உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரோ சாரினென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரோ சாரினென்
Eero Saarinen Edit on Wikidata
பிறப்பு20 ஆகத்து 1910
Kirkkonummi
இறப்பு1 செப்டெம்பர் 1961 (அகவை 51)
ஏன் ஆர்பர்
படித்த இடங்கள்
பணிகட்டடக் கலைஞர், வரைகலைஞர்
வேலை வழங்குபவர்
  • Office of Strategic Services
சிறப்புப் பணிகள்Ingalls Rink, கேட்வே ஆர்ச்
வாழ்க்கைத்
துணை/கள்
Lilian Swann Saarinen, Aline B. Saarinen
குடும்பம்Pipsan Saarinen Swanson
விருதுகள்AIA Gold Medal

ஈரோ சாரினென் (ஆகஸ்ட் 20, 1910 - செப்டெம்பர் 1, 1961) ஒரு புகழ் பெற்ற கட்டிடக்கலைஞரும், உற்பத்திப்பொருள் வடிவமைப்பாளரும் ஆவார். இவர் ஒரு பின்லாந்திய அமெரிக்கர்.

வரலாறு[தொகு]

இவர் பின்லாந்திலுள்ள கேர்க்கோனும்மி (Kirkkonummi) என்னுமிடத்தில் பிறந்தார். இவர் புகழ்பெற்ற பின்லாந்தியக் கட்டிடக்கலைஞரான ஏலியல் சாரினென் என்பாரின் மகன். இவர் மிச்சிகனில் உள்ள கலைகளுக்கான கிரான்புரூக் அக்கடமியில் (Cranbrook Academy of Art) பயின்றார். 1934 ல் யேல் பல்கலைக் கழகத்தில் கட்டிடக்கலையில் இளமாணி (B.Arch) பட்டத்தைப் பெற்றார். 1940 ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டார்.

1948 இல் நடைபெற்ற, ஜெபர்சன் தேசிய விரிவாக்க நினைவகத்துக்கான போட்டியொன்றில் பரிசு பெற்றதன் மூலம், இவர் முன்னணிக்கு வந்தார். ஜெனரல் மோட்டோர் தொழில்நுட்ப மையம், TWA விமானநிலையம் போன்ற புகழ் பெற்ற பல கட்டிடங்களை இவர் வடிவமைத்தார். உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற சிட்னி ஒப்பேரா மண்டபத்தின் வடிவமைப்புக்காக நடத்தப்பட்ட போட்டியில் நடுவராகவும் இவர் பணியாற்றினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரோ_சாரினென்&oldid=2733427" இலிருந்து மீள்விக்கப்பட்டது