அனிச்சம் (தாவரம்)
அனிச்சம் மலர் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Ericales
|
குடும்பம்: | Primulaceae
|
பேரினம்: | Anagallis
|
இனம்: | A. arvensis
|
இருசொற் பெயரீடு | |
Anagallis arvensis L |
அனிச்சை அல்லது அனிச்சம் (Anagallis arvensis, Scarlet pimpernel) என்பது குறைவாக வளரும் ஆண்டுத் தாவரம் ஆகும். இதன் தாயகப் பகுதிகளாக ஐரோப்பா, தென்மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய இடங்கள் காணப்படுகின்றன.[1]
இதன் பூக்கள் மிகவும் மென்மையான இதழ்களை உடையன. முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடக்கூடிய இயல்புடையது இந்தப் பூ.[2] இதன் பூக்ககள் மென் செம்மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களில் காணப்படும். இது சூரியன் உதித்ததும் அதன் பூக்கள் மலரத் தொடங்கும்.[3]
அனிச்சம் சங்கநூல்கள் குறிப்பிடும் மலர்களில் ஒன்று.
மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்றாகக் குறிஞ்சிப்பாட்டு நூல் குறிப்பிடுகிறது.[4] நீலம், அல்லி, அனிச்சம், முல்லை, நறவு ஆகிய மலர்களைக் தலையில் அணியும் கண்ணியாகவும், கழுத்தில் அணியும் மாலையாகவும் தொடுத்து அணிந்துகொண்டனர் என்று கலித்தொகை குறிப்பிடுகிறது [5]
மூச்சுக்காற்றுப் பட்டாலே குழையும் அளவுக்கு அனிச்சம் மென்மையான மலர் என்று திருக்குறள் குறிப்பிடுகிறது.
மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து [6]
இதன் மென்மைத் தன்மை இரண்டு திருக்குறள்களிலும் சுட்டப்படுகிறது.
நன் நீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென் நீரள் யாம் வீழ்பவள் [7]
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப்பழம் [8]
அனிச்சம் பூ மிகவும் இலேசானது என்று ஒரு திருக்குறள் குறிப்பிடுகிறது.
அனிச்சப்பூ கால் களையாப் பெய்தாள் நுசும்பிற்கு
நல்ல படா பறை [9]
காப்பியங்களில் அனிச்சம்
[தொகு]- ஆண்கள் தலையில் சூடிக்கொள்வர்.[10]
- மாலையாகத் தொடுத்தும் அணிவர்.[11]
- பட்டாடை மேல் அனிச்ச மாலை அணிவர்.[12]
- கருவைத் தாங்கும் பெண்ணுக்கு அனிச்ச மலரும் சுமையாயிற்று.[13]
- அல்லிப் பூவோடு சேர்த்து அனிச்ச மலரை அணிவதும் உண்டு.[14]
- ஐ என்னும் வியப்புக்கு உரிய மலர்.[15]
- குழையும் மலர்.[16]
- பஞ்சி படர்ந்த மலர்.[17]
- அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மிகவும் மென்மையானவை.[18]
- வியப்புக்கு உரிய நொய்ய மலர்.[19]
உசாத்துணை
[தொகு]- ↑ "Factsheet – Anagallis arvensis".
- ↑ "அனிச்சம் aṉiccam". பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Scarlet Pimpernel (Anagallis arvensis)". Connecticut Botanical Society. Archived from the original on 2011-06-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-13.
- ↑ அடி 62
- ↑ அடி 1-2
- ↑ திருக்குறள் 90
- ↑ திருக்குறள் 1111
- ↑ திருக்குறள் 1120
- ↑ திருக்குறள் 1115
- ↑ குஞ்சி மேல் அனிச்ச மலர் கூட்டுணும் – சீவகசிந்தாமணி 1 134/1
- ↑ அரும்பால் பரந்து நுசுப்பும் கண்ணின் புலன் ஆயிற்று ஆய்ந்த அனிச்ச மாலை - சீவகசிந்தாமணி 1 231/3 அனிச்ச பூம் கோதை சூட்டின் அம்மனையோ என்று அஞ்சி - சீவகசிந்தாமணி 3 745/1
- ↑ அம் மலர் உரோம பூம் பட்டு உடுத்த பின் அனிச்ச மாலை - சீவகசிந்தாமணி 13 2667/3
- ↑ அம் வாய் வயிறு கால் வீங்கி அனிச்ச மலரும் பொறை ஆகி - சீவகசிந்தாமணி 13 2701/3
- ↑ அம் மலர் அனிச்சத்து அம் போது அல்லியோடு அணியின் நொந்து - சீவகசிந்தாமணி 3 606/1
- ↑ அலர் தலை அனிச்சத்து அம் போது ஐம் முழ அகலம் ஆக - சீவகசிந்தாமணி 3 617/2
- ↑ அனிச்சத்து அம் போது போல தொடுப்பவே குழைந்து மாழ்கி - சீவகசிந்தாமணி 13 2939/1
- ↑ பஞ்சி அடர் அனிச்சம் நெருஞ்சி ஈன்ற பழமால் என்று - சீவகசிந்தாமணி 1 341/1
- ↑ அம் மெல் அனிச்சம் மலரும் அன்னத் தூவியும் - சீவகசிந்தாமணி 12 2454/1
- ↑ ஐய ஆம் அனிச்ச போதின் அதிகமும் நொய்ய ஆடல் - கம்பராமாயணம் பாலகாண்டம்: 22 14/1