உள்ளடக்கத்துக்குச் செல்

சுக்கூர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 27°40′N 69°30′E / 27.667°N 69.500°E / 27.667; 69.500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுக்கூர் மாவட்டம்
ضلعو سکر
மாவட்டம்
சிந்து மாகாணத்தில் சுக்கூர் மாவட்டம்
சிந்து மாகாணத்தில் சுக்கூர் மாவட்டம்
ஆள்கூறுகள்: 27°40′N 69°30′E / 27.667°N 69.500°E / 27.667; 69.500
நாடுபாகிஸ்தான்
மாகாணம்சிந்து
தலைமையிடம்சுக்கூர்
வருவாய் வட்டங்கள்4
பரப்பளவு
 • மொத்தம்5,165 km2 (1,994 sq mi)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
இணையதளம்www.sukkur.gov.pk

சுக்கூர் மாவட்டம் (Sukkur district) (சிந்தி மொழி: ضلعو سکر‎), (உருது: ضِلع سکّھر ‎), பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் சுக்கூர் ஆகும். இம்மாவட்டம் 5 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.

சுக்கூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 1977-இல் சிகார்பூர் மாவட்டமும், 1993-இல் கோத்கி மாவட்டமும் புதிதாக நிறுவப்பட்டது.

இம்மாவட்டத்தில் சிந்துவெளி நாகரிகம் தொடர்பான லெக்கூஞ்சதாரோ எனும் தொல்லியல் மேடு உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]
சுக்கூர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள், ஒன்றியக் குழுக்கள் மற்றும் கிராமங்கள்
வருவாய் வட்டம் மக்கள்தொகை
(2017)
பரப்பளவு
(km²)
ஒன்றியக் குழுக்கள் கிராமங்கள்
சுக்கூர் 551,357 300 26 50
ரோகிரி 371,104 1319 12 400
சலே பாத் 129,619 2339 03 250
பனோ அகில் 435,823 1233 12 450
மொத்தம் 1,487,903 5165 54 1150

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, 5,216 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சுக்கூர் மாவட்டத்தின் மக்கள்தொகை 14,87,903 ஆகும். அதில் ஆண்கள் 7,76,259, பெண்கள் 7,11,587, திருநங்கைகள் 57 ஆகவுள்ளனர். [3][4]மக்கள்தொகையில் 48.398% நகர்புறங்களில் வாழ்கின்றனர்.[5]

சிந்து ஆற்றின் மேல் இருப்புப் பாதை பாலம், சுக்கூர் நகரம்

சுக்கூர் மாவட்டத்தில் 96% இசுலாமியர்களும், 3.28% இந்துக்களும், 0.51% கிறித்தவர்களும், மற்றவர்கள் 0.18% வாழ்கின்றனர். சுக்கூர் மாவட்ட மக்களில் 74.07% சிந்தி மொழியும், 13.82% உருது மொழியும், 6.63% பஞ்சாபி மொழியும், 1.47% பலூச்சி மொழியும், 0.99% சராய்கி மொழியும், பிற மொழி பேசுவோர் 1.49% ஆகவுள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. PCO 1999, ப. 1.
  2. "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (PDF). www.pbscensus.gov.pk. Archived from the original (PDF) on 2017-08-29.
  3. "Pakistan Bureau of statistics-Summary Population Census-2017". 3 January 2018. Archived from the original on 7 மே 2020. பார்க்கப்பட்ட நாள் 8 அக்டோபர் 2019.
  4. [https://www.citypopulation.de/php/pakistan-admin.php?adm2id=818 SUKKUR District in Pakistan]
  5. "Sukkur census tables" (PDF). table 10, p. 34. Archived from the original (PDF) on 2019-08-04. பார்க்கப்பட்ட நாள் 2017-12-25.

உசாத்துணை

[தொகு]
  • 1998 District census report of Sukkur. Census publication. Vol. 41. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1999.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்கூர்_மாவட்டம்&oldid=3584244" இலிருந்து மீள்விக்கப்பட்டது