சபா அமைச்சரவை
சபா அமைச்சரவை Cabinet of Sabah Kabinet Negeri Sabah | |
---|---|
2023–தற்போது | |
சபா மாநிலச் சின்னம் | |
உருவான நாள் |
|
மக்களும் அமைப்புகளும் | |
அரசுத் தலைவர் | அஜிஜி நூர் |
நாட்டுத் தலைவர் | சபா ஆளுநர் |
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை | 11 |
சபா அமைச்சரவை (ஆங்கிலம் Cabinet of Sabah; மலாய்: Kabinet Negeri Sabah என்பது மலேசியா சபா மாநில அரசாங்க நிர்வாக ஆட்சிக்குழுவாகும். சபா அரசாங்கத்தின் நிர்வாகப் பிரிவின் ஒரு பகுதியாகச் செயல்படும் இந்த ஆட்சிக்குழு மாநில அமைச்சரவை என அழைக்கப்படுகிறது. மலேசிய மாநிலங்களில் சபா, சரவாக் மாநிலங்களில் மட்டும் மாநில ஆட்சிக் குழுவை மாநில அமைச்சரவை என அழைக்கிறார்கள்.
சபா ஆளுநர் அவர்களால் நியமிக்கப்படும் சபா முதலமைச்சர்; சபா மாநிலத்தின் அமைச்சரவைக்குத் தலைமை தாங்குகிறார். சபா முதலமைச்சர் என்பவர், சபாமாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றவராக இருக்க வேண்டும். மாநில அமைச்சரவையில் மாநிலச் செயலாளர், மாநில சட்ட ஆலோசகர் மற்றும் மாநில நிதி அதிகாரி ஆகியோரும் இடம் பெறுகிறார்கள்.
பொது
[தொகு]சபா அமைச்சரவை என்பது மலேசிய நடுவண் அரசாங்கத்தின் மலேசிய அமைச்சரவை கட்டமைப்பைப் போன்றதாகும். ஆனாலும் மாநில அமைச்சரவை அளவில் சிறியது. மலேசிய நடுவண் அரசாங்கத்தின் பொறுப்புகளும், மாநில அரசாங்கத்தின் பொறுப்புகளும் வேறுபடுவதால்; மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான பல துறைகளும் மாறுபடுகின்றன.
சபா அமைச்சரவை உறுப்பினர்கள் சபா முதலமைச்சரால் தேர்ந்தெடுக்கப்பட்டு சபா ஆளுநரால் நியமிக்கப் படுகிறார்கள். ஒவ்வோர் அமைச்சருக்கும் ஓர் அமைச்சு உண்டு. ஒவ்வோர் அமைச்சும் மாநில விவகாரங்கள், மாநிலச் செயல்பாடுகள் மற்றும் பல்வகை மாநிலத் துறைகளைக் கவனித்துக் கொள்ளும். அமைச்சரவை உறுப்பினர் வழக்கமாக ஒரு மாநில அமைச்சின் தலைவராக இருப்பார்.
அமைச்சர்களின் பட்டியல்
[தொகு]சனவரி 11, 2023 நிலவரப்படி, தற்போதைய அமைச்சரவையின் அமைப்பு பின்வருமாறு:[1]
அஜிஜி நூர் அமைச்சரவை | ||||
அமைச்சர் | பதவி | அமைச்சு | பதவியேற்பு | |
---|---|---|---|---|
அஜிஜி நூர் சுலமான் சட்டமன்றத் தொகுதி]] |
முதலமைச்சர் | முதலமைச்சர் துறை | 29 செப்டம்பர் 2020 | |
ஜெப்ரி கித்திங்கான் தம்புனான் சட்டமன்றத் தொகுதி |
துணை முதலமைச்சர் I விவசாயம், மீன்பிடி மற்றும் உணவுத் தொழில்துறை அமைச்சர் |
விவசாயம், மீன்பிடி மற்றும் உணவுத் தொழில்துறை அமைச்சு | 11 சனவரி 2023 (துணை முதலமைச்சர்) 29 செப்டம்பர் 2020 (விவசாயம், மீன்பிடி மற்றும் உணவுத் தொழில்துறை அமைச்சர்) | |
ஜோகிம் குன்சலம் குண்டசாங் சட்டமன்றத் தொகுதி |
துணை முதலமைச்சர் II உள்ளாட்சி மற்றும் வீட்டு வசதி அமைச்சர் |
உள்ளாட்சி மற்றும் வீட்டு வசதி அமைச்சு | 11 சனவரி 2023 | |
சால்மி யகயா தஞ்சோங் கிராமட் சட்டமன்றத் தொகுதி |
துணை முதலமைச்சர் III பணி அமைச்சர் |
பணி அமைச்சு | 11 சனவரி 2023 | |
மசிடி மஞ்சுன் கரானான் சட்டமன்றத் தொகுதி |
நிதி அமைச்சர் | நிதி அமைச்சு | 11 சனவரி 2023 | |
சகிட் சகிம் தம்பாருலி சட்டமன்றத் தொகுதி |
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் | ஊரக வளர்ச்சி அமைச்சு | 29 செப்டம்பர் 2020 | |
முகமது ஆரிபின் முகமது ஆரிப் மெம்பாக்குட் சட்டமன்றத் தொகுதி |
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சர் | அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு | 11 சனவரி 2023 | |
எல்ரோன் ஆல்பிரட் விண்ட் சூக் சட்டமன்றத் தொகுதி |
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் | இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு | 29 செப்டம்பர் 2020 | |
ஜேம்ஸ் ரதீப் சுகுட் சட்டமன்றத் தொகுதி |
சமூக மேம்பாடு மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் | சமூக அபிவிருத்தி மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சு | 11 சனவரி 2023 | |
கிறிஸ்டினா லியூ அப்பி அப்பி சட்டமன்றத் தொகுதி |
சுற்றுலா, கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் | சுற்றுலா, கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு | 11 சனவரி 2023 | |
பூங் ஜின் செ லுயாங் சட்டமன்றத் தொகுதி |
தொழில்துறை வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் | தொழில்துறை வளர்ச்சி மற்றும் தொழில்முனைவோர் அமைச்சு | 11 சனவரி 2023 |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Correspondent, Hazlin HassanMalaysia (2023-01-11). "Sabah chief minister reshuffles Cabinet after political coup attempt" (in en). The Straits Times. https://www.straitstimes.com/asia/se-asia/sabah-chief-minister-reshuffles-cabinet-after-political-coup-attempt.