நா. கோவிந்தசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நா. கோவிந்தசாமி

நா. கோவிந்தசாமி (Naa.Govindasamy, ஏப்ரல் 18, 1946 – மே 26, 1999, அகவை 52) சிங்கப்பூரைச் சேர்ந்த கணினி அறிஞரும் எழுத்தாளரும் ஆவார். முதன் முதலில் தமிழை இணையத்தில் ஏற்றி வைத்தவர் என்ற பெருமைக்கு உரியவர்.[1]"1995ம் ஆண்டு அக்டோபர் 27 இல் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் (en:Ong Teng Cheong) துவக்கி வைத்த Journeys: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலைத்தளத்தில் (Poem Web) தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது." [2][3]

இணையப் பங்களிப்பு[தொகு]

நா. கோவிந்தசாமி தமிழ்நெட், தமிழ்ஃபிக்சு போன்ற கணினி எழுத்துருக்கள் பயன்படுத்தும் சிங்கப்பூர் 16 பிட் ஒருங்குறித் திட்டத்தை மேம்பாட்டுக்காக உழைத்தார் இவரது சிங்கப்பூர் தமிழ் வெப் என்பது உலகளாவிய வலையில் வெளிவந்த உலகின் முதலாவது தமிழ் இணையப் பக்கம் ஆகும்.[4] 1999 பெப்ரவரியில் நடைபெற்ற தமிழ்நெட்99 இணைய மாநாட்டில் Towards a Total Internet Solution for the Tamil Language through Singapore Research என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வாசிக்கப்பட்டது.[5]

இலக்கியப் பங்களிப்பு[தொகு]

கோவிந்தசாமி 1965 ஆம் ஆண்டு முதல் சிறுகதைகள் எழுதி வந்தவர். 1990-ல் வேள்வி என்ற புதினத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார்.[7][8] 1991 இல் உள்ளொளியைத் தேடி என்ற சிறுகதைத் தொகுப்பும் [9] 1977ஆம் ஆண்டில் இலக்கியக் களம் என்ற அமைப்பை ஆரம்பித்தார். இவ்வமைப்பு மிகச்சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை 1981-ல் வெளியிட்டது.[5] மேலும் 1992 இல் சிங்கப்பூர்த் தமிழ் சிறுகதைகள் எனும் நூலைத் தொகுத்து வெளியிட்டார்.[10][11]

1989-ல் மொரிசியசில் நடந்த ஏழாவது உலகத் தமிழ் மாநாட்டில் கணினிக்கு ஒரு புதிய விசைப்பலகை - சிங்கப்பூர் கல்விக் கழக அனுபவம் என்ற ஆய்வு கட்டுரையையும் முதல் தமிழ்ச் சிறுகதை என்ற ஆய்வு கட்டுரையையும் படித்தார், இக்கட்டுரைகள் இம்மாநாட்டு மலரில் சேர்க்கப்பட்டுள்ளது.[12]

1994 ஆகத்து 5, 6 ஆகிய நாட்களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழும் கணிப்பொறியும் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கணியன் விசைப்பலகை என்ற கட்டுரையைப் படித்தார்.[13]

பங்காற்றிய நூல்கள்[தொகு]

நா. கோவிந்தசாமி கீழ்க்கன்ட நூல்களுக்கு இணையாசிரியராக (Co Editor) பணியாற்றியுள்ளார் [10][11]

  • 1990 The Fiction of Singapore
  • 1995 Journeys: Words, Home and Nation Anthology of Singapore Poetry

நா.கோவிந்தசாமி பற்றி நூல்களும் ஆய்வுகளும்[தொகு]

  • 2004 நா.கோவிந்தசாமியின் கல்வியியல் ஆய்வுகள் - முனைவர் சீதாலட்சுமி[14]
  • 2010 நா.கோவிந்தசாமி எனும் படைப்பாளி (வாழ்க்கை வரலாறு) [10] [15][16]

பெற்ற விருதுகள்[தொகு]

நா.கோவிந்தசாமி கீழ்க்காணும் விருதுகளைப் பெற்றுள்ளார்

  1. 1967 இல் தமிழர் திருநாளில் சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழ் நடத்திய சிங்கப்பூர் மலேசிய சிறுகதை போட்டியில் தனது காட்டாற்றின் கரையினிலே என்னும் சிறுகதைக்கு முதற்பரிசு பெற்றார் [10]
  2. 1992 இல் தேடி சிறுகதைக்கு சிங்கப்பூர் தேசிய புத்தக மேம்பாட்டு மன்றம் (National Book Development Council) விருது வழங்கியது [11]
  3. 1994 இல் தென்கிழக்காசிய எழுத்து (en:S.E.A. Write Award) விருதைப் பெற்றார் [17]
  4. 1998 இல் ஏழாவது இந்தியப் பண்பாட்டு விழாவின் புதுமை விருதினை (7th Indian Cultural Festival Innovation Award) தமிழ் வெப் திட்டத்தினை உருவாக்கியதற்காக தனது குழுவினரான டேன் டின் வீ (en:Tan Tin Wee) மற்றும் லியாங் காக் யாங் (Leong Kok Yong) ஆகியோரோடு இணைந்து பெற்று கொண்டார் [18]

வகித்த பொறுப்புகள்[தொகு]

நா.கோவிந்தசாமி ​சிங்கப்பூ்ர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் கீழ்க்காணும் பொறுப்புகளை வகித்துள்ளார்[11]

  • 1977-1979 செயலாளர்
  • 1981-1987 செயலவை உறுப்பினர்
  • 1987-1991 செயலாளர்
  • 1991-1992 துணைத் தலைவர்

TamNet Pte Ltd[தொகு]

நா.கோவிந்தசாமி 1996 இல் TamNet Pte Ltd என அறியப்பட்ட Tamil Network Publishing House Pte Ltd என்ற நிறுவனத்தை தொடங்கினார்.[19] இவரின் மறைவிற்கு பிறகு அவரது மனைவி உஷாவால் இந்நிறுவனம் மேலாண்மை செய்யப்பட்டது [20] இந்நிறுவனம் Kanian UV,கணியன் 2000 போன்ற தமிழ் எழுத்துரு மென்பொருட்களையும் செந்தமிழ் தமிழ்ச்சுடர் போன்ற சிறுவருகளுக்கான எழுத்துரு மென்பொருட்களையும் வெளியிட்டது [21] மேலும் தமிழ் தட்டச்சு வகுப்புகள் மற்றும் அனைத்து தகவல் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கியது[22]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-03-11. பார்க்கப்பட்ட நாள் 2007-03-11.
  2. https://web.archive.org/web/20020212073207/http://www.irdu.nus.edu.sg/tamilweb/about.html
  3. http://uttamam.org/papers/97_07.pdf
  4. https://web.archive.org/web/19990203214158/http://www1.irdu.nus.sg/tamilweb/
  5. 5.0 5.1 5.2 "One Hundred Tamils of the 20th Century Naa Govindaswamy". tamilnation.org. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2014.
  6. https://www.infitt.org/about-us/
  7. "வேள்வி /நா. கோவிந்தசாமி. Vēḷvi /Nā. Kōvintacāmi. – National Library". www.nlb.gov.sg.
  8. நா.கோவிந்தசாமி (1990). வேள்வி. Orchid Publishing House,. பக். 81. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789810029777. இணையக் கணினி நூலக மையம்:298458765. https://www.google.co.in/books/edition/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/NTlINwAACAAJ?hl=en. 
  9. "தேடி (நா.கோவிந்தசாமியின் புனைக்கதைகள்) -National Library". www.nlb.gov.sg.
  10. 10.0 10.1 10.2 10.3 சுந்தரி பாலசுப்பிரமணியம். "Infopedia". NLB - eresources. National Library Board - Singapore.
  11. 11.0 11.1 11.2 11.3 நா.ஆண்டியப்பன் (அக்டோபர் 2019) (pdf). சிங்கைத் தமிழ் எழுத்துச் சிற்பிகள் 200. சிங்கப்பூர்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம். பக். 97-98. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-981-14-3192-0. http://singaporetamilwriters.com/documents/SG%20Writers%20Info/SG200%20Book%20Final%20Approved.pdf. 
  12. ஏழாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர்.pdf. உலகத் தமிழாராய்ச்சி மன்றம். பக். 181-192 ,221-224. http://utsmdu.org/wp-content/uploads/2019/04/7-th-world-tamil-conferance-moricius-1989.pdf. 
  13. தமிழும் கணிப்பொறியும் - கருத்தரங்கு.pdf. அண்ணா பல்கலைக்கழகம். பக். 33-43. https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0006200_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf. 
  14. முனைவர் சீதாலட்சுமி (2004). நா.கோவிந்தசாமியின் கல்வியியல் ஆய்வுகள். தமிழ்க் கலை அச்சகம். பக். 107. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789810512958. இணையக் கணினி நூலக மையம்:226130295. https://www.google.co.in/books/edition/%E0%AE%A8%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/20Q-NwAACAAJ?hl=en. 
  15. ;நா.கோவிந்தசாமி எனும் படைப்பாளி. சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம். பக். 196. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789810858025. இணையக் கணினி நூலக மையம்:646110788. https://www.google.co.in/books/edition/%E0%AE%A8%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/YQBHcgAACAAJ?hl=en. 
  16. "நா.கோவிந்தசாமி எனும் படைப்பாளி". விருபா - தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு. பார்க்கப்பட்ட நாள் 12-11-2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  17. https://www.bookcouncil.sg/awards/s-e-a-write-award
  18. "Dr Tan Tin Wee's Home Page". Archived from the original on 2021-11-30. பார்க்கப்பட்ட நாள் 30-11-2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help) (ஆங்கில மொழியில்)
  19. "TamNet Pte Ltd". web.archive.org. Archived from the original on 2006-08-20. பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.{{cite web}}: CS1 maint: unfit URL (link) (ஆங்கில மொழியில்)
  20. ":: Profile ::". web.archive.org. 20 August 2006. Archived from the original on 20 ஆகஸ்ட் 2006. பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச் 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)CS1 maint: unfit URL (link) (ஆங்கில மொழியில்)
  21. "TamNet இன் தயாரிப்புகள்". web.archive.org. Archived from the original on 2006-08-20. பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.{{cite web}}: CS1 maint: unfit URL (link) (ஆங்கில மொழியில்)
  22. "TamNet இன் சேவைகள்". web.archive.org. Archived from the original on 2006-08-20. பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.{{cite web}}: CS1 maint: unfit URL (link) (ஆங்கில மொழியில்)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._கோவிந்தசாமி&oldid=3757705" இலிருந்து மீள்விக்கப்பட்டது