சாத்தான் சொல்லைத் தட்டாதே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாத்தான் சொல்லைத் தட்டாதே
இயக்கம்ராம நாராயணன்
தயாரிப்புபுலவர் புலமைப்பித்தன்
திரைக்கதைராம நாராயணன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசெந்தில்
பாண்டியன்
சந்திரசேகர்
ஜனகராஜ்
கனகா
எஸ்.எஸ்.சந்திரன்
கே.கே.சுந்தர்
கோவை சரளா
இளவரசன்
வெளியீடு1990
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சாத்தான் சொல்லத் தட்டாதே (Sathan Sollai Thattathe) திரைப்படம் 1990-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ராம நாராயணன் இயக்கினார். இத்திரைப்படத்தில் செந்தில், பாண்டியன், சந்திரசேகர், ஜனகராஜ், கனகா, எஸ்.எஸ்.சந்திரன், கே.கே.சுந்தர், கோவை சரளா, இளவரசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 3 ஏழை, அப்பாவிகளுக்கும் ஒரு பூதத்திற்கும் இடையே நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு இப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

நடிகர்கள்[தொகு]

கதைச்சுருக்கம்[தொகு]

மூர்த்தி, கோபிநாத், சேகர் ஆகிய மூவரும் இணைபிரியா நண்பர்கள். நன்கு படித்தும் சரிவர வேலையேதும் கிடைக்காமல் சிறு வேலைகளை செய்து ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். பக்கத்துக்கு வீட்டில், கே.கே.சுந்தர், அவரது மனைவி மற்றும் அவரது மகள் புவனா ஆகியோர் வசித்து வருகின்றனர். அந்த 3 பேர் மீதும் தன்னால் முடிந்த உதவியை செய்வாள் புவனா.

எஸ்.எஸ்.சந்திரனும் கோவை சரளாவும் போலியாக ஏலத் தொழிலை நடத்தி வருகிறார்கள். அவ்வாறு ஒரு நாள், மூர்த்தி தவறதுலாக அந்த ஏலத்திற்கு சென்று அதிக விலைக்கு வயலின் ஒன்றை வாங்கிவிடுகிறான். தேவையில்லாமல் அந்த வயலினை வாங்கிய மூர்த்தி மீது சேகரிக்கும் கோபிநாத்துக்கும் கோபம் இருந்தாலும், பின்னர் மன்னித்துவிடுகின்றனர். இந்த மூன்று நண்பர்களும் வெவேறு தருணங்களில் தனித்தனியே சித்ராவை (கனகா (நடிகை)) சந்திக்கிறார்கள். மூவருக்கும் அவளை மிகவும் பிடித்துவிடுகிறது. சித்ரா எஸ்.எஸ். சந்திரனின் மகளாவாள். சித்திராவை மூர்த்தி தன் வசம் ஈர்க்க வயலினை பயன்படுத்தும் முயற்சி தோல்வியில் முடிகிறது. சில நாட்களுக்கு பிறகு, ஓர் அத்வானமான இடத்தில், அதிக கோவத்தால் அந்த வயலினை உடைத்துவிடுகிறான் மூர்த்தி. அந்த உடைந்த வயலினிலிருந்து பூதம் (செந்தில்) வருவதை கண்டு அஞ்சுகிறார்கள். பின்பு நட்பு பாராட்டி, அந்த பூதமும் அவர்களில் ஒருவராக மாற, சாத்தையா என்று அந்த பூதத்திற்கு பெயர் வைக்கப்படுகிறது. வயலின் சாபத்திலிருந்து தன்னை விடுவித்த காரணத்தினால், அந்த மூவருக்கும் மாயாஜால சக்திகளை கொண்டு சாத்தையா பூதம் உதவி செய்கிறது. மூவரும் திடீர் பணக்காரர்கள் ஆகிவிடுகின்றனர்.

சித்ராவை மூவரும் தன் வசப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அதனால் மூவருக்கும் இடையே பல பிரச்சனைகள் உண்டாகின்றன. அந்த பிரச்னைகளை எவ்வாறு அந்த மூவரும் கையாண்டனர்? சித்ரா யாரை மணந்தாள்? கடையாக பூதத்திற்கு என்னவானது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணுதலே மீதி கதையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://spicyonion.com/movie/sathan-sollai-thattadhei