மூவர் - ஒன்றாய்
முத்தம் அளித்தகுறி, அம்மா! [2]

இவற்றையும் காண்க

[தொகு]

தேவ உலகம்

கருவி

[தொகு]

அழகு, இளமை, செல்வம் தரும் அரம்பையர்! - பொற்குன்றம் சுகந்தன் நக்கீரன் இதழ்

ஆதாரம்

[தொகு]
  1. குலசேகராழ்வார் - பெருமாள் திருமொழி 677
  2. கவிமணி - கவிமணியின் கவிதைகள் 582

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரம்பையர்&oldid=3919847" இலிருந்து மீள்விக்கப்பட்டது