உள்ளடக்கத்துக்குச் செல்

திலோத்தமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திலோத்தமை
திலோத்தமை ரவி வர்மா வரைந்த ஓவியம்
தேவநாகரிतिलोत्तमा
சமசுகிருதம்Tilottamā
இடம்தேவ உலகம்


திலோத்தமை என்பவர் தேவ லோகத்தில் வாழ்கின்ற அரம்பையர்களில் ஒருத்தியாவர். திலம் என்றால் எள் . எள் அளவும் குறையாத அழகை பெற்றவள் என்பதால் இப்பெயர் வந்தது.[1] இவரை சுந்தன் - உபசுந்தன் என்ற அசுர சகோதரர்களை அழிப்பதற்காக, பிரம்மாவின் ஆணைப்படி, விஸ்வகர்மா படைத்தார்.

இரு அரக்கர்கள்

[தொகு]

இரணியகசிபு வம்சத்தில் பிறந்தவர் நிகும்பன் என்ற அரக்க மன்னன். அவருக்கு சுந்தன் - உபசுந்தன் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் பாசமானவர்களாக இருந்தார்கள். அச்சமயத்தில் இருவரும் பிரம்மாவை நோக்கி தவமிருந்தார்கள். அவர்களின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மா தாங்கள் பெரும் பலசாலிகளாகத் திகழவேண்டும், விரும்பிய வடிவத்தை எடுக்கும் ஆற்றல் தங்களுக்கு வேண்டும், எல்லாக் கலைகளும் தங்களுக்குக் கைவர வேண்டும் போன்ற வரங்களைக் கேட்டார்கள். பிரம்மாவும் அவை அனைத்தையும் தந்தார்.

சாகாவரம்

[தொகு]
திலோத்தமையை அடைய சுந்தன் - உபசுந்தன் போரிடுதல்

அத்துடன் அவர்கள் சாகா வரத்தினையும் வேண்டினார்கள். அது இயலாது என்று பிரம்மா மறுத்ததால், பேரன்பு கொண்ட இருவரும், தங்களில் கைகளால் மட்டுமே மரணம் நிகழ வேண்டுமென வரம் வாங்கிக்கொண்டார்கள். அதன் பிறகு தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் வதைத்தார்கள்.

திலோத்துமை பிறப்பு

[தொகு]

பிரம்மாவிடம் தேவர்கள் அனைவரும் தங்களை காக்கும் படி வேண்டினார்கள். தேவர்களில் தேவ சிற்பியான விஸ்வகர்மாவின் துணையோடு திலோத்தமை உருவாக்கப்பட்டாள். உலகில் உள்ள பெண்களிடம் இருக்கும் மொத்த அழகும் அவளிடம் இருந்தமையால் பிரம்மதேவனும் அவளுடைய அழகில் மயங்கினார்

இருவரின் மரணம்

[தொகு]

சுந்த, உபசுந்தர்கள் முன்னிலையில் திலோத்தமையை நடனமாடச் செய்தார்கள் தேவர்கள். அவள் அழகில் மயங்கிய இரு அசுரர்கள், தனக்கு மட்டுமே திலோத்துமை கிடைக்க வேண்டும் என்று எண்ணி போர் புரிந்தார்கள். அதனால் இருவரும் மாண்டார்கள். [2]

கருவி

[தொகு]
  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=11251 திலோத்தமா என்றால் என்ன அர்த்தம்?
  2. http://temple.dinamalar.com/news_detail.php?id=6004 மகாபாரதம் பகுதி-33

இன்றும் இனிக்கும் இதிகாசம் 12 - திருப்பூர் கிருஷ்ணன் (தினகரன்)

காண்க

[தொகு]

ஆதாரம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலோத்தமை&oldid=3802397" இலிருந்து மீள்விக்கப்பட்டது