அந்தோன் செர்கெயேவிச் புசுலோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2009 இல் அந்தோன் புசுலோவ்

அந்தோன் செர்கெயேவிச் புசுலோவ் (Anton Sergeevich Buslov) (4 நவம்பர் 1983 – 20 ஆகத்து 2014) ஓர் உருசிய வானியற்பியலாளர் ஆவார்.[1] இவர் பெயர்பெற்ற உருசிய வலைப்பூ பதிவாளர்; உருசிய நியூ டைம்சு இதழின் பத்தி எழுத்தாளர்;[2] போக்குவரத்தியல் வல்லுனர். இவர் "வொரோனேழ் குடிமக்கள் போக்குவரத்துத் தொடர் குழு" எனும் அரசு சாரா நிறுவனத்தினை உருவாக்கியவர்; வட்டாரங்களிடை அரசு சாரா நிறுவனமாகிய "நகரும் போக்குவரத்தும்" எனும் அமைப்பின் துணை நிறுவனரும் துணைத் தலைவரும் ஆவார். இவர் முனைவாகச் சமூகச் செயல்பாடுகளில் பங்கேற்றார். நகரப் போக்குவரத்து நிறுவனமாகிய "நகர் 4 மக்கள்" அமைப்பில் போக்குவரத்து வல்லுனராக விளங்கினார்.[3]

அறிவியல் பணிகள்[தொகு]

புசுலோவ் "சூரிய ஒளியன்(Koronas-Foton)" எனும் சூரிய ஆராய்ச்சித் திட்டத்தை உருவாக்கி வளர்த்தவர்களில் ஒருவராவார். இவர் அத்திட்டத்தின் தரவுக் கணிப்பு மையத்தின் தலைமை ஏற்று தகவல் திரட்டி தேக்கிவைத்தார். இவர் இணையாசிரியராக, பல விண்வெளி இயற்பியல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[4]

பொதுவெளிச் செயல்பாடுகள்[தொகு]

இவர் "வொரோனேழ் குடிமக்கள் பொக்குவரத்துத் தொடர் குழு" எனும் அரசு சாரா நிறுவனத்தை நிறுவினார்.[5] இது வொரோனேழின் மிந்தொடர் போக்குவரத்து அமைப்பை அழிப்பதில் இருந்து மீடகப் பாடுபட்டது.[6] இவ்வமைப்பே பின்னர் உருவாகிய "நகரும் போக்குவரத்தும்" எனும் வட்டாரங்களிடையேயான அரசு சாரா நிறுவனத்துக்கும் அடிப்படையானது.

இவர் 2004 இல் Samaratrans.info web-portal எனும் இணைய வலைத்தளத்தையும் உருவாக்கினார்.[7]இது உருசியாவின் சமரா நகர்ப் பொதுப் போக்குவரத்துக்காக ஏற்படுத்தப்பட்டது. இதில் இவர் முனைவாக ஈடுபட்டு அந்தப் போக்குவரத்துத் தளத்தைத் திறமையாக இயக்கினார்.[8] இவர் 2011 தொடக்கத்தில் இருந்தே அந்நகர மேயருடன் தொடர்ந்து கலந்து அறிவுரை பெற்றார்.[9] போக்குவரத்து வல்லுனரான இவர் அதன் அகக்கட்டமைப்பு ஏற்பாடுகளைத் திட்டமிட்டு வடிவமைத்தார்.

இவர் சமரா, கசான், யேகதேரின்பர்கு, நிழ்சுனிநவகோரத் ஆகிய சாலைகளில் ஒளிப்படம் எடுப்பதைத் தடுக்கும் சட்டங்களை அகற்ற உதவினார்.[10][11][12]

"நகர் 4 மக்கள்" அமைப்பில் ந்கரத் திட்டமிடலிலும் போக்குவரத்து வடிவமைப்பதிலும் வல்லவராகிய இவர் 2012 இல் இருந்து மும்முரமாக ஈடுபடலானார்.[3] "நகர் 4 மக்கள்" அமைப்பின் காட்சியரங்கில் இவர் போக்குவரத்து பற்றி பல உரைகளை ஆற்றினார்.[13]

இவர் 2013 இல் மாஸ்கோ இலெனின் வளாக மீள்கட்டுமானத் திட்டத்தில் பங்கேற்றார். இதில் வடமேற்கு நாண் இணைப்புக் கட்டுமானத்தை வுகான் ஆர். வுச்சிக்குடன் இணைந்துமேற்கொண்டார்.[14] இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகப் பேராரியராகப் பணிபுரிந்தார்.

இவர் மாஸ்கோ பெருநகரின் இற்றைப்படுத்திய நிலப்படத்துக்கான ஒப்பந்த ஆவண வரைவாளர்களில் ஒருவராவார்.[15] இவரிடமிருந்து மாநில, நகராட்சி, பொதுமக்கள், வணிகப் போகுவரத்துத் திட்டங்களுக்கான அறிவுரைகள் தொடர்ந்து பெறப்பட்டன.

இதழியல் பணி[தொகு]

இவர் "Sitibum" (Yopolis) வலைத் தகவல் தளத்தின் ஆசிரியர் ஆவார்.[16] இவர் தொடர்ந்து உருசிய நியூ டைம்சு இதழில் பத்திகள் எழுதிவந்தார்.[17] இதில் இவர் புற்றுநோயுடன் போராடிய வரலாற்றைப் பதிவு செய்துள்ளார்.

இவர் 2004இல் லி எனும் வலைப்பூவைத் தொடங்கினார். இது mymaster எனுமினையதளத்தில் இயங்கியது. இதில் இவர் பல்வேறு சமூகச் சிக்கல்களைத் தொட்டுச் சென்றார். அரசியல் சிக்கல்களுக்குத் தீர்வுகளும் தந்தார். உலகின் பல நகர்ங்களுக்குச் சென்ற பட்டறிவுகளையும் புலன் உணர்வுகளையும் விவரித்தார். அந்நகரங்களின் கட்டம்மைப்பையும்போக்குவரத்து முறைகளையும் பற்றியெல்லாம் பகிர்ந்துகொண்டார். கூடுதலாக இதில் புற்றுநோய் பண்டுவத்துக்கான விரிவான தகவல்களை திரட்டித் தந்தார். புற்ருநோயாளிகளின் சிக்கல்களையும் விவாதித்தார்.

இவரது வலைப்பூவில் இருந்து சில சிறப்புக் கட்டுரைகள் மீண்டும் அச்சு ஊடகத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.[18]

புற்றுநோய்[தொகு]

இவருக்கு ஆட்ஜ்கின் நிணநீர்ப் புற்றுநோயமுள்ளமை 2011 ஆம் ஆண்டு மருத்துவ நோய்நாடலில் அறியப்பட்டது. இவருக்கு மாஸ்கோ புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திலும் சமாரா வட்டார மருத்துவப் புற்றுநோய் மையத்திலும் சிகிச்சை அளிக்கப்பட்ட்து. உருசியாவில் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனதால் இவர் நியூயார்க் பிரெசுபிட்டேரிய மருத்துவமனையில் சிகிச்சை பெறக் கேட்டுக்கொண்டார்.இதற்காக இணையத்தில் தன் வலைப்பூ வாசகர்களிடம் நிதி திரட்ட முயன்று, ஒருவாரத்துக்குள் சிகிச்சைக்கு வேண்டிய நிதி திரண்டது.[19][20] ஏறத்தாழ, 30,000 வலைப்பூ வாசகர் நிதி நல்கினர். [21] ஒரு தனியருக்காக, உரூனெட்டில் மிக வேகமாகத் திரண்ட நிதி இதுவேயாகும். சிகிச்சைச் சிக்கல்களால் மீண்டும் அந்த 30,000 பேரிடமும் மீண்டும் நிதி கோர வேண்டியதாயிற்று.[22] கூடுதல் நிதியும் வெற்றியுடன் திரட்டப்பட்டது. எனவே இவர் அம்மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையும் மறுவாழ்வும் பெற்றார். அப்போது பல புற்றுநோயாளிகளுக்கு அறிவுரையும் அறநிலை ஆதரவும் நல்கினார்.[23]

இவர் 2014 ஆகத்து 20 இல் நியூயார்க் நகரில் இறந்தார்.[24]

குடும்பம்[தொகு]

இவரது தந்தையார் ஒரு பொறியாளர்;தாயார் இல்லறங் காத்தவர். இவருக்கு இரு உடன்பிறப்புகள் உண்டு. தம்பியின் பெயர் திமித்ரி; தங்கையின் பெயர் அனசுதாசியா.

இவர் முதலில் 2005 இல் மணம் செதுகொண்டார். இது 2009 இல் மணவிலக்கில் முடியவே, இரண்டாவதாக, 2012 இல் மணம் செய்துகொண்டார்: "நான் என் நட்புப் பெண்ணிடம் என் விருப்பத்தைக் கூறும்போது எனக்குப் புற்றுநோய் இருந்தது தெரியாது. பின்னர் நோய்நாடலில் தெரிய வந்ததும், மருத்துவர்கள் ஒராண்டிலோ அல்லது அரையாண்டிலோ எனது ஆயுள் முடிய வாய்ப்புள்ளதைக் கூறினர்".[25]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Экспериментальный подвал - О том как работают космические аппараты".
 2. "Articles in The New Times".
 3. 3.0 3.1 "city4people.ru".
 4. List of publications of the results of "Koronas-Foton" project (doc)
 5. "Voronezh Citizens for Trams". 2013-09-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-03-12 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Records of the NGO". 2014-10-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-03-12 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Author page of samaratrans.info".
 8. Samara Transport Operator பரணிடப்பட்டது 2017-06-15 at the வந்தவழி இயந்திரம், "About"
 9. "Anton Buslov's interview. First part". Novaya Gazeta v Povolzhye.
 10. ЗАО ИД «Комсомольская правда». "Московский блогер снял запрет на фотосъемку в екатеринбургском метро". ЗАО ИД «Комсомольская правда».
 11. "RIA New Region Yekaterinburg".
 12. "Nizhny Novgorod: you can film video in the metro".
 13. Transport lectures, City 4 People Youtube channel
 14. "Homepage for Vukan Vuchic".
 15. Анна Семенова; Маргарита Верховская. "На схему столичного метро могут вернуть Москву-реку". Известия.
 16. "Publications in Sitibum". Йополис. 2013-09-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-03-12 அன்று பார்க்கப்பட்டது.
 17. "Publications in The New Times".
 18. "Publications at "Novaya Gazeta"".
 19. "Fundraising for Treatment". 2015-07-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-03-12 அன்று பார்க்கப்பட்டது.
 20. ЗАО ИД «Комсомольская правда». "Пусть Антон Буслов поживет подольше". ЗАО ИД «Комсомольская правда».
 21. "Founder of NGO "Voronezh Citizens for Trams Committee" collects 4,5 million rubles for cancer treatment".
 22. "Facebook group dedicated to helping Anton Buslov". Facebook.
 23. "Interview to "Psychologies" newspaper". 2014-01-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-03-12 அன்று பார்க்கப்பட்டது.
 24. Anton Buslov Left Us // The New Times, 20.08.2014
 25. "The New Times: Cancer or No Cancer, What Is the Difference Anyway?". 2013-09-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-03-12 அன்று பார்க்கப்பட்டது.