"திருக்குறள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4,101 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
→‎நூலின் கட்டமைப்பு: கட்டமைப்பு பகுதியை விரிவுபடுத்துதல்
சி (→‎வெளி இணைப்புகள்: + ; [https://www.thirukkural.net/en/kural/kural-0681.html பன்மொழி மொழிப்பெயர்ப்பு])
(→‎நூலின் கட்டமைப்பு: கட்டமைப்பு பகுதியை விரிவுபடுத்துதல்)
 
முப்பால்ப் பகுப்பைப் போல் குறள்களை அதிகாரங்களாகத் தொகுத்ததும் நூலாசிரியர் தான். இயல் பகுப்பு மற்றும் அதிகார வைப்புமுறையினை மட்டுமே உரையாசிரியர்கள் மாற்றியுள்ளனர். ஒவ்வொரு அறத்தையும் பத்துக் குறட்பாக்களாகப் பாடி அவற்றின் தொகுப்பினை அதிகாரம் என்று பெயரிட்டாளும் மரபு வள்ளுவரிடம் காணப்படுவதாகவும் ஒவ்வோரதிகாரத்திற்கும் தலைப்பினை அவரே வழங்கியுள்ளார் என்றும் சோ. ந. கந்தசாமி கூறுகிறார்.{{sfn|Kandasamy, 2017|p=12}} மேலும் அந்தந்த அதிகாரத்தில் பொதிந்துள்ள குறட்பாக்களில் பயின்றுவரும் தொடரினையே பெரிதும் பேணி அதிகாரத் தலைப்பாக வள்ளுவர் அமைத்துள்ளதாகவும் அவர் உரைக்கிறார்.{{sfn|Kandasamy, 2017|p=12}} இதற்கு விதிவிலக்காக ஒவ்வொரு பால்களிலும் ஒரு அதிகாரம் உண்டு: அறத்துப்பாலில் வரும் "கடவுள் வாழ்த்து" அதிகாரமும் (முதல் அதிகாரம்), பொருட்பாலில் வரும் "படைச் செருக்கு" அதிகாரமும் (78ஆம் அதிகாரம்), காமத்துப்பாலில் வரும் "படர்மெல்ந்திரங்கல்" அதிகாரமும் (117வது அதிகாரம்) அவற்றில் வரும் குறள்களில் பயின்றுவராத சொல்லை அதிகாரத் தலைப்பாகக் கொண்டுள்ளன.{{sfn|Kandasamy, 2017|pp=12–13}} இவ்வாறு முரணாக இருப்பினும் இவையனைத்துமே வள்ளுவரால் சூட்டப்பட்ட பெயர்களேயாம்.{{sfn|Kandasamy, 2017|p=13}} குறளின் முதலதிகாரத்தின் தலைப்பு தொல்காப்பிய மரபின் வழியே சூட்டப்பட்டதென்றே கந்தசாமி துணிகிறார்.{{sfn|Kandasamy, 2017|p=13}}
 
ஸ்வெலெபிலின் கூற்றுப்படி குறளானது ஐயத்திற்கிடமின்றி சீரான அமைப்போடும் கவனத்தோடும் இயற்றப்பட்ட ஒரு நூலாகும்.{{sfn|Zvelebil|1973|p=163}} கருத்துக்களில் இடைவெளியோ வெற்றிடமோ இன்றிக் குறட்பாக்கள் ஒவ்வொன்றும் தத்தம் அதிகாரத்தினின்று பிரித்தெடுக்க இயலா வண்ணம் கோர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.{{sfn|Zvelebil|1973|pp=158–163}} ஒவ்வொறு குறட்பாக்களும் அமைவுப் பொருள், மூதுரைப் பொருள் என இரு வகையான பொருட்களைத் தரவல்லது.{{sfn|Zvelebil|1973|pp=158–163}} குறட்பாக்களை அவை பயின்றுவரும் அதிகாரத்திலிருந்து தனியே நீக்கிப் பார்த்தால் அவை தங்களது அமைவுப் பொருளை இழந்து, தங்களுக்கே உரிய மூதுரைப் பொருளை மட்டும் தந்து ஒரு தனிப் பழமொழி போல் ஒலிக்கவல்லவை.{{sfn|Zvelebil|1973|pp=158–163}} தனித்து நிற்கையில் குறட்பாக்கள் ஒவ்வொன்றும் குறுகிய வெண்பாக்களுக்கே உரிய அனைத்து இலக்கணங்களையும் வெவ்வேறு வகைகளில் கொண்ட நன்னெறிப் பாக்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றன.{{sfn|Zvelebil|1973|pp=158–163}} அதிகாரங்களுக்குள் பயின்று வருகையில் குறட்பாக்கள் தங்களது இயல்பான மூதுரைப் பொருளோடு தாங்களிருக்கும் அதிகார அமைப்பின் வழி வரும் அமைவுப் பொருளையும் சேர்த்து உரைத்து நூலாசிரியரின் உள்ளப்பாங்கினை வெளிப்படுத்துவதாய் உள்ளன.{{sfn|Zvelebil|1973|pp=158–163}} இவ்வகையில் குறள்கள் வெறும் நீதிக்கருத்துக்களைக் கூறும் தனிப்பாக்களாக மட்டும் இருந்துவிடாமல் நூல்முழுதும் இழைந்து வரும் அடிப்படை அறத்தின் ஆழ்பொருளை முழுமையாக அகழ்ந்தெடுத்துத் தரும் பாக்களாக உருமாறுகின்றன.{{sfn|Zvelebil|1973|pp=158–163}} இவ்வகையில் நூலின் நடையானது ஒரு முழுமையற்ற மனிதனை அறங்கள் கொண்டு செதுக்கி அவனை உணர்வு, சிந்தனை, சொல், செயல் என அனைத்து அளவிலும் அகவாழ்வில் அறம் பிறழாத நல்ல இல்லறத்தானாகவும் புற வாழ்வில் சிறந்த குடிமகனாகவும் மாற்றுகிறது என்கிறார் ஸ்வெலெபில்.{{sfn|Zvelebil|1973|p=159}}
 
== நூலின் அமைப்பு ==
788

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3207754" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி