கேப் முனை
கேப் முனை (Cape Point) ஆப்பிரிக்காவின் தென்மேற்குக் கோடியில் தென்னாப்பிரிக்காவின் கேப் மூவலந்தீவின் தென்கிழக்கு கோடியில் கடலுள் நீட்டிக்கொண்டிருக்கும் மலையின் முனையாகும். இது மலைப்பாங்கான அழகான பகுதியாகும்; வடக்கு-தெற்காக ஏறத்தாழ முப்பது கி.மீ தொலைவிற்கு அமைந்துள்ளது. இந்த மூவலந்தீவின் வடக்கு கோடியில் கேப் டவுன் நகரமும் மேசை மலையும் அமைந்துள்ளன. இந்த முனை 34°21′26″S 18°29′51″E / 34.35722°S 18.49750°E, நன்னம்பிக்கை முனைக்கு கிழக்கே ஏறத்தாழ 2.3 கிலோமீட்டர்கள் (1.4 மைல்கள்) உள்ளது.[1] இந்த இரு பாறையாலான முனைகளும் நன்றாக அறியப்பட்டாலும் இவை இரண்டுமே ஆபிரிக்க பெருநிலத்தின் தெற்குக் கோடிமுனை இல்லை; ஆப்பிரிக்காவின் மிகுந்த தெற்கிலுள்ள தென்முனை கேப் அகுல்யாசு ஆகும். இது இங்கிருந்து கிழக்கு-தென்கிழக்கில் ஏறத்தாழ 150 கிலோமீட்டர்கள் (93 mi) தொலைவில் உள்ளது.
கலங்கரை விளக்கம்
[தொகு]புதிய கலங்கரைவிளக்கம் இரண்டு காரணங்களுக்காக குறைந்த உயரத்தில் (கடல்மட்டத்திலிருந்து 87 மீற்றர்கள்; 285.5 அடி) அமைக்கப்பட்டுள்ளது: 34°21′14″S 18°29′25″E / 34.35389°S 18.49028°E அமைந்துள்ள பழைய கலங்கரைவிளக்கம் கப்பல்களால் 'மிகவும் முன்பாகவே' காணக்கூடியதாக இருந்ததால், அவை முனைக்கு மிகவும் அருகில் வந்தன. இரண்டாவதாக பெரும்பாலும் உயர்ந்த மட்டத்தில் பனிமூட்டம் இருப்பதால் பழைய கலங்கரைவிளக்கம் கப்பல்களுக்குத் தெரியாமல் உள்ளது. ஏப்ரல் 18, 1911இல் போர்த்துக்கேய கப்பல் எஸ்எஸ் லுசிதானியா இதே காரணத்திற்காக கேப் முனைக்கு தெற்கே 34°23′22″S 18°29′23″E / 34.38944°S 18.48972°E பெல்லோசு பாறையில் மோதி உடைந்தது. எனவேதான் கலங்கரை விளக்கை இடம் மாற்றவேண்டியத் தேவை ஏற்பட்டது.
34°21′26″S 18°29′49″E / 34.35722°S 18.49694°E இல் அமைந்துள்ள புதிய கலங்கரை விளக்கு மேற்கிலிருந்து தெற்கில் பாதுகாப்பான தொலைவு வரும்வரை காணவியலாததாக உள்ளது. கேப் முனையிலுள்ள கலங்கரை விளக்கே தென்னாப்பிரிக்க கடலோரத்தில் அமைந்துள்ள கலங்கரை விளக்கங்களில் மிகவும் ஒளிமிகுந்ததாகும். 63 மைல்கள் (101 km; 55 nmi) தொலைவிற்கு ஒவ்வொரு சிமிட்டலின்போதும் 10 கேண்டெலாக்கள் ஒளி கொண்டதாக உள்ளது.[2]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Topo map of Cape Point, from the South African Geographical Names System
- ↑ Cape Point Attractions: Cape Point, Cape Town, South Africa, from South Africa Explored