சாபி அப்டால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டத்தோ ஸ்ரீ பாங்லிமா
சாபி அப்டால்
Yang Berhormat
YB Tuan Shafie Apdal

SPDK PNBS SPMP DMSM DSAP MP MLA
சபா முதலமைச்சர் பதவியில் (2018)
15-ஆவது சபா முதலமைச்சர்
பதவியில்
12 மே 2018 – 29 செப்டம்பர் 2020
மலேசிய தகவல் அமைச்சின்
நாடாளுமன்றச் செயலாளர்
பதவியில்
1995–1999
மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு
துணை அமைச்சர்
பதவியில்
1999–1999
மலேசிய தற்காப்பு
துணை அமைச்சர்
பதவியில்
1999–2004
மலேசிய உள்நாட்டு வணிகம்
வாழ்க்கைச் செலவு அமைச்சர்
பதவியில்
2004–2008
மலேசிய சுற்றுலா, கலை மற்றும்
பண்பாட்டு அமைச்சர்
பதவியில்
2008–2009
மலேசிய ஊரக மற்றும்
வட்டார வளர்ச்சி அமைச்சர்
பதவியில்
2009–2015
மக்களவை (மலேசியா)
பாரிசான் நேசனல் வாரிசான்
பதவியில்
1995–2016
சபா மாநில சட்டமன்றம்
வாரிசான்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2018
தனிநபர் தகவல்
பிறப்பு Mohd. Shafie bin Apdal
20 அக்டோபர் 1956 (1956-10-20) (அகவை 67)
செம்பூர்ணா, பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி (இப்போது சபா, மலேசியா)
குடியுரிமை மலேசியர்
அரசியல் கட்சி ஐக்கிய சபா தேசிய அமைப்பு (USNO) (1983–1995)
அம்னோ (UMNO) (1995–2016)
வாரிசான் தலைவர் (2016 தொடக்கம்)
பிற அரசியல்
சார்புகள்
பாரிசான் நேசனல் (BN) (1983-2016)
பாக்காத்தான் அரப்பான் (PH) (2016 தொடக்கம்)
வாழ்க்கை துணைவர்(கள்) சுரியானி சுவாய்ப் Shuryani Shuaib
பிள்ளைகள் 6
கல்வி சபா கல்லூரி கோத்தா கினபாலு
விக்டோரியா கல்விக்கழகம்
படித்த கல்வி நிறுவனங்கள் இசுடாபோர்ட்சயர் பல்கலைக்கழகம், லண்டன் (பொருளாதாரத்தில் இளங்கலை)
பணி அரசியல்வாதி
கையொப்பம்

டத்தோ ஸ்ரீ பாங்லிமா சாபி அப்டால் (ஆங்கிலம்; மலாய்: Mohd Shafie bin Apdal; சீனம்: 赛夫丁纳苏迪安; சாவி: محمد ساڤي بن أفضل; (பிறப்பு: 20 அக்டோபர் 1956) என்பவர் 2018 மே மாதம் முதல் 2020 செப்டம்பர் மாதம் வரை மலேசியா, சபா மாநிலத்தின் 15-ஆவது சபா முதலமைச்சர் பதவி வகித்தவர் ஆகும்.

சபா மாநிலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு 2016 அக்டோபர் 17-ஆம் தேதி சபா பாரம்பரிய கட்சி (ஆங்கிலம்: Sabah Heritage Party மலாய்: Parti Warisan Sabah) எனும் கட்சியை சாபி அப்டால் உருவாக்கினார். அந்தக் கட்சியின் தலைவராக தலைமை தாங்கி வருகிறார்.

1995-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து சபா, செம்பூர்ணா மக்களவை தொகுதியின் (Semporna Federal Constituency) மலேசியநாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக (MP) பொறுப்பு வகிக்கும் இவர் மலேசிய அமைச்சரவையில் பல்வேறு அமைச்சுகளிலும் சாபி அப்டால் பணியாற்றியவர்.

பொது[தொகு]

மலேசிய நாடாளுமன்றம்; மலேசிய மாநிலங்களின் சட்டமன்றங்கள் ஆகியவற்றில் சாபி அப்டால் வகித்த பதவிகள்:

சபா முதலமைச்சர் பதவி[தொகு]

நாடாளுமன்றச் செயலாளர் பதவி[தொகு]

துணை அமைச்சர் பதவிகள்[தொகு]

அமைச்சர் பதவிகள்[தொகு]

மலேசிய நாடாளுமன்றம்[தொகு]

சபா மாநில சட்டமன்றம்[தொகு]

வாழ்க்கை வரலாறு[தொகு]

முகமது சாபி அப்டால் 1956-ஆம் ஆண்டு மலேசியா, சபா, செம்பூர்ணா மாவட்டம், செம்பூர்ணாவில் (Semporna) பஜாவு மக்கள் (Bajau) வம்சாவளி குடும்பத்தில் பிறந்தார். சபாவின் எட்டாவது முதலமைச்சராகவும்; அதன் முன்னாள் ஆளுநராகவும் இருந்த சக்காரான் தண்டாய் (Sakaran Dandai) என்பவரின் ஒன்றுவிட்ட மகன் (Nephew) ஆவார்.[2]

சாபி அப்டால் தன் இடைநிலைக் கல்வியை கோலாலம்பூரில் உள்ள விக்டோரியா கல்விக் கழகத்தில் (Victoria Institution) முடித்தார். மேலும் தன் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை கோத்தா கினபாலுவில் உள்ள சபா கல்லூரியில் பயின்றார். பின்னர் லண்டன் வணிகக் கல்லூரியில் (London Business College) கப்பல் மேலாண்மைத் துறையில் பட்டயம் படிப்பைப் பெற்றார். 1992 இல், இங்கிலாந்தின் இசுடாபோர்ட்சயர் பல்கலைக்கழகத்தில் (Staffordshire University), பொருளாதாரத்தில் இளங்கலை பெற்றார்.

அரசியல்[தொகு]

சாபி அப்டால் தன் அரசியல் வாழ்க்கையை ஐக்கிய சபா தேசிய அமைப்பு கட்சியின் (USNO) மூலம் தொடங்கினார். அந்தக் கட்சி 1994-இல் கலைக்கப்பட்டது. அதன் பின்னர் சாபி அப்டால் அம்னோவில் இணைந்தார்.

1995-இல் அவர் செம்பூர்ணா (மக்களவை தொகுதி) (Semporna Federal Constituency) அம்னோ உறுப்பினராக மலேசிய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.

விருதுகள்[தொகு]

மலேசிய விருதுகள்[தொகு]

  • மலாக்கா :
    • மலாக்கா மாநில ஆளுநர் விருது (DMSM) – Datuk (2002)
  • பகாங் :
    • பகாங் அரச மாளிகை விருது (DSAP) - Dato' (2003)[3]
  • சபா :
    • சபா மாநில ஆளுநர் விருது (PGDK) - Datuk (1994) [5]
    • சபா மாநில ஆளுநர் விருது (SPDK) - Datuk Seri Panglima (2011)[6]
  • சரவாக் :
    • சரவாக் மாநில ஆளுநர் விருது (PNBS) - Dato Sri (2014)[7]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாபி_அப்டால்&oldid=3728098" இருந்து மீள்விக்கப்பட்டது