உள்ளடக்கத்துக்குச் செல்

நன்னம்பிக்கை முனை

ஆள்கூறுகள்: 34°21′29″S 18°28′19″E / 34.35806°S 18.47194°E / -34.35806; 18.47194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நன்னம்பிக்கை முனை (1888 வரைபடம்)
நன்னம்பிக்கை முனையில் 1855 இல் வெளியிடப்பட்ட ஒரு முக்கோண அஞ்சற்தலை

நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) என்பது தென்னாப்பிரிக்காவின் தெற்குக் கரையோரமாகவுள்ள ஒரு கற்பாறைக் குடா (headland) ஆகும். 1488 இல் தூர கிழக்கு நாடுகளுடன் வணிகத் தொடர்புகளை வைத்திருப்பதற்கு இம்முனையைச் சுற்றி வருவது போர்த்துக்கீச மாலுமிகளுக்கு ஒரு தவிர்க்க முடியாத மைல்கல்லாக இருந்தது. தெற்கு அத்திலாந்திக் பெருங்கடலின் ஒரு பெரும் முனையாக இது கருதப்படுகிறது.[1][2][3]


புவியியல்

[தொகு]

நன்னம்பிக்கை முனை கேப் மூவலந்தீவின் தென்மேற்குக் கரையில் கேப் முனையில் இருந்து கிட்ட்டத்தட்ட 2.3 கிலோமீட்டர்கள் (1.4 மைல்) மேற்கே அமைந்துள்ளது. இம்முனையில் இருந்து 50 கிமீ வடக்கே அமைந்துள்ளது கேப் டவுன் நகரம்.

வரலாறு

[தொகு]

ஐரோப்பியர்கள் இங்கு வருவதற்கு முன்னரே சீன, அராபிய, மற்றும் இந்திய மாலுமிகள் இம்முனைக்கு வந்து போயுள்ளதாகக் கருதப்படுகிறது. 1488 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரையப்பட உலகப் படங்கள் இதற்கு சான்றாகும்.

1488 இல் ஆப்பிரிக்காவை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த பார்த்தலோமியோ டயஸ் என்ற போர்த்துக்கீச மாலுமி தனது கடல் பயணத்தில் ஒரு முனையில் புயலில் சிக்கியதால் அவரது இலக்கைத் தொடர முடியவில்லை. இதனால் அந்த இடத்துக்குப் "புயல் முனை' என்று பெயரிட்டனர். இந்தியாவை நோக்கிய பயணத்தை மேற்கொண்ட வாஸ்கொடகாமாவுக்கு இந்தப் 'புயல் முனை' தனது இலக்கை அடைவதற்கான புதிய நம்பிக்கையை கொடுத்ததன் காரணமாக இதற்கு நன்னம்பிக்கை முனை எனப் பெயரிட்டனர். அது இன்றும் அவ்வாறே அழைக்கப்படுகிறது.

நன்நம்பிக்கை முனை அமைவிடம்

.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Cape of Good Hope, South Africa – 360° Aerial Panoramas". Archived from the original on 2011-10-08. பார்க்கப்பட்ட நாள் 2017-02-03.
  2. The first circumnavigation of Africa பரணிடப்பட்டது 2015-10-16 at the வந்தவழி இயந்திரம். livius.org
  3. Sarah Mytton Maury (1848). Englishwoman In America. p. 33.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்னம்பிக்கை_முனை&oldid=4100021" இலிருந்து மீள்விக்கப்பட்டது