பயனர் பேச்சு:Bhagya sri113

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Bhagya sri113, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- கி.மூர்த்தி (பேச்சு) 12:16, 17 நவம்பர் 2017 (UTC)[பதில் அளி]

September 2021[தொகு]

Information icon வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவில் யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், தக்க காரணமின்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக்கூடாது. விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையின் தலைப்பு சரியானதாகவும் மற்றும் துல்லியமானதாகவும், அனைவரும் எளிதில் அறிந்து கொள்வதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு நடப்பு பெயர் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்றால் பொதுவாக, ஒரு பக்கம் ஒரு புதிய தலைப்புக்கு நகர்த்தப்பட வேண்டும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக ஏனைய பயனருடன் உரையாடல் இன்றி பக்கத்தின் தலைப்பை நகர்த்துவது என்பது விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எதிரானதும் அனுமதிக்கப்படாததும் ஆகும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. AntanO (பேச்சு) 01:36, 26 செப்டம்பர் 2021 (UTC)[பதில் அளி]

வணக்கம், ஐயா. பெருந்தொகை வெண்பா 1538-ல் "தாமத்தர்" என்றே உள்ளதால் (M. Arunachalam (1970). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு. Chennai: The Parker, Tamil Research and Publishing Group (Revised edition, 2005)) தான் பக்கத்தின் பெயரினை மாற்றினேன். அதையும் அப்பக்கத்தின் "பேச்சு" பகுதியில் குறிப்பிட்டுள்ளேன். அவ்வெண்பா தங்கள் பார்வைக்கு:
தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிதி பரிமே லழகர் திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் — வள்ளுவர்நூற்கு
எல்லையுரை செய்தார் இவர்.
"தாமதத்தர்" என்று எந்த நூலிலும் காணப்படாததால் இதைப் மறுபடியும் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். Bhagya sri113 (பேச்சு) 10:07, 27 செப்டம்பர் 2021 (UTC)[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Bhagya_sri113&oldid=3290480" இருந்து மீள்விக்கப்பட்டது