உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசியாவின் மாநில அரசுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசியாவின் மாநில அரசுகள் (மலாய்: Kerajaan-kerajaan Negeri di Malaysia; ஆங்கிலம்: State Governments in Malaysia; சீனம்: 马来西亚州政府) என்பது மலேசியா கூட்டமைப்பின் 13 மாநிலங்களை ஆளும் அரசாங்கங்கள் ஆகும். அனைத்து 13 மாநிலங்களும் வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறையை பின்பற்றுகின்றன. ஒவ்வொரு மாநில அரசும் தனி ஓர் ஒற்றையாட்சி மாநிலச் சட்டமன்றத்தைக் கொண்டுள்ளன.

மலாயா மாநிலங்கள் மாநில ஆட்சிக்குழுக்களால் நடத்தப்படுகின்றன. சபா மாநிலம் அதற்கென தனி ஒரு சட்டமன்றத்தைக் கொண்டுள்ளது. சரவாக் மாநிலம் அதற்கென தனி ஒரு அமைச்சரவையைக் கொண்டுள்ளது. சரவாக் மாநிலத்தின் முதல்வர் சரவாக் பிரதமர் என்று அழைக்கப்படுகிறார்.

இருப்பினும் அனைத்து 13 மாநிலங்களிலும் உள்ள மாநில அரசு அமைப்புகள், மலேசிய நடுவண் அரசாங்கத்தின் மக்களாட்சி அமைப்பைப் போன்றதாகும்; மலேசிய மாநிலங்களின் சட்டமன்றங்கள், ஓரவை முறைமையை மட்டுமே கொண்டுள்ளன.

மாநிலத்தின் தலைவர்கள்

[தொகு]

மலாயா மற்றும் போர்னியோ மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும், அந்த மாநிலத்தின் தலைவர் ஓர் ஆட்சியாளர் அல்லது ஓர் ஆளுநர் என அறியப்படுகிறார்.

ஆட்சியாளர்கள்

[தொகு]

ஆளுநர்கள்

[தொகு]

அனைத்து 13 மாநிலங்களின் தலைவர்களும் மலேசிய ஆட்சியாளர்களின் பேரவையில் உள்ளடக்கியவர்கள்; எனினும், மலாயா மாநிலங்களைச் சேர்ந்த 9 மலாய் ஆட்சியாளர்கள் மட்டுமே யாங் டி பெர்துவான் அகோங் எனும் மலேசியப் பேரரசர் பதவிக்குத் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

மாநிலத்தின் முதலமைச்சர்

[தொகு]

மலாய் ஆட்சியாளர்களைக் கொண்ட மாநிலங்களில், அரசாங்கத் தலைவர் மந்திரி பெசார் (Menteri Besar) என்று அழைக்கப்படுகிறார்.[4]

மலாய் ஆட்சியாளர்கள் இல்லாத மாநிலங்களில், அரசாங்கத் தலைவர் ஆங்கிலத்தில் முதல்வர் (Chief Minister) என்றும்; மலாய் மொழியில் கெத்துவா மந்திரி (Ketua Menteri) என்றும் அறியப்படுகிறார். சரவாக் மாநிலத்தில், அரசாங்கத்தின் தலைவர், பிரதமர் (Premier) என்று அழைக்கப்படுகிறார்.[5]

மாநில அரசுகள்

[தொகு]

மலேசியாவில் உள்ள மாநில அரசுகள்:

  • - (ஜொகூர் அரசு)
  • - (கெடா அரசு)
  • - (கிளாந்தான் அரசு)
  • - (மலாக்கா அரசு)
  • - (நெகிரி செம்பிலான் அரசு)
  • - (பகாங் அரசு)
  • - (பினாங்கு அரசு)
  • - (பேராக் அரசு)
  • - (பெர்லிஸ் அரசு)
  • - (சபா அரசு)
  • - (சரவாக் அரசு)
  • - (சிலாங்கூர் அரசு)
  • - (திராங்கானு அரசு)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Section 19A, Eighth Schedule, Federal Constitution of Malaysia" (PDF). Archived from the original (PDF) on 10 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 29 February 2020.
  2. "Yang di-Pertua Negeri". Sabah Government. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.
  3. Milne, R. S. (1963). "Malaysia: A New Federation in the Making". Asian Survey 3 (2): 76–82. doi:10.2307/3023678. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-4687. https://www.jstor.org/stable/3023678. 
  4. Jeong Chun Hai @ Ibrahim, & Nor Fadzlina Nawi. (2012). Principles of Public Administration: Malaysian Perspectives. Kuala Lumpur: Pearson Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-967-349-233-6
  5. Lim, Louisa (9 April 2011). "That Effing Show: New twist to comedy". The Star (Malaysia) இம் மூலத்தில் இருந்து 10 April 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110410224020/http://thestar.com.my/lifestyle/story.asp?file=%2F2011%2F4%2F9%2Flifefocus%2F8383277&sec=lifefocus. 

வெளி இணைப்புகள்

[தொகு]

{{யாங் டி பெர்துவா நெகிரி}