அரசு கலை அறிவியல் கல்லூரி, மானூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு கலை அறிவியல் கல்லூரி, மானூர்
வகைஅரசு, கலை அறிவியல் கல்லூரி
உருவாக்கம்2022 சூலை
சார்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்வனஜா
அமைவிடம், ,

அரசு கலை அறிவியல் கல்லூரி, மானூர் (Government Arts and Science College, Mannur) என்பது திருநெல்வேலி மாவட்டம், மானூரில் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி 2022 சூலை மாதம் தமிழக அரசால் துவக்கப்பட்டது.[1] இக்கல்லூரி முதலில் தற்காலிகமாக மானூர் ஒன்றியம் மேலப்பிள்ளையார் குளம் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் இயங்கிவருகிறது. இக்கல்லூரி 2022-23 கல்வி ஆண்டில் ஐந்து பாடப்பிரிவுகளுடன் செயல்படுகிறது.[2]

நிலையான வளாகம்[தொகு]

இக்கல்லூரிக்கு நிலையான கட்டிடம் கட்ட திருநெல்வேலி-சங்கரன்கோயில் நெடுஞ்சாலையில் மதவக்குறிச்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் கல்லூரி இங்கிருந்து செயல்படும்.[3]

பாடப்பிரிவுகள்[தொகு]

இளங்கலை[தொகு]

  • தமிழ்,
  • ஆங்கிலம்

இளநிலை அறிவியல்[தொகு]

  • கணிதம்
  • கணினி அறிவியல்

இளநிலை[தொகு]

  • வணிகவியல்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "20 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் - முதல்வர் தொடங்கிவைத்தார்!" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-07-07. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.
  2. "மானூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி திறப்பு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.
  3. தினத்தந்தி (2022-07-08). "மானூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடக்க விழா- சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.

வெளியிணைப்புகள்[தொகு]