தி காவிரி பொறியியல் கல்லூரி, மேச்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி காவிரி பொறியியல் கல்லூரி
வகைசுயநிதி
உருவாக்கம்2006
அமைவிடம், ,
வளாகம்ஊரகம்

தி காவிரி பொறியியல் கல்லூரி என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி காளிப்பட்டியில் ஈரோடு-பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும்.

நிறுவனம்[தொகு]

இக் கல்லூரி தி காவிரி கல்வி அறக்கட்டளையால் 2006 இல் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இக்கல்லூரி புதுதில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் அங்கீகாரம் கொண்ட கல்லூரி ஆகும். இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரி.

படிப்புகள்[தொகு]

இங்கு எட்டு இளநிலைப் பொறியியல் படிப்புகளையும், 14 முதுநிலைப் பட்டப் பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "மாணவர்களின் கனவை நனவாக்கும் தி காவிரி கல்வி நிறுவனங்கள்". தினகரன் தொழில் மலர் 2017. 2017.