காந்தி படைப்பிரிவு
காந்தி படைப்பிரிவு (Gandhi Brigade ) அல்லது 2 வது கெரில்லா படைப்பிரிவு என்பது இந்திய தேசிய இராணுவத்தில் முதலில் உருவான பிரிவாகும். பின்னர் சுபாஷ் சந்திர போஸின் கீழ் புத்துயிர் பெற்ற பின்னர் 1 வது பிரிவின் ஒரு பகுதியை உருவாக்கியது.
இது செப்டம்பர் 1942 இல் உருவாக்கப்பட்டது. இந்த பிரிவு கோல் இனாயத் கியானியின் தலைமையின் கீழ் இரண்டு காலாட்படை படைப்பிரிவைக் கொண்டிருந்தது. 1 வது படைப்பிரிவை தளபதி மாலிக் முனவர் கான் அவான் தலமையேற்றார். இது இந்திய தேச இராணுவத்தின் இம்பால் சண்டையில் பங்கேற்றது. அங்கு முனவர் ஆரம்பத்தில் 16 வது இந்திய காலாட்படை பிரிவை விரட்டியடித்தார் . மேலும், அடிக்கடி பதுங்கியிருந்து தாக்கி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தினார். இது பின்னர் 1944 இல் ஷா நவாஸ் கானின் தலைமையில் வெற்றிகரமான நேச நாட்டு பர்மா சண்டைக்கு எதிராக ஐராவதியைச் சுற்றி போராடியது.
மேற்கோள்கள்
[தொகு]- Fay, Peter W. (1993), The Forgotten Army: India's Armed Struggle for Independence, 1942-1945. Ann Arbor, University of Michigan Press., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-472-08342-2