உள்ளடக்கத்துக்குச் செல்

அகமதியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிர்சா குலாம் அகமது, 1897
காதியான் கிராமம், குர்தாஸ்பூர், பஞ்சாப்பில் உள்ள அகமதியா இசுலாமியர்களின் மசூதியும், கொடியும்

அகமதியா (Ahmadiyya) என்பது 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பிரித்தானிய இந்தியாவில் தோற்றம் பெற்ற ஓர் இசுலாமிய சீர்திருத்த இயக்கம் ஆகும்.[1] பஞ்சாப் மாகாணத்தில் வாழ்ந்த மிர்சா குலாம் அகமது (1835-1908) இந்த இயக்கத்தின் முன்னோடி ஆவார். முகம்மது நபிக்குப் பிறகு வந்த இறைத்தூதராகத் தன்னை இவர் அறிவித்தார். மிர்சாவை இறைத்தூதர் என நம்புவதன் மூலம் முகம்மது நபியே இறுதி இறைத்தூதர் என்ற பெரும்பான்மை முஸ்லிம்களின் நம்பிக்கையிலிருந்து அகமதியர்கள் மாறுபடுகின்றனர். இதனால் பல இஸ்லாமிய நாடுகளில் அகமதியர்கள் முஸ்லிம்களாக ஏற்று கொள்ளப்படுவதில்லை.[2] இந்தியா அரசு இவர்கள் முஸ்லிம்களாகவே கருதிகிறது.[3] அகமதியா இயக்கம் 200 நாடுகளில் பரவியிருக்கிறது. உலகில் உள்ள 106 கோடி முஸ்லிம்களில் அகமதியர்கள் எண்ணிக்கை 1.25% ஆக உள்ளனர்.

பாகிஸ்தான்

[தொகு]

உலகில் அதிக அளவிலான அகம்மதியர்கள் வாழும் நாடு பாகிஸ்தான். ஏறத்தாழ இரண்டு முதல் ஐந்து மில்லியன் அகம்மதியர்கள் வாழ்கின்ற போதிலும் அந்நாடு அவர்களை இசுலாமியர் என ஏற்றுக்கொள்வதில்லை.[4][5][6][7] அவர்களின் பள்ளிவாசல்களை மசூதிகள் என ஏற்றுக் கொள்வதில்லை. அகம்மதியர்களை இசுலாமியர் அல்லாதோர் எனக் குறிக்க அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.[8] நோபெல் பரிசு பெற்ற இயற்பியலாளர் அப்துஸ் சலாம் அகமதியர் என்பதால் அவரது கல்லறையில் இருந்து முஸ்லீம் என்ற வார்த்தை நீக்கப்பட்டது.[9] பாக்கித்தானில் உள்ள அகமதியர்கள் நன்கு படித்தவர்கள். சட்டம், பொறியியல், மருத்துவம், கட்டிடக்கலை என்று எல்லா துறைகளிலும் வல்லவர்களாக உள்ளனர். பாக்கித்தானின் பொருளாதாரத்துக்கு இவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. ஒட்டுமொத்த பாகிஸ்தானில் எழுத்தறிவு பெற்றவர்கள் 30% அதேசமயம் அகமதியர்கள் 100% எழுத்தறிவு கொண்டவர்களாக உள்ளனர்.[10] 28.05.2010 அன்று லாகூரில் உள்ள அகம்மதியர்களின் தொழுகையிடத்தில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 95 பேர் மரணமடைந்தனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.[11]

பங்களாதேசம்

[தொகு]

வங்காள தேசத்திலும் அகமதியர்கள் முஸ்லீம்களாக கருதப்படுவதில்லை. அகமதியா இயக்கத்தினரின் ஊடக வெளியீடுகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.[12] அகமதியர்கள் இறைமறுப்பாளர்களாகவே கருதப்படுகின்றனர்.[13]

இந்தியா

[தொகு]

இந்தியாவில் அகமதிய இயக்கத்தினர் இந்தியச் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லீம்களாகவே கருதப்படுகின்றனர். கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றும் அகமதியரை முஸ்லீம் என உறுதி செய்துள்ளது.[14] அகமதியர்களின் வழிபாட்டு உரிமைக்கு எந்தவிதத் தடையும் இந்தியாவில் இல்லை.[3]

ஆசாத், ஜம்மு காஸ்மீர் கவுன்சில் இவர்களை முஸ்லிம்கள் என ஏற்க முடியாது என அறிவித்துள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. இஸ்லாமிய சமயப் பிரிவுகள்
  2. 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-15. பார்க்கப்பட்ட நாள் 2018-09-10.
  3. 3.0 3.1 "Shihabuddin Imbichi Koya Thangal vs K.P. Ahammed Koya on 8 December 1970". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 28 October 2011. The various texts quoted in the ruling dispel doubts about Ahamadis on the crucial twin tests "that there is no God but Allah ...............and Mohammad is the servant and Messenger of God."
  4. over 2 million: Immigration and Refugee Board of Canada (2008-12-04). "Pakistan: The situation of Ahmadis, including legal status and political, education and employment rights; societal attitudes toward Ahmadis (2006 - Nov. 2008)". {{cite web}}: Unknown parameter |zugriff= ignored (help)
  5. 3 million: International Federation for Human Rights: International Fact-Finding Mission. Freedoms of Expression, of Association and of Assembly in Pakistan. Ausgabe 408/2, Januar 2005, S. 61 (PDF)
  6. 3–4 million: Commission on International Religious Freedom: Annual Report of the United States Commission on International Religious Freedom. 2005, S. 130
  7. 4.910.000: James Minahan: Encyclopedia of the stateless nations. Ethnic and national groups around the world. Greenwood Press . Westport 2002, page 52
  8. Khan, Naveeda. "Trespasses of the State: Ministering to Theological Dilemmas through the Copyright/Trademark" பரணிடப்பட்டது 2011-06-26 at the வந்தவழி இயந்திரம். Sarai Reader 2005: Bare Acts. p. 184.
  9. Hanif, Mohammed (16 June 2010). "Why Pakistan's Ahmadi community is officially detested". BBC News. http://news.bbc.co.uk/2/hi/programmes/from_our_own_correspondent/8744092.stm. 
  10. ஜூரி (12 செப்டம்பர் 2018). "அகமதியாக்களின் வரலாற்றுத் துயரம்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  11. "Pakistan mosque raids kill scores". BBC News. 28 May 2010. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/10181380.stm. 
  12. Bangladesh: The Ahmediyya Community – their rights must be protected, Amnesty International
  13. “Violent Dhaka rally against sect”, BBC News
  14. Hoque, Ridwanul (21 March 2004). "On right to freedom of religion and the plight of Ahmadiyas". The Daily Star.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமதியா&oldid=3926939" இலிருந்து மீள்விக்கப்பட்டது