சபா மாநில முதலமைச்சர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசியாவில், 13 மாநிலங்கள் உள்ளன. அவற்றுள் சபா என்பது ஒரு மாநிலம் ஆகும். அந்த மாநிலத்தில் இதுவரையில் 13 முதலமைச்சர்கள் பதவி வகித்துள்ளனர். இவர்களில் துன் புவாட் ஸ்டீபன்ஸ் என்பவர் இரு தவணைகள் பொறுப்பில் இருந்துள்ளார். அரசாங்கத்தின் நிர்வாகத் தலைவராக முதலமைச்சர் செயல்படுகின்றார். அதைத் தவிர, அவர் மாநில அமைச்சரவையின் தலைவராகவும் இருக்கின்றார்.

மாநில சட்டப் பேரவையில் பெரும்பான்மை வகிக்கும் கட்சியில் இருந்து முதலமைச்சர் தேர்வு செய்யப்படுகின்றார். ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சபா மாநிலத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படுகின்றது. 16.09.1963 முதல் தற்போது வரையில் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியல்:

# முதலமைச்சர் பதவியில் வெளியானது கட்சி
1 துன் புவாட் ஸ்டீபன்ஸ் (முதல் தவணை) 16.09.1963 31.12.1964 பாரிசான் நேசனல் (தேசிய ஐக்கிய கடாசான் அமைப்பு)
2 பீட்டர் லோ சுய் இன் 01.01.1965 12.05.1967 பாரிசான் நேசனல் (சபா சீனர் சங்கம்)
3 முஸ்தபா ஹரூண் 12.05.1967 01.11.1975 பாரிசான் நேசனல் (அஸ்னோ)
4 முகமட் சையட் கெருவாக் 01.11.1975 18.04.1976 பாரிசான் நேசனல் (அஸ்னோ)
5 துன் புவாட் ஸ்டீபன்ஸ் (2ஆம் தவணை) 18.04.1976 06.06.1976 பாரிசான் நேசனல் (பெர்ஜாயா)
6 ஹாரிஸ் சாலே 06.06.1976 22.04.1985 பாரிசான் நேசனல் (பெர்ஜாயா)
7 ஜோசப் பைரின் கித்திங்ஙான் 22.04.1985 17.03.1994 சபா ஒற்றுமைக் கட்சி
(1985–1986)
பாரிசான் நேசனல் (சபா ஒற்றுமைக் கட்சி)
(1986–1990)
சபா ஒற்றுமைக் கட்சி
(1990–1994)
8 சக்கரான் டாண்டாய் 17.03.1994 27.12.1994 பாரிசான் நேசனல் (அம்னோ)
9 சாலே சையட் கெருவாக் 27.12.1994 28.05.1996 பாரிசான் நேசனல் (அம்னோ)
10 யோங் தெக் லீ 28.05.1996 28.05.1998 பாரிசான் நேசனல் (முன்னேற்றக் கட்சி)
11 பெர்ணார்ட் டொம்போக் 28.05.1998 14.03.1999 பாரிசான் நேசனல் (உப்கோ)
12 ஓசு சுக்காம் 14.03.1999 27.03.2001 பாரிசான் நேசனல் (அம்னோ)
13 சோங் கா கியாட் 27.03.2001 27.03.2003 பாரிசான் நேசனல் (மலேசிய முற்போக்கு மக்களாட்சி கட்சி)
14 மூசா அமான் 27.03.2003 தற்போது வரையில் பாரிசான் நேசனல் (அம்னோ)