மே 26: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
|||
வரிசை 46: | வரிசை 46: | ||
*[[1999]] – [[நா. கோவிந்தசாமி]], சிங்கப்பூர் கணினி அறிஞர், எழுத்தாளர் |
*[[1999]] – [[நா. கோவிந்தசாமி]], சிங்கப்பூர் கணினி அறிஞர், எழுத்தாளர் |
||
*[[2004]] – [[நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக்]], உருசிய வானியலாளர் (பி. [[1931]]) |
*[[2004]] – [[நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக்]], உருசிய வானியலாளர் (பி. [[1931]]) |
||
*[[2014]] – [[ராதா ஜெயலட்சுமி|ஜெயலட்சுமி]], இந்திய கருநாடக இசைப் பாடகி, திரைப்படப் பின்னணிப் பாடகி |
*[[2014]] – [[ராதா ஜெயலட்சுமி|ஜெயலட்சுமி]], இந்திய கருநாடக இசைப் பாடகி, திரைப்படப் பின்னணிப் பாடகி (பி. [[1932]]) |
||
<!-- Please do not add yourself or anyone else without a biography in Wikipedia to this list.--> |
<!-- Please do not add yourself or anyone else without a biography in Wikipedia to this list.--> |
||
16:33, 25 மே 2017 இல் நிலவும் திருத்தம்
<< | மே 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXXIV |
மே 26 (May 26) கிரிகோரியன் ஆண்டின் 146 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 147 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 219 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1293 – ஜப்பான் கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1538 – ஜோன் கால்வின் மற்றும் அவரது சீடர்கள் ஜெனீவா நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கால்வின் அடுத்த மூன்றாண்டுகள் பிரான்சின் ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் வாழ்ந்தார்.
- 1637 – பீக்குவாட் போர்: புரொட்டஸ்தாந்து, மொஹீகன் படைகள் ஜெர்மன் தளபதி ஜோன் மேசன் தலைமையில் ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட்டில் பீக்குவாட் இனத்தவர்களின் ஊர் ஒன்றைத் தாக்கி ஐநூறுக்கும் மேற்பட்ட அமெரிக்கப் பழங்குடியினரைக் கொன்றனர்.
- 1838 – கண்ணீர்த் தடங்கள்: ஐக்கிய அமெரிக்காவில் செரோக்கீ பழங்குடிகளின் கட்டாயக் குடியகல்வின் போது 4,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1879 – ஆப்கானிஸ்தான் அரசை உருவாக்க கண்டமாக் உடன்பாட்டில் ரஷ்யாவும் ஐக்கிய இராச்சியமும் கைச்சாத்திட்டன.
- 1896 – இரண்டாம் நிக்கலாசு உருசியாவின் சார் மன்னனாக முடி சூடினான்.
- 1912 – இலங்கையில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.
- 1917 – இலினொய்யில் நிகழ்ந்த சூறாவளியின் தாக்கத்தினால் 101 பேர் கொல்லப்பட்டு 689 பேர் காயமடைந்தனர்.
- 1918 – ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.
- 1958 – இனக்கலவரம் கொழும்புக்குப் பரவியது. தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.
- 1966 – பிரித்தானிய கயானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- 1969 – அப்பல்லோ 10 விண்கலம் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு பூமி திரும்பியது.
- 1971 – வங்காளதேச விடுதலைப் போர்: பாக்கித்தானிய இராணுவத்தினர் வங்காளதேசம், சில்கெட் பகுதியில் 71 இந்துக்களைப் படுகொலை செய்தனர்.
- 1972 – அமெரிக்கத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன், சோவியத் தலைவர் லியோனிது பிரெசுநேவ் ஆகியோர் கண்டந்தாவு ஏவுகணைத் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
- 1983 – சப்பானைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஆழிப்பேரலையை உண்டு பண்ணியதால் 104 பேர் கொல்லப்பட்டனர்.
- 1987 – யாழ்ப்பாணம் வடமராட்சியில் இலங்கை ஆயுதப்படையினரின் ஒப்பரேஷன் லிபரேஷன் ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.
- 1991 – தாய்லாந்தின் விமானம் ஒன்று வெடித்ததில் 223 பேர் கொல்லப்பட்டனர்.
- 2002 – மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது.
- 2006 – ஜாவாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 5,700 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.
பிறப்புகள்
- 1844 – மகா வைத்தியநாதையர், தமிழக கருநாடக இசைக் கலைஞர் (இ. 1893)
- 1874 – புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் லாரா, கொலொம்பிய கத்தோலிக்க அருட்சகோதரி, புனிதர் (இ. 1949)
- 1907 – ஜான் வெயின், அமெரிக்க நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1979)
- 1928 – சுகுமார் அழீக்கோடு, மலையாள எழுத்தாளர், மெய்யியலாளர் (இ. 2012)
- 1937 – மனோரமா, தமிழகத் திரைப்பட, நாடக நடிகை, பாடகி (இ. 2015)
- 1944 – அந்தனி ஜீவா, இலங்கை மலையக எழுத்தாளர்
- 1945 – விலாஸ்ராவ் தேஷ்முக், மகாராட்டிராவின் 17வது முதலமைச்சர் (இ. 2012)
- 1949 – வார்டு கன்னிங்காம், விக்கியை வடிவமைத்த அமெரிக்கக் கணினியியலாளர்
- 1951 – சாலி றைட், அமெரிக்க இயற்பியலாளர், விண்வெளி வீராங்கனை (இ. 2012)
இறப்புகள்
- 735 – பீட், ஆங்கிலேய வரலாற்றாளர், மதகுரு, இறையியலாளர் (பி. 672)
- 1703 – சாமுவேல் பெப்பீசு, ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1633)
- 1908 – மிர்சா குலாம் அகமது, இந்திய இசுலாமியத் தலைவர், அகமதியா இயக்கத்தை ஆரம்பித்தவர் (பி. 1835)
- 1967 – மா. இராசமாணிக்கனார், தமிழகத் தமிழறிஞர், வரலாற்றாசிரியர் (பி. 1907)
- 1979 – எஸ். எம். சுப்பையா நாயுடு, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1914)
- 1989 – கா. அப்பாத்துரை, தமிழகத் தமிழறிஞர், மொழியியலாளர் (பி. 1907)
- 1999 – நா. கோவிந்தசாமி, சிங்கப்பூர் கணினி அறிஞர், எழுத்தாளர்
- 2004 – நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக், உருசிய வானியலாளர் (பி. 1931)
- 2014 – ஜெயலட்சுமி, இந்திய கருநாடக இசைப் பாடகி, திரைப்படப் பின்னணிப் பாடகி (பி. 1932)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (சியார்சியா)
- விடுதலை நாள் (கயானா, 1966)
- அன்னையர் நாள் (போலந்து)
- தேசிய மன்னிப்பு நாள் (ஆத்திரேலியா)