உள்ளடக்கத்துக்குச் செல்

பினாங்கு மாநில ஆட்சிக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பினாங்கு மாநில ஆட்சிக்குழு
Penang State Executive Council
Majlis Mesyuarat Kerajaan Negeri Pulau Pinang
2023––தற்போது
உருவான நாள்13 ஆகஸ்டு 2023
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்சாவ் கொன் யாவ்
Chow Kon Yeow
பாக்காத்தான் அரப்பான் (PH); ஜனநாயக செயல் கட்சி (DAP)
நாட்டுத் தலைவர்அகமத் புசி அப்துல் ரசாக்
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை11
சட்ட மன்றத்தில் நிலைகூட்டணி அரசு
29 / 40
எதிர் கட்சி
எதிர்க்கட்சித் தலைவர்முகமத் பவுசி யூசோப்
(PN–PAS)
வரலாறு
Legislature term(s)15-ஆவது

பினாங்கு மாநில ஆட்சிக்குழு (ஆங்கிலம் Penang State Executive Council; மலாய்: Majlis Mesyuarat Kerajaan Negeri Pulau Pinang) என்பது மலேசியா பினாங்கு மாநில அரசாங்கத்தின் நிர்வாக ஆட்சிக்குழுவாகும். பினாங்கு ஆளுநர் அவர்களால் நியமிக்கப்பட்ட பினாங்கு முதலமைச்சர் (Chief Minister of Penang) இந்த ஆட்சிக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். அவர் பினாங்கு மாநில சட்டமன்றத்தில் (Penang State Legislative Assembly) பெரும்பான்மையைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

இந்த ஆட்சிக்குழு மலேசிய அமைச்சரவை கட்டமைப்பைப் போன்றதாகும். ஆனாலும் இந்த ஆட்சிக்குழு அளவில் சிறியது. கூட்டாட்சி நடுவண் அரசாங்கத்தின் பொறுப்புகளும், மாநில அரசாங்கத்தின் பொறுப்புகளும் வேறுபடுவதால்; மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலேயும் பல துறைகளும் மாறுபடுகின்றன.

ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பினாங்கு முதலமைச்சரால் தேர்ந்தெடுக்கப்பட்டு பினாங்கு ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்கள். ஆட்சிக்குழுவிற்கு அமைச்சுகள் இல்லை, மாறாக பல குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவும் மாநில விவகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பல்வகைத துறைகளைக் கவனித்துக் கொள்ளும். ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் வழக்கமாக ஒரு குழுவின் தலைவராக இருப்பார்கள். ஆட்சிக்குழுவில் மாநிலச் செயலாளர், மாநில சட்ட ஆலோசகர் மற்றும் மாநில நிதி அதிகாரி ஆகியோரும் இடம் பெறுகிறார்கள்.

அலுவல் சார்ந்த அரசு உறுப்பினர்கள்

[தொகு]
அரசாங்கப் பதவி பெயர் குறிப்பு
அப்துல் ரசாக் பின் ஜாபர் மாநிலச் செயலாளர் [1]
நோராசுமி பின் முகமது நராவி மாநிலச் சட்ட ஆலோசகர் [2]
முகமது பராசி பின் ஜொகாரி மாநில நிதி அதிகாரி [3]

உறுப்பினர்களின் பட்டியல்

[தொகு]

சாவ் கொன் யாவ் II ஆட்சிக்குழு

[தொகு]
     பாக்காத்தான் அரப்பான் (10)      பாரிசான் நேசனல் (1)

13 ஆகஸ்டு 2023 முதல் உறுப்பினர்கள்: :[4]

பெயர் துறை கட்சி தொகுதி தொடக்கம் முடிவு
சாவ் கொன் யாவ்
15-ஆவது மக்களவை
(முதலமைச்சர்)
  • நிதி
  • பொருளாதார வளர்ச்சி
  • நில
  • தொடர்புகள்
பாக்காத்தான்
(ஜசெக)
பாடாங் கோத்தா 13 ஆகஸ்டு 2023 நடப்பில் உள்ளது
முகமது அப்துல் அமீது
(Mohamad Abdul Hamid)
(துணை முதலமைச்சர் I)
  • இசுலாமிய வளர்ச்சி
  • கல்வி
  • தேசிய ஒற்றுமை
பாக்காத்தான்
(மக்கள் நீதிக் கட்சி)
பத்து மாவுங் 16 ஆகஸ்டு 2023
சகடீப் சிங் தியோ
(Jagdeep Singh Deo )
(துணை முதலமைச்சர் II)
  • மனித மூலதன வளர்ச்சி
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
பாக்காத்தான்
(ஜனநாயக செயல் கட்சி|ஜசெக)
டத்தோ கிராமட்
வாங் கோன் வாய்
(Wong Hon Wai)
  • சுற்றுலா
  • ஆக்கப்பூர்வ பொருளாதாரம்
பாயா தெருபோங்
சைரி கிர் ஜொகாரி
(Zairil Khir Johari)
  • உள்கட்டமைப்பு
  • போக்குவரத்து
  • இலக்கவியல் வளர்ச்சி
தஞ்சோங் பூங்கா
லிம் சியூ கிம்
(Lim Siew Khim)
  • சமூக வளர்ச்சி
  • நலன்
  • இசுலாம் அல்லாத மத விவகாரங்கள்
சுங்கை பினாங்கு
டேனியல் கூய் சி சென்
(Daniel Gooi Zi Sen)
  • இளைஞர்கள்
  • விளையாட்டு
  • உடல் நலம்
பாடாங் லாலாங்
ஜேசன் ஆங் மூய் லாய்
(Jason H'ng Mooi Lye)
  • உள்ளாட்சி
  • நகரம் மற்றும் நாடு திட்டமிடல்
Jawi
சுந்தராஜூ சோமு
(Sundarajoo Somu)
  • வீடு
  • சுற்றுச்சூழல்
பிறை
பாமி சைனோல்
(Fahmi Zainol)
  • வேளாண் தொழில்நுட்பம் மற்றும் உணவு பாதுகாப்பு
  • கூட்டுறவு வளர்ச்சி
பாக்காத்தான்
(பிகேஆர்)
செரஜாக்
ரசீத் சினோல்
(Rashidi Zinol)
  • வர்த்தகம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு
  • கிராமப்புற வளர்ச்சி
பாரிசான் நேசனல்
(அம்னோ)
சுங்கை ஆச்சே

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ":: iDirektori : Ketua Jabatan". idirektori.penang.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2018-05-15.
  2. ":: iDirektori : Penasihat Undang-undang Negeri Pejabat Penasihat Undang-Undang". idirektori.penang.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2018-05-15.
  3. ":: iDirektori : Ketua Jabatan". idirektori.penang.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2018-05-15.
  4. "State polls: Chow sworn in as Penang CM for second term". The Star. 13 August 2023. பார்க்கப்பட்ட நாள் 13 August 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]