உள்ளடக்கத்துக்குச் செல்

1470கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரவாண்டுகள்: 2-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 14-ஆம் நூற்றாண்டு - 15-ஆம் நூற்றாண்டு - 16-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1440கள் 1450கள் 1460கள் - 1470கள் - 1480கள் 1490கள் 1500கள்
ஆண்டுகள்: 1470 1471 1472 1473 1474
1475 1476 1477 1478 1479

1470கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1470ஆம் ஆண்டு துவங்கி 1479-இல் முடிவடைந்தது.

நிகழ்வுகள்

1470

 • மார்ச் 12ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்து இராச்சியத்தில் யோர்க் அரசர்கள் லான்காஸ்டர்களை வென்றனர்.
 • மே 15 – மூன்று தடவைகள் சுவீடனின் மன்னராகப் பதவியில் இருந்த எட்டாம் சார்லசு இறந்தார்.
 • மே 16 - ஸ்டென் ஸ்டூர் தன்னை சுவீடனின் மன்னராக அறிவித்தார். சூன் 1 இல் இவர் மன்னராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
 • செப்டம்பர் 13இங்கிலாந்தின் மன்னர் நான்காம் எட்வர்டின் முன்னாள் சகாவான வாரிக் குறுநில மன்னர் ரிச்சார்ட் நெவில் தலைமையிலான கிளர்ச்சியை அடுத்து, மன்னர் தனது மைத்துனர் பர்கண்டியின் சார்லசிடம் உதவி கேட்க வேண்டி வந்தது.
 • அக்டோபர் 3இலண்டன் கோபுரத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் ஆறாம் என்றி அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, மன்னராக்கப்பட்டார்.
 • பகாங்கு சுல்தானகம் உருவாக்கப்பட்டது (இன்றைய மலேசியாவில்).
 • யொகான் ஹெயின்லின் அச்சியந்திரத்தை பிரான்சில் அறிமுகப்படுத்தி, தனது முதலாவது நூலை இதே ஆண்டில் வெளியிட்டார்.
 • இந்த ஆண்டுக்கும் 1700 இற்கும் இடையில் சுவிட்சர்லாந்து கூட்டமைப்பில் 8,888 சூனியக் காரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5,417 பேருக்கு மரண தண்டனைநிறைவேற்றப்பட்டது.

1471

 • மார்ச் 1 – வியட்நாம் பேரரசர் லே தான் தொங் தலைநகர் சாம்பாவைக் கைப்பற்றி, வியட்நாமின் மத்திய பகுதியில் புதிய பகுதிகளை அமைத்தார்.
 • மார்ச்ரோசாப்பூப் போர்கள்: யோர்க் வம்ச அரசர் நான்காம் எட்வர்டு இங்கிலாந்து திரும்பி முடியாட்சிக்கு உரிமை கோரினார்.
 • ஏப்ரல் 14 – ரோசாப்பூப் போர்கள்: நான்காம் எட்வர்டு ரிச்சார்டு நெவில் கோமகன் தலைமையிலான லங்காஸ்திரிய இராணுவத்தை தோற்கடித்தார். ரிச்சார்ட் நெவில் இதன் போது கொல்லப்பட்டார்.
 • மே 4 – ரோசாப்பூப் போர்கள்: நான்காம் எட்வர்டு மார்கரெட் மகாராணி மற்றும் அவரது மகன் வேல்சு இளவரசர் எட்வர்டு தலைமையிலான லங்காஸ்திரிய இராணுவத்தைத் தோற்கடித்தார். இச்சமரில் இளவரசர் எட்வர்டு கொல்லப்பட்டார். பின்னர் இங்கிலாந்தின் மன்னர் ஆறாம் என்றி கொல்லப்பட்டார்.
 • ஆகத்து 9 – நான்காம் சிக்சுடசு 212வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
 • ஆகத்து 24 – போர்த்துகல் மன்னர் ஐந்தாம் அஃபொன்சோ மொரோக்கோ நகரமான அர்சீலாவைக் கைப்பற்றினார்.
 • ஆகத்து 29 – மொரோக்கோவின் தாஞ்சியர்சு நகரில் இருந்து குடிமக்கள் வெளியேறியதை அடுத்து அதனை போத்துக்கீசர் கைப்பற்றினர்.
 • அக்டோபர் 10 – சுவீடனின் அரசப் பிரதிநிதிகளின் படையினர் உழவர்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்களின் உதவியுடன், டென்மார்க் மன்னர் முதலாம் கிறித்தியானின் தாக்குதலை சுவீடன் பிரங்கன்பர்க் நகரில் இடம்பெற்ற சமரில் முறியடித்தனர்.
 • டிசம்பர் 21சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி தீவுகளை போர்த்துக்கீச மாலுமிகள் கண்டுபிடித்தனர்.[1]

1472

ஆட்சியாளர்கள்[தொகு]

1473

1474

 • பெப்ரவரி – ஊட்ரெக்ட் உடன்பாடு ஆங்கிலேய-அன்சியாட்டிக் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
 • மார்ச் 19வெனிசுக் குடியரசின் மேலவை உலகின் முதலாவது காப்புரிமச் சட்டத்தை அறிவித்தது.[2]
 • சூலை 25பிரான்சு மீதான இங்கிலாந்து மன்னர் நான்காம் எட்வர்டின் முற்றுகைக்கு ஆதரவாக பர்கண்டியின் சார்லசு இலண்டன் உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.[3]
 • டிசம்பர் 12 – காசுட்டில் மன்னர் நான்காம் என்றியின் இறப்பை அடுத்து, அவரது அடுத்த வாரிசு முதலாம் இசபெல்லாவுக்கும் இசபெல்லாவின் மருமகள் உவான்னாவுக்கும் இடையே உள்நாட்டுப் போர் வெடித்தது. பெரும் முயற்சியின் பின்னர் இசபெல்லா காசுட்டில் அரசியாக முடிசூடினார்.
 • வங்காள சுல்தானகத்தின் இலியாஸ் சாகி வம்சத்தின் மகுமுது சாவின் ஆட்சி முடிவுக்கு வந்து உருக்குனுதீன் பர்பாக் சாவின் ஆட்சி அமைக்கப்பட்டது.
 • மயாபாகித்து பேரரசின் மன்னராக ரணவிசயன் முடிசூடினான்.

1475

 • சனவரி 10 – மோல்தாவிய-உதுமானியப் போர்கள்: வாசுலி சமரில் மோல்தாவியாவின் மூன்றாம் இசுட்டீவன் இரண்டாம் முகமது தலைமையிலான உதுமானியப் பேரரசைத் தோற்கடித்தார்.
 • சூலை 4 – பர்கண்டியப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு பிரான்சிற்கு எதிரான பர்கண்டி கோமகனுக்கு ஆதரவாக கலேயில் தரையிறங்கினார்.[4]
 • ஆகத்து 29 – பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே இடையே இடம்பெற்ற குறுகிய போர் முடிவுக்கு வந்தது.
 • நவம்பர் 14 – பவாரியாவின் இளவரசர் ஜார்ஜிற்கும், இளவரசி எட்விக் ஜாகிலனுக்கும் இடையே பெரும் தெருக்கூத்து திருமணம் இடம்பெற்றது.

1476

1477

1478

1479

பிறப்புகள்[தொகு]

1471

1472

1473

1475

1476

 • சூன் 28 – நான்காம் பவுல், திருத்தந்தை (இ. 1559)[9]

1477

1478

1479

இறப்புகள்[தொகு]

1470

1476

1478

1479

மேற்கோள்கள்[தொகு]

 1. Francisco, Albertino; Agostinho, Nujoma (2011). Exorcising Devils from the Throne: São Tomé and Príncipe in the Chaos of Democratization. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780875868486.
 2. Ladas, Stephen Pericles (1975). Patents, Trademarks, and Related Rights: National and International Protection, Volume 1. Harvard University Press. pp. 6–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674657755.
 3. Lander, J. R. (1981). Government and Community: England, 1450-1509. Harvard University Press. p. 287. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674357945.
 4. Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 185–187. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
 5. Timbs, John (1855). Curiosities of London: Exhibiting the Most Rare and Remarkable Objects of Interest in the Metropolis. D. Bogue. p. 4.
 6. Heimann, Heinz-Dieter. Die Habsburger: Dynastie und Kaiserreiche. pp. 38–45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-406-44754-6.
 7. Penguin Pocket On This Day. Penguin Reference Library. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-102715-0.
 8. Brown, Alison (1979). Bartolomeo Scala, 1430-1497, Chancellor of Florence : the humanist as bureaucrat. Princeton, N.J.: Princeton University Press. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4008-6753-0. இணையக் கணினி நூலக மைய எண் 767801631.
 9. Cohn-Sherbok, Lavinia (2 September 2003). Who's Who in Christianity. Routledge. p. 235. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134509560.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1470கள்&oldid=3702711" இலிருந்து மீள்விக்கப்பட்டது