நன்றி (திரைப்படம்)
தோற்றம்
| நன்றி | |
|---|---|
| இயக்கம் | இராம நாராயணன் |
| தயாரிப்பு | ஏ. வி. எம். ராஜன் ராஜ் மகால் இண்டெர்நேஷனல் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | கார்த்திக் நளினி |
| வெளியீடு | ஆகத்து 17, 1984 |
| நீளம் | 3986 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நன்றி (Nandri) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக், நளினி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் திரைக்கதையை அபையா நாயுடு எழுதினார். இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். இதில் கார்த்திக், அர்ஜுன் சர்ஜா , நளினி , மஹாலட்சுமி, சங்கிலி முருகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவுனி (நாய்) முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தது. அர்ஜுன் சர்ஜா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படம் கன்னடத் திரைப்படமான தாலியா பாக்யாவின் மறுஆக்கமாகும்.[1]
நடிகர்கள்
[தொகு]- கார்த்திக் - அதிகாரி சங்கர்
- அர்ஜுன் சர்ஜா- முருகன் (ஊமை மனிதன்)
- நளினி - இலட்சுமி, (சத்தியநாதனின் மருமகள்)
- மகாலட்சுமி- பள்ளி ஆசிரியராக சரதா
- சங்கிலி முருகன் - கிராமத் தலைவர் சத்தியநாதன்
- எஸ். எஸ். சந்திரன் - புண்ணியகோடி
- ஏ. வி. எம். ராஜன் - டி. ஐ. ஜி.
- பிரவுனி- ராஜா (நாய்)- சங்கரின் செல்லம்
- எம்.ஆர் கே- தர்மலிங்கம்
- பீலி சிவம் - ஆய்வாளர்
- மாஸ்டர் விமல்- இராமு
- சங்கர் கணேஷ் - (விருந்தினர் தோற்றம்)
- செந்தில் - விருந்தினர் தோற்றம்
- அனுராதா - விருந்தினர் தோற்றம்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை வாலி எழுதியிருந்தார்.
| எண் | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நிமிடங்கள்:நொடிகள்) |
|---|---|---|---|---|
| 1 | "நான் தான் ருக்குமணி" | எஸ். பி. சைலஜா | வாலி | 04:05 |
| 2 | "வா வா என் தலைவன்" | பி. ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் | 04:21 | |
| 3 | "தாய் செய்த பாவம்" | பி. சுசீலா | 04:41 | |
| 4 | "மதுரை நகரினிலே" | ராஜூ ஜெயராம், வாணி ஜெயராம் | 04:54 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nandri". spicyonion. Archived from the original on 2013-06-23. Retrieved 2017-03-01.