உள்ளடக்கத்துக்குச் செல்

மூருட்டு மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மூருட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மூருட்டு மக்கள்
Murut People
Orang Murut
மான்சோபியாட் கலாசார கிராமத்தில் பாரம்பரிய உடையில் ஒரு மூருட்டு மனிதர்
மொத்த மக்கள்தொகை
120,000
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 மலேசியா
சபா லபுவான்: 100,631 (2010)
சரவாக்: 9,500 (1980)
 இந்தோனேசியா
நுனுக்கான், வடக்கு கலிமந்தான்: 56 513 (2016), கிழக்கு கலிமந்தான்
 புரூணை
தெம்புரோங் மாவட்டம்
மொழி(கள்)
மூருட்டு மொழி; ஆங்கிலம்; புரூணை மலாய்; இந்தோனேசிய மொழி (கலிமந்தான்);
சமயங்கள்
கிறிஸ்தவம் (80%), இசுலாம் (18%), ஆன்ம வாதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
டயாக் மக்கள், திடோங் மக்கள் கெலாபிட், காயான் மக்கள், கென்னியா, மெலனாவ், லுன் பாவாங், பிடாயூ, பெனான், புனான், தகால், ஓராங் உலு, ஆஸ்திரோனீசிய மக்கள்

மூருட்டு மக்கள் அல்லது மூருட் (மலாய்: Kaum Murut அல்லது Bangsa Murut; ஆங்கிலம்: Murut; சீனம்: 穆鲁特) என்பவர்கள் தென்கிழக்கு ஆசியா, நாடுகளில் வாழும் பூர்வீகப் பழங்குடி மக்களாகும். முக்கியமாக இவர்களை மலேசியாவின், சபா, சரவாக் மாநிலங்கள்; புரூணை; இந்தோனேசியாவின் கலிமந்தான் உள்ளிட்ட இடங்களில் காணலாம்.[1]

போர்னியோவின் வடக்கு உள்நாட்டுப் பகுதிகளில் வசிக்கும் 29 துணை இனக் குழுக்களில் (Sub-ethnic Groups) மூருட்டு மக்களும் ஒரு குழுவினர் ஆகும். மூருட்டு மக்கள் பேசும் மூருட்டு பேச்சு மொழிகள் (Murutic Languages) என்பது ஆசுத்திரோனேசிய மொழிகளுக்குள் (Austronesian Languages) வகைப்படுத்தப் பட்டுள்ளன. மூருட்டு என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு ’மலை மக்கள்’ என்பதாகும்.[2]

மக்கள் தொகையியல்

[தொகு]

மூருட்டு சமூகங்களில் பெரும் பகுதியினர் சபா, கிழக்கு மலேசியாவின் தென்மேற்கு உள்பகுதியில் உள்ளனர். குறிப்பாக சபுலுட் ஆறு (Sapulut) மற்றும் படாஸ் ஆறு (Padas) ஆகியவற்றின் கரையோர மாவட்டங்களான கெனிங்காவ் மாவட்டம் (Keningau District), தெனோம் மாவட்டம் (Tenom District), நாபாவான் மாவட்டம் (Nabawan District) மற்றும் பியூபோர்ட் மாவட்டம் (Beaufort District) ஆகிய மாவட்டங்களில் உள்ளனர்.[3]

சரவாக் எல்லைப் பகுதிகளில், குறிப்பாக லாவாஸ் மாவட்டம் (Lawas District) மற்றும் லிம்பாங் பிரிவு (Limbang Division) பகுதிகளைச் சுற்றிலும் வாழும் மூருட் மக்களை தாகல் மக்கள் (Tagal People) என்று அழைக்கின்றனர்.

புருணை மூருட் மக்கள்

[தொகு]

இந்தோனேசியாவைப் பொருத்த வரையில், வடக்கு கலிமந்தான் பகுதியில் மலினாவ் (Malinau Regency) மற்றும் நுனுக்கான் (Nunukan Regency) மாவட்டங்களில் அதிகமாக உள்ளனர். புரூணை நாட்டிலும் கணிசமான அளவில் வாழ்கின்றனர்.

புருணையில் உள்ள மூருட் மக்கள் தெம்புராங் மாவட்டத்தில் (Temburong District) அதிகமாகக் காணப் படுகின்றனர். அவர்கள் அங்கு லுன் பாவாங் (Lun Bawang) என்று அழைக்கப் படுகிறார்கள். இவர்கள் ஒரு காலத்தில் புரூணை சுல்தான்களுக்கு இராணுவ ஆற்றலை வழங்கி உள்ளனர். அண்மைய ஆண்டுகளில் இவர்களின் மக்கள் தொகை குறைந்து வருகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. William W. Bevis (1995). Borneo Log: The Struggle For Sarawak's Forests. University of Washington Press. p. 152. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-2959-7416-8.
  2. "East-Kalimantan 48 Tribes". IndonesiaTraveling.com. Archived from the original on 2016-08-04. பார்க்கப்பட்ட நாள் 2023-01-07.
  3. "Murut comprise of subgroups such as Baukan, Gana', Kalabakan, Okolod, Paluan, Sulangai, Serudung, Tagal, Timugon and the Beaufort and Keningau Murut". www.sta.my. Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 7 January 2023. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

[பகுப்பு:தென்கிழக்காசிய இனக்குழுக்கள்]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூருட்டு_மக்கள்&oldid=4110591" இலிருந்து மீள்விக்கப்பட்டது