உள்ளடக்கத்துக்குச் செல்

ஐதரசன் குண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவம்பர் 1952ஆம் ஆண்டு முதன்முதலாக சோதிக்கப்பட்ட ஐதரசன் குண்டு, ஐவி மைக்.

ஐதரசன் குண்டு (எச்-குண்டு, இணைவு குண்டு அல்லது வெப்ப அணுக்கரு குண்டு எனவும் அறியப்படுவது) இலகுவான அணுக்கருவில் இணைவினால் உண்டாகும் ஆற்றலைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஓர் அணு குண்டு ஆகும்.

டெல்லர்-உலாம் வடிவமைப்பு

[தொகு]
டெல்லர்-உலாம் வடிவமைப்பின் அடிப்படைகள். துவக்கத்தில் நடக்கும் பிளவு குண்டிலிருந்து வெளியாகும் கதிரியக்கம் பிளவு மற்றும் இணைவு எரிபொருள் அடங்கிய உயர்நிலை தொகுப்பிற்கு அழுத்தமேற்படுத்த அத்தொகுப்பில் இரண்டாவது பிளவு வெடிப்பு மூலம் வெப்பம் உண்டாகிறது.

A : பிளவு கட்டம்
B : இணைவு கட்டம்

1. அதிர்வெடி தொகுப்பு
2. யுரேனியம் 238 (« இடைநிலை»)
3. வெற்றிடம் (« மிதத்தல்»)
4. திரித்தியம் வளிமம் (« கூடுதலாக», நீலத்தில்) புளீடோனியம் அலது யுரேனியம் சுற்றியிருக்க
5. பல்தைரீன்
6. யுரேனியம் 238 (« இடைநிலை»)
7. லித்தியம் டியூட்ரைடு 6 (இணைவு எரிபொருள்)
8. புளூடோனியம் (பற்றவைப்பு)
9. எதிரொளிப்பு சட்டகம் (X கதிர்களை இணைவு வினையாக்கம் ஏற்படுமாறு எதிரொளிக்க)

டெல்லர்-உலாம் வடிவமைப்பு (Teller–Ulam design) உலகின் அணு குண்டுகளில் பரவலாக பயன்படுத்தப்படும் அணு ஆயுத வடிவமைப்பு ஆகும்.[1] ஐதரசன் குண்டின் மறைபொருளாக டெல்லர்-உலாம் வடிவமைப்பு கருதப்படுகிறது. இத்தகைய அணுவாயுதங்களில் தங்கள் வெடிப்புத் திறனின் பெரும்பான்மையான ஆற்றலை இவை அணுக்கரு இணைவு ஐதரசனிலிருந்து பெறுவதால் ஐதரசன் குண்டுகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. மேலும் இவை "இரு கட்ட " அணு ஆயுதங்கள், வெப்ப அணுக்கரு குண்டுகள் எனவும் குறிப்பிடப்படுகின்றன. 1951ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் இதன் வரைவிற்கு வழிவகுத்த அங்கேரிய-அமெரிக்கர் எட்வர்ட் டெல்லர் மற்றும் போலந்து-அமெரிக்க கணிதவியலாளர் இசுடானிசுலா உலாம் நினைவாக இந்த வடிவமைப்பு பெயரிடப்பட்டுள்ளது. இது மெகாடன் அளவுள்ள அணுகுண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டாலும் சிறு ஆயுதங்களிலும் இந்த வடிவமைப்பு சிறப்பாக இயங்குகிறது. பெரும் அணு ஆயுத நாடுகளில் இந்த முறையே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. From National Public Radio Talk of the Nation, November 8, 2005, Siegfried Hecker of Los Alamos, "the hydrogen bomb – that is, a two-stage thermonuclear device, as we referred to it – is indeed the principal part of the US arsenal, as it is of the Russian arsenal."

வெளியிணைப்புகள்

[தொகு]
விளக்கங்கள்
வரலாறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரசன்_குண்டு&oldid=3237048" இலிருந்து மீள்விக்கப்பட்டது