திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் (திரிவிக்கிரம நாராயணர், திரிவிக்கிரமன்) திருக்கோயில்[1]
புவியியல் ஆள்கூற்று:11°14′27″N 79°43′54″E / 11.240845°N 79.731605°E / 11.240845; 79.731605
பெயர்
புராண பெயர்(கள்):காழிச்சீராம விண்ணகரம், பாடலிகவனம்
பெயர்:திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் (திரிவிக்கிரம நாராயணர், திரிவிக்கிரமன்) திருக்கோயில்[1]
அமைவிடம்
ஊர்:சீர்காழி
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:திரிவிக்கிரம நாராயணர் (நின்ற திருக்கோலம்)
உற்சவர்:தாடாளன்
தாயார்:லோகநாயகி
தல விருட்சம்:பலா
தீர்த்தம்:சங்க தீர்த்தம், சக்கர தீர்த்தம்
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:ஆண்டாள், திருமங்கையாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:உண்டு
தொலைபேசி எண்:+91- 4364 - 270 207, 94424 - 19989

திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் (திரிவிக்கிரம நாராயணர்) திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று.இத்திருத்தலம் சீர்காழியில் அமைந்துள்ளது.உரோமச முனிவர் தவமிருந்து பெருமாளின் திரிவிக்கிரம அவதாரக் காட்சி கண்ட திருத்தலம்.

தலவரலாறு[தொகு]

மூலவர் திரிவிக்கிரமராக இடது காலைத் தலைக்கு மேல் தூக்கியபடியும் வலது கையை தானம்பெற்ற கோலத்திலும் இடக்கையை அடுத்த அடி எங்கே என ஒரு விரலைத் தூக்கியபடியும் அமைந்துள்ளார்.

உற்சவர் தாடாளன் வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே காட்சி தருகின்றார்.

சிறப்பு[தொகு]

திரிவிக்கிரம கோலத்தில் பெருமாள் ஒருபாதத்தை உயரத் தூக்கியபோது, பாதம் நோகுமே என்று அவரை பதக்கமாகத் தாயார் தாங்குவதாக மரபு. இத்திருத்தல தாயார் தரிசனம் காணும் பெண்கள் கணவரிடம் அன்பு காட்டுவர் என்பது தொன்நம்பிக்கை.

திருமங்கையாழ்வார் வேல் பெற்ற திருத்தலம்[தொகு]

திருமங்கையாழ்வாருக்கும் திருஞானசம்பந்தருக்கும் இடையேயான வாதப்போட்டியில் ஆழ்வார் வெற்றி பெற்றதால், திருமங்கையாழ்வாரைப் பாராட்டி தமது வேலை திருஞானசம்பந்தர் அளித்த திருத்தலம். திருவாழி - திருநகரி திருத்தலத்தில் இந்த வேலை வைத்தபடி திருமங்கையாழ்வார் காட்சி தருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]