கா. அப்பாத்துரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கா. அப்பாத்துரை
பிறப்பு(1907-06-24)சூன் 24, 1907
குமரி, ஆரல்வாய்மொழி
இறப்புமே 26, 1989(1989-05-26) (அகவை 82)
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்பன்மொழிப்புலவர்

கா. அப்பாத்துரை (24 சூன் 1907 – 26 மே 1989) தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநர்களுள் ஒருவரும் பன்மொழிப்புலவர் எனப் பெயர் பெற்றவரும் ஆவார். அப்பாத்துரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை இருந்தது. தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் ஒரே ஆண்டில் முதுகலைத் தேர்ச்சி பெற்றார். இந்தி மொழியில் விசாரத் பட்டம் பெற்றார். இவை தவிர இன்னும் பல வேற்று மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார். இதனாலேயே அறிஞர் பெருமக்கள் அவருக்குப் "பன்மொழிப்புலவர்" என்ற பட்டத்தைச் சூட்டினார்கள்.

அப்பாத்துரையார் குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் பிறந்தார். இவர் எழுதிய நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நூல்களுள் குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு மற்றும் தென்னாட்டுப் போர்க்களங்கள் ஆகியவை தலையாயனவாகக் கருதப்படுகின்றன. தமிழும் தமிழரினமுமே உலக மொழிகளுக்கும் மனித இனத்திற்கும் முன்னோடிகள் என்னும் தனது கோட்பாட்டை அறிவியற்பூர்வமாகத் தனது ஆய்வுகள் மூலம் முன்வைத்தார்.

எழுதிய நூல்கள்[தொகு]

 1. குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு
 2. தென்னாட்டுப் போர்க்களங்கள்
 3. ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் (மொழிபெயர்ப்பு)
 4. கிருஷ்ணதேவ ராயர்
 5. வெற்றித் திருநகர்
 6. காற்றும் மழையும் (நாடகம்) (சிலம்பு நாடக மன்றத்தால் சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் அண்ணாதுரை தலைமையில் 22-4-56ஆம் நாள் அரங்கேற்றப்பட்டது) [1]
 7. சரித்திரம் பேசுகிறது; 1955 செப்டம்பர்; அருணோதயம், சென்னை.
 8. மருதூர் மாணிக்கம்; 1955; அருணோதயம், சென்னை
 9. தென்னாடு, 1954 செப்டம்பர், மலர்நிலையம், சென்னை.
 10. ஷேக்ஸ்பியர் கதைகள் - 1; 1941; திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை. (உள்ளடக்கம்: வெனிஸ் வணிகன் (The Merchant of Venice), விரும்பிய வண்ணமே (As You Like It), மாக்பெத் (Macbeth).)
 11. ஷேக்ஸ்பியர் கதைகள் - 2; 1941; திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை. (உள்ளடக்கம்: புயற்காற்று (The Tempest), லியர் மன்னன் (King Lear), ஹாம்லத் (Hamlet.)
 12. ஷேக்ஸ்பியர் கதைகள் - 3; 1941; திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.(உள்ளடக்கம்: நடுவேனிற்கனவு (A Midsummer Night's Dream) சிம்பலின் (Cymbeline), கார்காலக் கதை (The Winter's Tale), ஒதெல்லோ (Othello).)
 13. ஷேக்ஸ்பியர் கதைகள் - 4; 1941; திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை. (உள்ளடக்கம்: பன்னிரண்டாம் இரவு (Twelfth Night), சிறு பிழையால் நேர்ந்த பெருந்தொல்லை (Much Ado About Nothing), சரிக்குச் சரி (Measure for Measure), ரோமியோவும் ஜூலியட்டும் (Romeo and Juliet).)
 14. ஷேக்ஸ்பியர் கதைகள் - 5; திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை
 15. ஷேக்ஸ்பியர் கதைகள் - 6; திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை
 16. ஷேக்ஸ்பியர் கதைகள் - 7; 1945; திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை; 130 பக்கங்கள்; (உள்ளடக்கம்: நான்காம் ஹென்றி (Henry IV), மன்னன் ஜான் (Kind John), அதேன்ஸ் நகர்ச்செல்வன் தைமன் (Timon of Athens), காதற்சீரழிவு (Love's Labours Lost).)
 17. ஷேக்ஸ்பியர் கதைகள் - 8; 1945; திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை;

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

தளத்தில்
கா. அப்பாத்துரை எழுதிய
 1. திராவிடநாடு (இதழ்) நாள்:8-4-1956, பக்கம் 15
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._அப்பாத்துரை&oldid=3482016" இலிருந்து மீள்விக்கப்பட்டது