உள்ளடக்கத்துக்குச் செல்

சில்ஹெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சில்ஹெட்
সিলেট
சில்ஹெட் நகரம்
சில்ஹெட் நகரம்
நாடு வங்காளதேசம்
கோட்டம்சில்ஹெட் கோட்டம்
மாவட்டம்சில்ஹெட் மாவட்டம்
பெருநகர் பகுதி நகரம்31 மார்ச் 2009[1]
சில்ஹெட் மாநகராட்சி9 ஏப்ரல் 2001
நகராட்சி வாரியம்1867
அரசு
 • வகைநகரத்தந்தை-நகரமன்றம்
 • நிர்வாகம்சில்ஹெட் மாநகராட்சி
 • நகரத்தந்தைஅரிஃபுல் அக் சௌத்திரி
பரப்பளவு
 • மொத்தம்26.50 km2 (10.23 sq mi)
ஏற்றம்
35 m (115 ft)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்4,32,106
 • அடர்த்தி17,479/km2 (45,270/sq mi)
 • மக்களினம்[2]
94% வங்காளதேசத்தவர்
5% பிறர்
1% மணிப்பூரி காசி இனத்தவர்
Demographics
 • LanguagesSylheti Bengali, Standard Bengali
 • Literacy rate71.84%[3]
நேர வலயம்ஒசநே+6 (BST)
அஞ்சல் குறியீடு
3100
இணையதளம்sylhetcitycorporationbd.com

சில்ஹெட் (Sylhet,வங்காள மொழி: সিলেট சிலெட்டு) அல்லது ஜலாலாபாத் வங்காளதேசத்தின் வடகிழக்கில் அமைந்துள்ள ஓர் முதன்மை நகர்புறப் பகுதியாகும். இது "அசரத் ஷாஜலால் நகரம்" என்றும் அழைக்கப்படுகிறது. இது வங்காளதேசத்தின் மிகச் செல்வச்செழிப்பான நகரங்களில் ஒன்றாகும். சில்ஹெட் மாவட்டம் மற்றும் சில்ஹெட் கோட்டத்தின் நிர்வாக தலைநகரமாகவும் விளங்குகிறது. இந்த நகரம் சூர்மா ஆற்றங்கரையில் சூர்மா பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இதன் மக்கள்தொகை 500,000 ஆகும்.

வங்காளதேசத்தில் இது ஐந்தாவது பெரிய நகரமாகும். இங்கு வங்காளத்திலும் தெற்காசிய துணைக்கண்டத்திலும் மிகவும் மதிக்கப்படுகின்ற சுஃபிக்கள் ஷா ஜலால் மற்றும் ஷா பாரென் தர்காக்கள் அமைந்துள்ளன. இவற்றிற்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.[4] சில்ஹெட் மழைக்காடுகளும் அருவிகளும், குன்றுகளும் ஆற்றுப் பள்ளத்தாக்கும் அடங்கிய இயற்கையழகிற்காகவும் பெயர் பெற்றது.

வங்காளதேசத்தின் தேயிலைத் தோட்டங்கள் மிகுந்த பகுதியில் அமைந்துள்ள சில்ஹெட்டில் தேயிலை முக்கியத் தொழிலாக இருக்கிறது. வங்காளதேசத்தின் எண்ணெய்/இயற்கைவாயு மையமாகவும் சில்ஹெட் விளங்குகிறது. வரலாற்றின்படி சில்ஹெட் வங்காளம் மற்றும் அசாமின் பல்வேறு இராச்சியங்கள்/சுல்தானியகங்களின் அங்கமாக இருந்துள்ளது. பிரித்தானிய ஆட்சியில், வடகிழக்கு இந்தியாவின் யுக்திமிக்க மலைவாழிடமாக சில்ஹெட் விளங்கியது.[4]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Bangladesh clamps down on beggars" BBC News 2 ஏப்ரல் 2009[தொடர்பிழந்த இணைப்பு], accessed 2 ஏப்ரல் 2009
  2. Current Situation – Past and Present – Sylhet, Bangladesh பரணிடப்பட்டது 2009-06-29 at the வந்தவழி இயந்திரம் Ethnic Community Development Organization. Retrieved on 30 மே 2009.
  3. http://bangladeshcontinual.blogspot.com/2011/03/sylhet.html
  4. 4.0 4.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-29. பார்க்கப்பட்ட நாள் 2014-03-14.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சில்ஹெட்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: சில்ஹெட்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்ஹெட்&oldid=3584144" இலிருந்து மீள்விக்கப்பட்டது