உள்ளடக்கத்துக்குச் செல்

தாமஸ் கிரான்மர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமசு கிரான்மர்
Thomas Cranmer
கான்டர்பரி பேராயர்
கெர்லாக் பிலிக் 1545 இல் வரைந்தது[1]
ஆட்சி துவக்கம்3 திசம்பர் 1533[2]
ஆட்சி முடிவு4 திசம்பர் 1555
முன்னிருந்தவர்வில்லியம் வாரம்
பின்வந்தவர்இரெஜினால்டு போல்
திருப்பட்டங்கள்
ஆயர்நிலை திருப்பொழிவு30 மார்ச் 1533
பிற தகவல்கள்
பிறப்பு(1489-07-02)2 சூலை 1489
நோட்டிங்காம்சயர், இங்கிலாந்து
இறப்புமார்ச்சு 21, 1556(1556-03-21) (அகவை 66)
ஆக்சுபோர்டு, இங்கிலாந்து
குடியுரிமைஆங்கிலேயர்
சமயம்ஆங்கிலிக்கம்
வேலைமதகுரு
படித்த இடம்இயேசு கல்லூரி, கேம்பிரிட்ச்

தாமஸ் கிரான்மர் (Thomas Cranmer; 2 சூலை 1489 – 21 மார்ச் 1556) ஆங்கிலேய மத சீர்திருத்தத்தின் தலைவர் மற்றும் பின்-சீர்திருத்திய இங்கிலாந்து திருச்சபையின் முதலாம் பேராயர் ஆவார். இவர் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மற்றும் இங்கிலாந்தின் ஆறாம் எட்வர்டின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்துவந்தார். ஆரகானின் கதெரீனிடமிருந்து மன்னர் என்றி விவாகரத்து செய்ய உதவினார், இது உரோமைத் திருச்சபையிலிருந்து இங்கிலாந்தைப் பிரித்தது. இதற்பின் கிரான்மரும் தாமசு குரொம்வெல்லும் இணைந்து 'ராயல் சுப்ரீமசி' எனபடும் அறிக்கையை செயலப்படுத்தினார். இதன்கீழ் அரசர் அல்லது அரசியாரே திருச்சபையின் தலைவராவார்.

இவர் கான்டர்பரியின் பேராயராகப் பணியாற்றிய காலத்தில் இங்கிலாந்து திருச்சபையின் போதனையை சீர்திருத்தினார். இவரே இங்கிலாந்து திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் அதில் இணைந்துள்ள வெவ்வேரு திருச்சபைகளின் கொள்கை ம்ற்றும் போதனையின் தந்தை எனக் கூறலாம்.

கிரான்மர் உயிருடன் எரிக்கப்படும் காட்சி

எனினும், என்றியின் ஆட்சியில் இவர் தீவிரமாக எந்த மாற்றங்களையும் செயல்படுத்தவில்லை. எட்வர்டின் ஆட்சியில் இவர் தீவிரமாக இங்கிலாந்தை உரோமைத் திருச்சபையிலிருந்து மாற்றினார். முதலில் இவர் தனது "பொது ஜெப புத்தகம்" (புக் ஒஃப் காமன் பிரேயர்) எனும் புத்தகத்தை வெளியிட்டார். இதில் இங்கிலாந்து திருச்சபையின் முழு புதிய வழிபாட்டை போதித்தார். அதுமட்டுமல்லாமல் சமயகுருமாரின் பாலிய விட்டொழிப்பு, திருவிருந்து, வழிபாட்டில் படிமங்களின் பங்கு, மற்றும் தூயர்களுக்கு ஜெபம் செலுத்துவதைக்குறித்து இதில் குறிப்பிடுகிறார்.

இங்கிலாந்தின் முதலாம் மரியாள், ஒரு கத்தோலிக்க அரசி, ஆட்சிக்கு வந்தபொழுது இவர் உயிருடன் எரிக்கப்பட்டார்.[3] எனினும், இவரது 'புக் ஒஃப் காமன் ப்ரெயர்' மற்றும் அதிலிருந்து எடுக்கப்பட்ட 39-கட்டுரைகள் இன்னும் வாழ்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Matthew & Harrison 2004; MacCulloch 1996, ப. 340; Ridley 1962, ப. frontispiece
  2. Ridley 1962, ப. 70; MacCulloch 1996, ப. 106
  3. Heinze 1993, ப. 267–271; MacCulloch 1996, ப. 574–582
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமஸ்_கிரான்மர்&oldid=3073899" இலிருந்து மீள்விக்கப்பட்டது