லைப்சிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லீப்சிக் நகரம்

லைப்சிக் (Leipzig) அல்லது லீப்சிக் (ஆங்கில ஒலிப்பு) செருமனியின் கூட்டாட்சி மாநிலமான சக்சனியில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் ஆகும். 17 ஆம் நூற்றாண்டில் லீப்சிக், இசை, வானியல், ஒளியியல் ஆகிய கல்வி மற்றும் பண்பாட்டுத் துறைகளில், ஒரு முக்கிய மையமாகத் திகழ்ந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இது பொதுவுடமைச் செருமன் சனநாயகக் குடியரசின் முக்கிய நகர்ப்புற மையங்களில் ஒன்றானது.

லீப்சிக்கின் மையப்பகுதியில் அமைந்துள்ள நிக்கோலாய் தேவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் ஊடாக இந்நகரம், பொதுவுடமையின் வீழ்ச்சியிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது. 2000 ஆண்டில் இடம்பெற்ற செருமனிகளின் ஒன்றிணைப்புக்குப் பின்னர், இந்நகரம் பொருளாதார அடிப்படையிலும், சமூகவியல் அடிப்படையிலும் பெரும் மாற்றங்களுக்கு உள்ளானது. இதன் ஒரு பகுதியாக, புதிய போக்குவரத்து உட்கட்டமைப்பு வளர்ச்சிகளும், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமைய மறுசீரமைப்பும் இடம்பெற்றுள்ளன. 2006 ஆம் ஆண்டில் லீப்சிக்கில் முக்கியமான உலகக் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லைப்சிக்&oldid=1828652" இருந்து மீள்விக்கப்பட்டது