ஆகத்து 20: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
12:39, 19 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்
<< | ஆகத்து 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMXXIV |
ஆகத்து 20 (August 20) கிரிகோரியன் ஆண்டின் 232 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 233 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 133 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 636 – அரபுப் படைகள் பைசண்டைன் பேரரசிடம் இருந்து சிரியா, பாலஸ்தீனம் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
- 1000 – ஹங்கேரி நாடு முதலாம் ஸ்டீபன் என்பவனால் உருவாக்கப்பட்டது.
- 1866 – அமெரிக்க அதிபர் அண்ட்ரூ ஜோன்சன் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
- 1914 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சை ஜேர்மனியப் படைகள் கைப்பற்றின.
- 1917 – இலங்கையில் ஒரு ரூபாய்த் தாள் வழங்கப்பட்டது.
- 1940 – மெக்சிக்கோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் ரஷ்யப் புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி படுகாயமுற்று அடுத்த நாள் மரணமானார்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: ருமேனியா மீது சோவியத் ஒன்றியம் தாக்குதலை ஆரம்பித்தது.
- 1948 – இலங்கை குடியுரிமை சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 700,000 இற்கும் அதிகமான (மொத்த மக்கள்தொகையில் 11%) இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.
- 1953 – ஐதரசன் குண்டைத் தாம் சோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
- 1960 – செனெகல் மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.
- 1968 – பனிப்போர்: 200,000 வார்சா ஒப்பந்த நாடுகளின் படைகள் செக்கோஸ்லவாக்கியாவினுள் புகுந்தன.
- 1975 – நாசா வைக்கிங் 1 விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.
- 1977 – நாசா வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.
- 1988 – ஈரான் – ஈராக் போர்: 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.
- 1991 – எஸ்தோனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது.
- 1997 – அல்ஜீரியாவில் 60 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2006 – அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006: கத்தோலிக்க அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் அல்லைப்பிட்டியில் காணமால் போனார்கள்.
- 2006 – நமது ஈழநாடு பணிப்பாளர், முன்னாள் யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமகராஜா சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
பிறப்புகள்
- 1685 – பரூக்சியார், முகலாயப் பேரரசர் (இ. 1719)
- 1719 – கிறித்தியன் மேயர், செக் நாட்டு வானியலாளர் (இ. 1783)
- 1890 – எச். பி. லவ்கிராஃப்ட், அமெரிக்க எழுத்தாளர், கவிஞர் (இ. 1937)
- 1910 – ஈரோ சாரினென், கேட்வே ஆர்ச்சை வடிவமைத்த பின்லாந்து-அமெரிக்க கட்டிடக்கலைஞர் (இ. 1961)
- 1913 – ரோஜர் ஸ்பெர்ரி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1994)
- 1944 – ராஜீவ் காந்தி, இந்தியாவின் 6வது பிரதமர் (இ. 1991)
- 1946 – நா. ரா. நாராயணமூர்த்தி, இந்தியத் தொழிலதிபர்
- 1951 – முகம்மது முர்சி, எகிப்தின் 5வது அரசுத்தலைவர்
- 1974 – ஏமி ஆடம்சு, அமெரிக்க நடிகை
- 1983 – ஆண்ட்ரூ கார்பீல்ட், அமெரிக்க-ஆங்கிலேய நடிகர்
- 1984 – மதுமிதா, இந்திய நடிகை
- 1992 – டெமி லோவாடோ, அமெரிக்கப் பாடகி, நடிகை
இறப்புகள்
- 984 – பதினான்காம் யோவான் (திருத்தந்தை)
- 1572 – மிகுவெல் உலோபசு டி லெகாசுபி, எசுப்பானிய அரசியல்வாதி, பிலிப்பீன்சின் 1வது ஆளுநர் (பி. 1502)
- 1854 – பிரீடரிக் ஷெல்லிங், செருமானிய மெய்யியலாளர் (பி. 1775)
- 1912 – வில்லியம் பூத், இரட்சணிய சேனையை உருவாக்கிய ஆங்கிலேயர் (பி. 1829)
- 1914 – பத்தாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1835)
- 1915 – கார்லோஸ் பின்லே, கியூபா மருத்துவர், ஆய்வாளர் (பி. 1833)
- 1943 – மயிலை சின்னத்தம்பிப் பிள்ளை ராஜா, தமிழக அரசியல்வாதி (பி. 1883)
- 2001 – பிரெட் ஆயில், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1915)
- 2001 – எஸ். கே. பாலகிருஷ்ணன், தமிழக அரசியல்வாதி (பி. 1935)
- 2006 – சி. சிவமகராஜா, இலங்கை ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1938]])
- 2011 – ராம் சரண் சர்மா, இந்திய வரலாற்றாளர் (பி. 1919)
- 2013 – நரேந்திர தபோல்கர், இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. 1945)
- 2014 – பி. கே. எஸ். அய்யங்கார், யோகா ஆசிரியர் (பி. 1918)
- 2014 – அந்தோன் செர்கெயேவிச் புசுலோவ், உருசிய வானியற்பியலாளர், ஊடகவியலாளர் (பி. 1983)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (எசுத்தோனியா, சோவியத்திடம் இருந்து 1991)
- உலகக் கொசு நாள்