உள்ளடக்கத்துக்குச் செல்

செந்தூர தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செந்தூர தேவி
இயக்கம்ராம நாராயணன்
தயாரிப்புஎன். ராதா
கதைராம நாராணன்
புகழ்மணி (வசனங்கள்)
இசைசங்கர் கணேஷ்
நடிப்பு
ஒளிப்பதிவுஎன். கே. விசுவநாதன்
படத்தொகுப்புராஜ்கீர்த்தி
கலையகம்ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்சு
வெளியீடுசூன் 22, 1991 (1991-06-22)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

செத்தூரதேவி என்பது 1991 இல் வெளிவந்த நகைச்சுவை தமிழ் திரைப்படமாகும். ராம நாராயணன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் விவேக், கனகா, சார்மிலி ஆகியோரும் அவர்களுடன் இணைந்து செந்தில், வெண்ணிற ஆடை மூர்த்தி, குமரிமுத்து மற்றும் கிற்றி ஆகியோரும் நடித்திருந்தனர். என். ராதா இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார். மேலும் சூன் 22, 1991 ல் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் சிந்தூர தேவி எனும் பெயரில் தெலுங்கில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.[1]

கதைச்சுருக்கம்[தொகு]

சிந்து மற்றும் நந்து இருவரும் இரட்டை சகோதரிகள். இவ்விருவருக்கும் அவர்கள் சகோதரிகள் என்று தெரியாமலே பிரிந்திருக்கின்றனர். தங்களது பெற்றோரின் விவாகரத்திற்கு பின்னர் சிந்து அவளது அம்மா செல்வி (கனகா) மற்றும் தாத்தா (வெண்ணிற ஆடை மூர்த்தி) ஆகியோருடனும் நந்து அவளது தந்தை கோபியுடனும் (விவேக்) தங்கியிருக்கின்றனர். கோபி பிரபலமான மிருக வைத்தியர். அவருடைய வீட்டில் 4 விலங்குகளை வளர்த்து வந்தார்.அதில் ஒரு யானை செல்லப்பா, நாய் பைரவன், குரங்கு ராமு, குதிரை மதுரைவீரன் ஆகியன அடங்கியிருந்தன. நந்து இப்பிராணிகளுடன் அதிக நேரத்தை களிப்பதுடன் அவைகளை தனது நண்பர்கள் போல கவனித்தும் வந்தாள்.

ஒரு முறை குற்றவாளியான ஜகன்னாத் இரகசியங்கள் அடங்கிய குழாய்கள் இரண்டை ஆங்காங்கிற்கு கடத்துவதற்காக குதிரை ஒன்றின் குடலினுள் வைக்கும்படி கோபியிடம் கேட்க அதற்கு கோபி மறுக்கிறான். இதனால் வேறு வழியில்லாமல் கோபியின் இரு மகள்களையும் கடத்துகின்றான். பின்னர் அவர்கள் இருவரையும் ஒரே அறையினுள் வைத்தபின் அவர்கள் இருவரும் சகோதரிகள் என்பதை அவர்கள் உணர அங்கிருந்து நந்துவின் விலங்குகளின் உதவியுடன் தப்பிச்செல்வதுடன் இரகசியங்கள் அடங்கிய குழாய்களை மாரியம்மன் சிலையில் ஒளித்து வைப்பதுடன் தனது பெற்றோரை ஒன்று சேர்க்க இருவரும் மாறி தத்தம் வீட்டி செல்கின்றனர். இதற்கிடையில் கோபி குழாய்களை மீட்பதுடன் அதன்பிறகு நடப்பது மீதிக்கதை ஆகும்.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார். 1991 ம் ஆண்டு இசை வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் உள்ள நான்கு பாடல்களிற்கும் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sendhura Devi (1991)". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-28.
  2. "Sendhoora Devi songs". saavn.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-28.
  3. "Sendhoora Devi songs". play.raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தூர_தேவி&oldid=3660087" இலிருந்து மீள்விக்கப்பட்டது