1480கள்
Appearance
1480கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1480ஆம் ஆண்டு துவங்கி 1489-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
1480
- மார்ச் 6 – டொலெடோ உடன்பாடு: எசுப்பானியாவின் பெர்டினண்டும், இசபெல்லாவும் போர்த்துக்கீச அபொன்சோ கைப்பற்றிய ஆப்பிரிக்கப் பகுதிகளை அங்கீகரித்தனர். பதிலாக கேனரி தீவுகள் எசுப்பானியாவுக்குக் கொடுக்கப்பட்டது.
- சூலை 28 – இரண்டாம் முகமது ரோட்சைக் கைப்பற்றும் முயற்சியில் தோல்வியடைந்தான்.
- சூலை 28 – உதுமானிய இராணுவம் இத்தாலியின் ஒத்திராந்தோவை வந்தடைந்தது. அவர்களை விரட்ட திருத்தந்தை நான்காம் சிக்சுடசு சிலுவைப் போரை அறிவித்தார்.
- ஆகத்து 14 – இத்தாலியின் தெற்கே ஒத்ராந்தோ நகரில் இசுலாமுக்கு மதம் மாற மறுத்த 800 கிறித்தவர்கள் உதுமானியர்களால் கழுத்து துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்த ஒத்ராந்தோ மறைசாட்சிகள் 2013-இல் திருச்சபையினால் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.
- செப்டம்பர் 27 – பெர்டினண்டும் முதலாம் இசபெல்லாவும் எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணையை ஆரம்பித்தனர்.
- அக்டோபர் – உக்ரா ஆற்றில் பெரிய நிலைப்பாடு: தங்க நாடோடிக் கூட்டத்திலிருந்து மாஸ்கோவில் சுதந்திரமாகச் செயல்பட ஆரம்பித்தது. விளாதிமிரின் தியோதோகோசின் திருவோவியம் மாஸ்கோவைக் காப்பாற்றியதாக நம்பப்பட்டது.
- அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கத்தின் கடைசி எச்சங்களும் காணாமல் போயின.
- இலங்கையில் ஏழாம் பராக்கிரமபாகுவின் ஆட்சி.
1481

- மே 3 – உதுமானியப் பேரரசின் சுல்தான் இரண்டாம் முகமது இறந்தார். அவரது மகன் இரண்டாம் பயெசிது பேரரசனாக முடிசூடினான்.
- மே 21 – தென்மார்க்கு, நோர்வே மன்னர் முதலாம் கிறித்தியான் இறந்தார். அவரது மகன் ஜான் அரசராக முடிசூடினான்.
- சூன் 21 – கேனரி தீவுகளின் தெற்குப் பகுதிகள் அனைத்தையும் போர்த்துகலுக்கு கொடுக்கும் தீர்மானத்தில் திருத்தந்தை கையெழுத்திட்டார்.
- செப்டம்பர் 10 – நாபொலியின் இரண்டாம் அல்பொன்சோ ஓட்ராண்டோ நகரை மீளக் கைப்பற்றினான்.
- அசுட்டெக் நாட்காட்டிக் கல்லு (சூரியக் கல்) செதுக்கப்பட்டது.
1482
- மார்ச் 22 – அசுக்கோலி பிசெனோ என்ற இத்தாலிய நகருக்கு சுயாட்சி வழங்கும் சிறப்பு ஆணையில் திருத்தந்தை நான்காம் சிக்சுடசு கையெழுத்திட்டார்.[1]
- ஆகத்து 1 – குளொஸ்டர் இளவரசர் ரிச்சார்டு இசுக்கொட்லாந்தை முற்றுகையிட்டு எடின்பரோ நகரைக் கைப்பற்றினார்.[2]
- ஆகத்து 24 – இசுக்கொட்லாந்து தனது எல்லை நகரான பெரிக்கை ரிச்சார்டிடம் இழந்தது.[2]
- போர்த்துக்கீசர் எல்மினா கோட்டையைக் கட்டினர்.
- போர்த்துக்கீச மாலுமி தியோகோ வாவோ காங்கோவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் என்ற பெயரைப் பெற்றார்.
- யூக்ளிடு'களின் முதலாவது பதிப்பு எலிமென்ட்சு (இலத்தீன் மொழிபெயர்ப்பு) அச்சிடப்பட்டது.
- நேப்பாளத்தில் ஜெயயட்ச மல்லனின் (1428-1482) ஆட்சி முடிவடைந்து இரத்தின மல்லனின் (1482-1520) ஆட்சி ஆரம்பமானது.
1483
- ஏப்ரல் 30 - இந்த நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது அங்கு ஜூலை 23, 1503 வரை அங்கு இருந்தது.
- ஜூன் 26 - மூன்றாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1484
- மார்ச் 26 – ஆங்கிலத்தின் முதற் பதிப்பாளரான வில்லியம் காக்ஸ்டன் ஈசாப்பின் நீதிக்கதைகள் நூலின் மொழிபெயர்ப்பை வெளியிட்டார்.
- மே 14 – எட்டாம் சார்லசு பிரான்சின் மன்னனாக முடிசூடினார்.
- சூலை 6 – போர்த்துக்கீச கடற்படைத் தலைவர் தியோகோ காவோ காங்கோ ஆற்றை கண்டுபிடித்தார்.
- ஆகத்து 29 – எட்டாம் என்னொசென்ட் 213வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- செப்டம்பர் 21 – 3 ஆண்டுகளுக்கான போர் நிறுத்த உடன்பாடு இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து ஆகியவற்றிடையே நொட்டிங்காம் நகரில் எட்டப்பட்டது.
- டிசம்பர் 5 – செருமனியில் திரிபுவாதிகள், மற்றும் சூனியக்காரிகளுக்கெதிரான திரிபுக் கொள்கை விசாரணைக்கு திருத்தந்தை எட்டாம் இன்னொசென்ட் ஆணை ஓலை வழங்கினார்.
- முதலாவது சீனித் தொழிற்சாலை கேனரி தீவுகளில் துவங்கியது.
1485
- மார்ச் 16 – வலய மறைப்பு வடக்கு தென் அமெரிக்காவிலும் நடு ஐரோப்பாவிலும் அவதானிக்கப்பட்டது.[3]
- சூன் 1 – அங்கேரியின் மன்னன் மத்தாயசு வியன்னாவைக் கைப்பற்றி, அதனை அவரது தலைநகரமாக்கினார்.
- ஆகத்து 5–ஆகத்து 7 – முதற் தடவையாக வியர்வைக் காய்ச்சல் கொள்ளை நோய் இங்கிலாந்தில் பரவியது.
- ஆகத்து 22 – இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சார்டு மன்னர் பொசுவர்த் நகரில் இடம்பெற்ற சமரில் ரிச்மண்டு இளவரசர் என்றி தியூடோரிடம் தோற்றார். சமரில் ரிச்சார்டு இறந்ததை அடுத்து, என்றி ஏழாம் என்றி என்ற பெயரில் }இங்கிலாந்தின் மன்னரானார்.
- செப்டம்பர் 12 – மசுக்கோவியப் படைகள் திவேர் நகரைக் கைப்பற்ற்ன.
- அக்டோபர் 30 – ஏழாம் என்றி இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார்.
- சீனாவின் தாய்சான் நகரில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
- இந்நாட்களில் லியொனார்டோ டா வின்சி பறக்கும் இயந்திரங்களுக்கான பல வடிவங்களை வெளியிட்டார்.[4]
1486
- சனவரி 18 – இங்கிலாந்தின் ஏழாம் என்றி மன்னரும், யோர்க் இளவரசி எலிசபெத்தும் திருமணம் புரிந்து கொண்டனர். இலங்காஸ்டர், யோர்க் வம்சங்கள் ஒன்றிணைந்தன. ரோசாப்பூப் போர்கள் முடிவுக்கு வந்தன.
- பெப்ரவரி 16 – ஆப்சுபூர்க் இளவரசர் முதலாம் மாக்சிமிலியன் பிராங்க்ஃபுர்ட் நகரில் உரோமை மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஏப்ரல் 9 இல் ஆகனில் முடிசூடினார்).
- கால்பந்து ஒரு விளையாட்டு என்பதற்குப் பதிலாக ஒரு பந்து என்ற உணர்வில் முதன் முதலில் குறிப்பிடப்பட்டது.
1487
- மார்ச் – ஆத்திரியாவின் ஆட்சியாளர் சிகிசுமுந்த் வெனிசு மீது போரை அறிவித்து, சுகானா பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்திருந்த வெள்ளிச் சுரங்கங்களைக் கைப்பற்றினார்.
- மே 24 – லாம்பர்ட் சிம்னெல் டப்ளின் நகரில் "இங்கிலாந்தின் ஆறாம் எட்வர்ட்" என்ற பெயரில் முடிசூடினார். இவர் சூன் 5 இல் இங்கிலாந்து சென்று ஏழாம் என்றியின் இங்கிலாந்து முடியாட்சிக்கு சவால் விடுத்தார். இக்கிளர்ச்சி சூன் 16 இல் அடக்கப்பட்டது.
- ஆகத்து – பார்த்தலோமியோ டயஸ் நன்னம்பிக்கை முனை நோக்கிய தமது பயணைத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.
- ஆகத்து 13 – மாலாகா நகரை எசுப்பானியர் கைப்பற்றினர்.
- அஸ்டெக் பேரரசர் அகுத்சோட்டி பெரும் எண்ணிக்கையான மனித இழப்புகளுடன் தெனோசித்தித்திலான் பிரமிதைக் கட்டி முடித்தார்.
1488
- சனவரி 8 – அரச நெதர்லாந்து கடற்படை அமைக்கப்பட்டது.
- பெப்ரவரி 3 – போர்த்துகல்லைச் சேர்ந்த பார்த்தலோமியோ டயஸ் ஆப்பிரிக்காவின் முனையான நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வந்து மொசல் குடாவை அடைந்தார். தூரதெற்குக்குச் சென்ற முதலாவது ஐரோப்பியர் இவராவார்.
- சூன் 11 – இசுக்கொட்லாந்தின் மன்னராக நான்காம் யேம்சு முடிசூடினார்.
- சூலை 28 – பிரான்சின் எட்டாம் சார்லசு மன்னருக்கு ஆதரவான படைகள் கிளர்ச்சியாளரக்ளைத் தோற்கடித்தனர்.
- செப்டம்பர் 9 – ஆன் தனது 11-வது அகவையில் பிரித்தானியின் இளவரசியானார். 1491 இல் இவர் எட்டாம் சார்லசுவை மணந்தார்.
- மைக்கலாஞ்சலோ டொமினிக்கோ கிர்லாந்தையோவின் மாணவராக இணைந்தார்.
- மேற்கு இந்தியாவில் பிகானேர் நகரம் அமைக்கப்பட்டது.
1489
- மார்ச் 14 – சைப்பிரசு அரசி கேததரின் கொர்னாரோ தனது இராச்சியத்தை வெனிசுக் குடியரசுக்கு விற்றார்.
- மார்ச் 26 – இங்கிலாந்துக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் இங்கிலாந்தின் ஏழாம் என்றி மன்னரின் மகன் வேல்சு இளவரசர் ஆர்தருக்கும், அராகன் இளவரசி கேத்தரினுக்கும் திருமணம் செய்து வைப்பதற்கு உடன்பாடு எட்டப்பட்டது.
- சூலை 17 – தில்லி சுல்தானகம்: சிக்காந்தர் லோடி தில்லி சுல்தானாக நியமிக்கப்பட்டார்.
- டைஃபஸ் நோய் முதல் தடவையாக ஐரோப்பாவில் கிரனாதா முற்றுகையின் போது பரவியது. .
- ஒரு பிரித்தானிய பவுண்டுக்கு இணையான சவரின் எனப்படும் தங்க நாணயம் இங்கிலாந்தின் ஏழாம் என்றி மன்னரால் வெளியிடப்பட்டது.
- கூட்டல், கழித்தல் குறிகள் முதன்முதலாக அச்சிடப்பட்ட யொகான்னசு விட்மன் என்பவரின் கணித நூல் (Behende und hüpsche Rechenung auff allen Kauffmanschafft) லைப்சிக்கில் வெளியிடப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]1480
- ஏப்ரல் 27 – பெர்டினென்ட் மகலன், போர்த்துக்கீச மாலுமி, நாடுகாண் பயணி (இ. 1521)
1483
- பெப்ரவரி 14 - ஸாகிருதீன் பாபர், முகலாயப் பேரரசர் (இ. 1530)
- மார்ச் 28 - ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர், கட்டிடக்கலைஞர் (இ. 1520)
- ஏப்ரல் 6 - ரஃபாயெல், இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் (இ. 1520)
1484

- சனவரி 1 – உல்ரிச் சுவிங்கிளி, சுவிட்சர்லாந்து மதச் சீர்திருத்தவாதி (இ. 1531)
1485
- எர்னான் கோட்டெஸ், எசுப்பானியத் தேடல் வீரர் (இ. 1547)
1486
- பெப்ரவரி 18 – சைதன்யர், இந்தியத் துறவி (இ. 1534)
- சேர் சா சூரி, இந்தியாவின் சூர் பேரரசர் (இ. 1545)
1487
1489
- சூலை 2 – தாமஸ் கிரான்மர், கான்டர்பரி பேராயர் (இ. 1556)
இறப்புகள்
[தொகு]1481

- மே 3 – இரண்டாம் முகமது, உதுமானியப் பேரரசர் (பி. 1432)
1485
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Carlo Crivelli. Annunciation with St Emidius. From the collection of the National Gallery, London. From the series Masterpieces from museums of the world in the Hermitage". Hermitage Museum. Retrieved 2015-06-26.
- ↑ 2.0 2.1 Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 132–135. ISBN 0-7126-5616-2.
- ↑ NASA Eclipse site Visited June 4, 2015
- ↑ Hart, Clive (1972). The Dream of Flight: aeronautics from classical times to the Renaissance. New York: Winchester Press.