உள்ளடக்கத்துக்குச் செல்

சாந்தி தவே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்தி தவே
பிறப்பு25 செப்டம்பர் 1931
பத்புரா, குசராத்து, இந்தியா
பணிஓவியர்
அறியப்படுவதுஓவியம், சுவர் ஓவியம்
அரசியல் இயக்கம்பரோடா குழுமம்[1]
விருதுகள்பத்மசிறீ

சாந்தி தவே (Shanti Dave) ஓர் இந்திய ஓவியரும் சிற்பியுமாவார்.[1] இருபதாம் நூற்றாண்டின் முக்கிய இந்தியக் கலைஞர்களில் ஒருவராக பலரால் கருதப்படுகிறார்.[2] இவர் லலித் கலா அகாதமி மற்றும் சாகித்ய கலா பரிசத்தின் முன்னாள் உறுப்பினர்.[3] 1985 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு நான்காவது மிக உயர்ந்த கௌரவமான பத்மசிறீ விருதை வழங்கியது.[4]

சுயசரிதை

[தொகு]

சாந்தி தவே 1931 செப்டம்பர் 25 அன்று வடக்கு குசராத்து கிராமமான பத்புராவில் ஒரு கிராமப்புறக் குடும்பத்தின் நான்கு குழந்தைகளில் ஒருவராக பிறந்தார்.[5] 1951 ஆம் ஆண்டில் பரோடாவின் மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் நுண்கலை பீடத்தில் இளங்கலை பட்டப்படிப்பையும் முதுகலை படிப்பையும் முடித்தார்.[3]

தொழில்

[தொகு]

இவர் ஒரு வணிகக் கலைஞராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் மெதுவாக ஒரு ஓவியராக தனது அடையாளத்தை வெளிப்படுத்தினார். நியூயார்க்கு நகரம் ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையத்திலும், ஏர் இந்தியாவின் பிராங்க்ஃபுர்ட் மற்றும் சிட்னியிலுள்ள அலுவலகங்களில் முக்கிய விருந்தினர் வருகை புரியும் வாயில்களிலும் இவர் வரைந்த சுவரோவியங்கள் குறிப்பிடத்தக்கது.[5] விமான நிலையத்தில் உள்ள சுவரோவியத்தை த நியூயார்க் டைம்ஸ் அதன் முதல் பக்கத்தில் பிப்ரவரி 5, 1964 அன்று லிட்டில் குசராத் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.[3]

பாணி

[தொகு]

இவரது படைப்புகள் சுருக்கமானவை எனக் கூறப்படுகின்றன. மேலும் வனப்பெழுத்து மற்றும் எண்ணெய் வண்ணப்பூச்சு நுட்பங்களுடன் மெழுகு மற்றும் மெழுகு ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. மர ஓவியம், கல்லில் செதுக்குதல் மற்றும் நெசவு ஆகியவற்றை உள்ளடக்கிய பல சுவரோவியங்களை இவர் செய்துள்ளார்.[3] இவர் 1957ஆம் ஆண்டில் தனது முதல் தனி கண்காட்சியை நடத்தினார். அதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும், பிலிப்பீன்சு, சுவிட்சர்லாந்து, இலண்டன், யப்பான், பிரான்சு, கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு போன்ற இடங்களிலும் பல குழுக் கண்காட்சிகளில் பங்கேற்றார்.[5] கலைக்கூடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[6] மேலும் இவரது ஓவியங்கள் கிறிஸ்டி and Sotheby's[6], சோதேபி , போன்ஹாம்ஸ் போன்ற குறிப்பிடத்தக்க ஏல நிறுவனங்களில் விற்கப்பட்டுள்ளன.[7]

பதவிகள்

[தொகு]

இவர், சாகித்ய கலா பரிசத்தின் முன்னாள் உறுப்பினராகவும், லலித் கலா அகாதமியின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.[5] இவர் 1956 முதல் 1958 வரை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் லலித் கலா அகாடமியில் இருந்துள்ளார்.[5] 1985 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "His name is listed as Baroda Group of Artists' fifth annual exhibition of paintings by". Asia Art Archive.
  2. 3.0 3.1 3.2 3.3 "F Hessler Art Collection". F Hessler Art Collection. 2015. Archived from the original on 22 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 4.0 4.1 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 18 June 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. 5.0 5.1 5.2 5.3 5.4 "Saffron Art". Saffron Art. 2015. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015.
  5. 6.0 6.1 "Mutual Art". Mutual Art. 2015. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015.
  6. "Bonhams". Bonhams. 2015. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தி_தவே&oldid=3929690" இலிருந்து மீள்விக்கப்பட்டது