பேச்சு:அனிச்சம் (தாவரம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனிச்சை தாவரத்திற்கான உயிரியற் பெயர் en:Rhinacanthus nasutus என்றிருக்க வேண்டுமென நினைக்கிறேன். தெரிந்தவர்கள் உறுதிப்படுத்தவும். --Anton (பேச்சு) 15:07, 22 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

தலைப்பும் கட்டுரையும் சரியாகவே உள்ளது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:49, 27 ஏப்ரல் 2013 (UTC)

Imaginary flower or flower which is extinct. NO satisfactory identification yet. One of the probable identification --AntonTalk 05:17, 29 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கியிணைப்பு தவறாகலாம். மேலும் Blue Pimpernel என்பது அனிச்சை என்ற கருத்தும் உள்ளது. --AntonTalk 05:22, 29 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

பயனர்:Sengai Podhuvan

துவரம் பூ - துவரைச் செடி

எலுமிச்சம் பூ - எலுமிச்சைச் செடி

அனிச்சம் பூ - அனிச்சைச் செடி

இக்கட்டுரைச் செடிக்காக. பூவுக்காக அல்ல.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:30, 12 செப்டம்பர் 2015 (UTC)

அனிச்சை என்பதே சரி.--பாஹிம் (பேச்சு) 15:50, 12 செப்டம்பர் 2015 (UTC)

இரண்டுமே சரியெனவே தோன்றுகின்றது. அனிச்சம் என்ற சொல் திருக்குறளிலும் கையாளப்பட்டிருப்பதால் அதனை முதன்மைப்படுத்தலாம். --மதனாகரன் (பேச்சு) 17:04, 12 செப்டம்பர் 2015 (UTC)

பயனர்:மதனாஹரன், பயனர்:Sengai Podhuvan

பேச்சு:ஊமத்தை படி தமிழ் மரபு காக்கப்பட வேண்டும். தமிழ் மரபு கட்டுரைக்கு கட்டுரை மாறுபடக்கூடாது அல்லவா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:51, 14 செப்டம்பர் 2015 (UTC)

பயனர்:Sengai Podhuvan

தமிழ் மரபை காக்கனுமா வேண்டாமா? நீண்ட நாளாக பதில் வரவில்லையே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:47, 24 செப்டம்பர் 2015 (UTC)

"அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு 
நல்ல படாஅ பறை."

என வருவதால் அனிச்சம் என்பதே நிலைத்திணையின் பெயராக இருக்கலாம் என நினைக்கின்றேன். அனிச்சை + பூ = அனிச்சம்பூ என வந்திருக்க வேண்டும். அனிச்சம் + பூ = அனிச்சப்பூ, அனிச்சம்பூ என இரு வகைகளிலும் வரலாம். --மதனாகரன் (பேச்சு) 09:29, 25 செப்டம்பர் 2015 (UTC)

பயனர்:மதனாஹரன் இது பூ பற்றியதல்ல. செடி பற்றியது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:55, 25 செப்டம்பர் 2015 (UTC)

நானும் செடி பற்றியே கூறுகின்றேன். அனிச்சை என்பது செடியின் பெயராக இருப்பின், அனிச்சம்பூ என்றே வந்திருக்கவேண்டும். அனிச்சப்பூ, அனிச்சப்போது என வருவதால், அனிச்சம் என்பதே செடியின் பெயராக இருக்கும் என நினைக்கிறேன். இலக்கியங்களிலும் அகரமுதலிகளிலும் அனிச்சம் என்பதற்கான குறிப்பையே காணக்கூடியதாகவுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 16:56, 25 செப்டம்பர் 2015 (UTC)

இலக்கியங்களில் அனிச்சம் என்பது செடியைக் குறிக்கிறதா? பூவைக் குறிக்கிறதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:03, 25 செப்டம்பர் 2015 (UTC)

செடியா, பூவா[தொகு]

அனிச்சச் செடி
அனிச்சம் பூ
இப்படி வழங்குவது மரபு.

ஈச்ச மரம்
ஈச்சம் பழம்
ஈச்ச இலை
இப்படி வழங்குவது மரபு.

அனிச்சை என்றோ ஈச்சை என்றோ வழங்குவது மரபு அன்று.

புளிச்சைக் கீரை
புளிச்சைச் செடி
புளிச்சை நார்
இது மரபு. மரபை மாற்றுவது அழகன்று.

வா < (வர்-மொழியியல்) - வந்தான் - வருகிறான் - வருவான் - - வினை-மரபு
ஆண் - ஆடவர் - - மரபு (ஆண்கள் - வழக்கு)
ஒன்று மரபு. மற்றொன்று வழக்கு. இரண்டும் ஏற்கப்படும்.
கலைச்சொல் ஆயின் எப்படியும் உருவாக்கலாம்.
எண்ணிப் பார்த்து மொழிமரபையும், மொழிவழக்கையும் பேணவேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 22:57, 25 செப்டம்பர் 2015 (UTC)

அனிச்சச் செடி இப்படி எதாவது இலக்கியம் வழங்குகிறதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 01:07, 26 செப்டம்பர் 2015 (UTC)

அனிச்சப் பூ[தொகு]

அனிச்சப் பூ கால் களையாப் பெய்தாள் - என்னும் திருக்குறள் வழக்கு போதாதா?
அனிச்சம்+பூ=அனிச்சப் பூ
இதைவிட வேறு சான்று என்ன வேண்டும்?
தங்கள் வினாக்களின் பொருள் எனக்கு விளங்கவில்லை.

அனிச்சை - என்பது சொல் அன்று என்பதைக் காட்டுவதற்கு - அனிச்சப்பூ - என்னும் திருக்குறள் வழக்கு மட்டுமே போதுமானது.
தமிழ் மரபைக் காப்போம் என நம்புகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 11:32, 27 செப்டம்பர் 2015 (UTC)

நீங்கள் சொல்லும் தமிழ் மரபு கட்டுரைக்கு கட்டுரை மாறுகிறதே. பேச்சு:ஊமத்தை என்ற பக்கத்தில் ஒரு மரபைச் சொல்கிறீர்கள். இங்கே இன்னொரு மரபைச் சொல்கிறீர்கள். நான் கேட்டது அனிச்சச் செடி என்பதற்கு இலக்கியச் சான்று. நீங்கள் காட்டுவதோ பூவுக்கு. கேட்டதை காட்டலாமே? இல்லை என்றால் பொது மரபை பின்பற்றலாமே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:15, 27 செப்டம்பர் 2015 (UTC)

ஈச்சை என்று வழங்குவதில்லையா? நாகூர் ஹனீபாவின் ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை ... என்ற பாடலைப் பாருங்கள்.--பாஹிம் (பேச்சு) 14:15, 27 செப்டம்பர் 2015 (UTC)

பயனர்:Sengai Podhuvan தமிழ் மரபு என்ன? விளக்கவும். மேலே பாகிம் நீங்கள் கேட்டதுக்கு சான்று தந்துள்ளார். மீண்டும் பூவைப் பற்றியச் சான்று தராமல் தாவரம் பற்றிய சான்று தரவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:40, 5 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

பயனர்:Sengai Podhuvan

நான் கேட்பதற்கும் நீங்கள் சொல்லும் பதில்களுக்கும் சிறிதும் தொடர்பில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:23, 7 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

அனிச்ச நிலைத்திணை பற்றிய சங்க இலக்கியச் சான்றுகள் ஏதும் கிட்டவில்லை. அனிச்சப்பூ பற்றிய சான்றுகளே உள்ளன. ஆயினும், ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த திவாகர நிகண்டில் அனிச்சம் என நிலைத்திணையின் பெயர் கையாளப்பட்டிருப்பதைக் காணலாம். சான்று --மதனாகரன் (பேச்சு) 16:32, 7 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

பயனர்:மதனாஹரன். நன்றி.

அடுத்த தேடல் புலி ஒருவர் தமிழ் விக்கிக்கு வந்துட்டாருங்கோ.............--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:51, 7 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

பூ - செடி[தொகு]

அனிச்சப்பூப் பற்றிய சான்றுகள் உள்ளன. செடி பற்றிய சான்றுகள் சங்க இலக்கியங்களில் இல்லை என்கிறீர்கள். ஆயின், நீங்கள் கூறுவது சரிதான். என்ன செய்யலாம்? நீங்களே தீர்வைச் சொல்லிவிடுவது நன்று. --Sengai Podhuvan (பேச்சு) 01:19, 8 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

பிரச்சினை தீர்ந்து விட்டது, ஐயா.--பாஹிம் (பேச்சு) 01:48, 8 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

தீர்ந்த பின் POV குறியீடு உள்ளதே? --Sengai Podhuvan (பேச்சு) 21:31, 11 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

வேறு பெயர்கள்[தொகு]

நாகமல்லி, களிகை, அனிச்சம் ஆகியவற்றின் தாவரவியற் பெயர் Rhinacanthus nasutus என வழங்கப்படுகிறது.

,

--AntanO 15:07, 10 செப்டம்பர் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அனிச்சம்_(தாவரம்)&oldid=3859636" இலிருந்து மீள்விக்கப்பட்டது