அப்சரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்சராவின் மணற்கல் சிற்பம் ஒன்று (மத்தியப் பிரதேசம், இந்தியா)

அப்சராக்கள் எனப்படுபவர்கள் இந்து, பௌத்தப் பழங்கதைகளில் வரும் பெண்கள். இவர்கள் அழகாகவும் தெய்வீக ஆற்றல் பெற்றவர்களாகவும் இருப்பர். இவர்கள் காந்தர்வர்களின் மனைவியர் ஆவர். சிறப்பாக நடனமாட வல்லவர்களான இவர்கள் கடவுளரின் சபையில் தம் கணவர்களது இசைக்கேற்ப நடனமாடுவர். இவர்கள் தாம் விரும்பியபடி தமது உருவத்தை மாற்றிக்கொள்ள முடியும் என்று கருதப்படுகிறது. ஊர்வசி, ரம்பை, மேனகை, திலோத்தமை ஆகியோர் நன்கு அறியப்பட்ட அப்சரசுகள். அப்சரசுகள் லவுகீக (பொருளுலக), தெய்வீக (கடவுள் தன்மையுடைய) அப்சரசு என இருவகையாகக் குறிக்கப்படுகின்றனர்.[சான்று தேவை]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்சரா&oldid=2593139" இருந்து மீள்விக்கப்பட்டது