விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 253: வரிசை 253:
: சிறீ, விக்கிப்பீடியாவில் இணைப்பில்லாத எந்தச்சொல்லின் மீதும் இரட்டைச் சொடுக்குச் செய்யும்போது விக்சனரிக்கு இணைப்பு வருகிறது. தமிழ்க் குரிசில் சொல்வது போல் இது முன்னரே இருந்திருக்கலாம். நான் சொடுக்கிப் பார்த்ததில்லை. தற்செயலாகச் சொடுக்கியபோதே இதை அறிந்தேன். இது ஒரு நல்ல வசதிதான் ஆனால், சொடுக்கும்போது மூலச்சொல்லுக்குச் செல்லும்படி செய்ய வேண்டும். வழி மாற்றுக்களை உருவாக்குவதில் எனக்கும் உடன்பாடு இல்லை. தமிழ்க்குரிசில் சொல்வதுபோல் மென்பொருட்களைப் பயன்படுத்தி இதைச் செய்வது நல்லது. ----[[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 15:21, 13 செப்டம்பர் 2013 (UTC)
: சிறீ, விக்கிப்பீடியாவில் இணைப்பில்லாத எந்தச்சொல்லின் மீதும் இரட்டைச் சொடுக்குச் செய்யும்போது விக்சனரிக்கு இணைப்பு வருகிறது. தமிழ்க் குரிசில் சொல்வது போல் இது முன்னரே இருந்திருக்கலாம். நான் சொடுக்கிப் பார்த்ததில்லை. தற்செயலாகச் சொடுக்கியபோதே இதை அறிந்தேன். இது ஒரு நல்ல வசதிதான் ஆனால், சொடுக்கும்போது மூலச்சொல்லுக்குச் செல்லும்படி செய்ய வேண்டும். வழி மாற்றுக்களை உருவாக்குவதில் எனக்கும் உடன்பாடு இல்லை. தமிழ்க்குரிசில் சொல்வதுபோல் மென்பொருட்களைப் பயன்படுத்தி இதைச் செய்வது நல்லது. ----[[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 15:21, 13 செப்டம்பர் 2013 (UTC)
::மயூரன், இருந்திருக்கலாம் இல்லை! இது ஏற்கனவே இருந்தது, பல முறை தெரியாமல் இரண்டு முறை சொடுக்கி விக்சனரிக்கு இட்டுச் சென்றுள்ளது. ஸ்டெம்மர் என்ற வசதி மூலச் சொல்லில் இருந்து முன்னொட்டு, பின்னொட்டு சேர்த்து சொற்களை உருவாக்கும் கருவி என நினைக்கிறேன். இதைக் கொண்டு சிறப்பாக செயல்படுத்தலாம். பைத்தான் கற்றோருக்கு வசதியாய் இருக்குமாம். nltk என்ற பொதி இதை எளிதாக்கும் என்று வினோத் கூறுகிறார். :) -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 15:51, 13 செப்டம்பர் 2013 (UTC)
::மயூரன், இருந்திருக்கலாம் இல்லை! இது ஏற்கனவே இருந்தது, பல முறை தெரியாமல் இரண்டு முறை சொடுக்கி விக்சனரிக்கு இட்டுச் சென்றுள்ளது. ஸ்டெம்மர் என்ற வசதி மூலச் சொல்லில் இருந்து முன்னொட்டு, பின்னொட்டு சேர்த்து சொற்களை உருவாக்கும் கருவி என நினைக்கிறேன். இதைக் கொண்டு சிறப்பாக செயல்படுத்தலாம். பைத்தான் கற்றோருக்கு வசதியாய் இருக்குமாம். nltk என்ற பொதி இதை எளிதாக்கும் என்று வினோத் கூறுகிறார். :) -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 15:51, 13 செப்டம்பர் 2013 (UTC)
*மயூரநாதன், நீங்கள் [[விக்கிப்பீடியா:விக்சனரி பார்]] கருவியை பயன்படுத்திப் பார்த்திருக்கிறீர்கள் என்று நினைக்கின்றேன்--[[பயனர்:Sankmrt|சங்கீர்த்தன்]] ([[பயனர் பேச்சு:Sankmrt|பேச்சு]]) 16:11, 13 செப்டம்பர் 2013 (UTC)

16:11, 13 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

குறுக்கு வழி:
WP:VP
WP:AM


ஆலமரத்தடியின் கிளைகள்

ஆலமரத்தடி
புதிய தலைப்பு | கவனிக்க | தேடுக

ஆலமரத்தடிக்கு வருக! இங்கு விக்கிப்பீடியா குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புதிய சிந்தனைகள், உதவிக் குறிப்புகள் போன்றவை இடம்பெறுகின்றன. நீங்களும் இப்பக்கத்தில் உங்கள் கருத்துகளைப் பிற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பக்கத்தில் இருக்கும் பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


தொழினுட்பம்
புதிய தலைப்பு | கவனிக்க | தேடுக

இது விக்கிப்பீடியாத் தொழினுட்பம் சார்ந்த செய்திகளுக்கும் சிக்கல்களுக்குமான ஆலமரத்தடி ஆகும். விக்கி மென்பொருளிலுள்ள வழுக்களை முறையிடுவதற்கு, பக்சில்லாவைப் பயன்படுத்தவும்.

தொகுப்பு

காப்பகம் (தொகுப்புகள்)


நிலுவையில் உள்ள பணிகள்



0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17b 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89




வார்ப்புரு:ஆலமரத்தடி இடையிணைப்புகள் .

விக்கி வலைப்பதிவு

தமிழ் விக்கிப்பீடியா/விக்கியூடக வலைப்பதிவை நாம் நெடும் நாள் இற்றை செய்யவில்லை. யாருக்கும் ஈடுபாடு இருப்பின் தெரியப்படுத்தவும். தமிழ் விக்கியூடகச் செய்திகளை வலைப்பதிவின் ஊடாக பகிர்வதன் மூலம் நான் மேலும் பலரைச் சென்றடைய முடியும். இதே போன்று முகநூல், டுவிட்டர் போன்ற பிற சமூக வலைத்தளங்களிலும் செய்தால் பரப்புரைக்கு உதவும். --Natkeeran (பேச்சு) 19:29, 20 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

HTTPS for users with an account

Greetings. Starting on August 21 (tomorrow), all users with an account will be using HTTPS to access Wikimedia sites. HTTPS brings better security and improves your privacy. More information is available at m:HTTPS.

If HTTPS causes problems for you, tell us on bugzilla, on IRC (in the #wikimedia-operations channel) or on meta. If you can't use the other methods, you can also send an e-mail to https@wikimedia.org.

Greg Grossmeier (via the Global message delivery system). 19:44, 20 ஆகத்து 2013 (UTC) (wrong page? You can fix it.)[பதிலளி]

உங்களுக்குத் தெரியுமா இற்றைப் படுத்தல்

இந்த வார உங்களுக்குத் தெரியுமா இற்றைப்படுத்தப்படவில்லை போல் இருக்கிறது. முதற்பக்கத்தில் வேலை நடந்துகொண்டிருக்கிறது வார்ப்புரு வந்துவிட்டது. கவனிக்கவும், விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகத்து 21, 2013 இற்றைப்படுத்தப்படவேண்டும் -- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 04:32, 21 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

முதற்பக்கக் கட்டுரைகள் சிறந்த கட்டுரைகளா?

தமிழ் விக்கிப்பீடியாவில் முதற்பக்கத்தில் இடம் பெறும் முதற்பக்கக் கட்டுரைகளுக்கென்று ஒரு பரிந்துரைப் பக்கம் ஒன்று இருக்கிறது. இங்கு பல கட்டுரைகள் பயனரால் பரிந்துரைக்கப்பட்டு, அந்தப் பயனராலேயே தேர்வு செய்யப்பட்டு “அடுத்து இடம்பெற இருப்பவை” எனும் தலைப்புக்கு நகர்த்தப்பட்டு இருக்கிறது. மேலும் இப்படி தேர்வு செய்யப் பெற்ற கட்டுரைகள் குறிப்பிட்ட பயனரால் தொடங்கப்பட்ட கட்டுரை என்பதுதான் இதில் கூடுதல் வேடிக்கை.

இங்கு “வரும் வார முதற்பக்கக் கட்டுரைகள்” எனும் தலைப்பில், இக்கட்டுரைகளைத் தெரிவு செய்து ஒவ்வொரு ஞாயிறும் முதற்பக்கத்தில் இடும் பொறுப்பை பார்வதி கவனித்து வருகிறார் என்கிற குறிப்பு இடம் பெற்றிருக்கிறது. ஆனால், இங்கு பார்வதிஸ்ரீ கட்டுரைகளைத் தேர்வு செய்வதாகத் தெரியவில்லை. அவர் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தும் பணியை மட்டுமே செய்து வந்திருப்பதாகத் தெரிகிறது.

முதற்பக்கக் கட்டுரையைத் தேர்வு செய்யும் பணியை பார்வதிஸ்ரீ கவனிக்க வேண்டிய நிலையில், குறிப்பிட்ட பயனர் அதைத் தன் வசம் எடுத்துக் கொண்டு செயல்பட்டது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. பரிந்துரைப்பவரே, தேர்வு செய்து கொள்ளும் நிலையில் விக்கிப்பீடியாவின் முதற்பக்கக் கட்டுரைகள் இருப்பது வேதனைக்குரியதாகவும் இருக்கிறது.

தமிழ் கம்ப்யூட்டர் இதழில் நான் எழுதி வரும் “விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க” எனும் தொடருக்கான 18 ஆம் பகுதிக்காக “முதற்பக்கக் கட்டுரைகள்” எனும் தலைப்பில் எழுதுவதற்காக இது தொடர்பான பக்கங்களைப் பார்வையிட்ட போதுதான் இதைக் கண்டறிந்தேன். தமிழ் விக்கிப்பீடியாவில் இடம் பெறும் முதற்பக்கக் கட்டுரைகள் அனைத்தும் குறிப்பிடத் தகுந்த அல்லது சிறந்த கட்டுரைகள் என்று எழுத வேண்டிய நான், வேறு வழியின்றி;

“தமிழ் விக்கிப்பீடியாவில் முதற்பக்கத்தில் இடம் பெற்ற முதற்பக்கக் கட்டுரைகள் அனைத்தும் தரம் உயர்ந்த கட்டுரைகள் என்றோ அல்லது சிறப்புக் கட்டுரைகள் என்றோ கருத வேண்டியதில்லை. இவை முதற்பக்கத்தில் இடம் பெற்ற கட்டுரைகள் அவ்வளவுதான். தமிழ் விக்கிப்பீடியாவில் முதற்பக்கத்தில் இடம் பெற்ற கட்டுரைகளை விடக் கருத்துச் செறிவுடைய, தரம் உயர்ந்த பல கட்டுரைகள் இருக்கின்றன. இவை முதற்பக்கக் கட்டுரையாக இடம் பெறாவிட்டாலும் பலருக்கும் பயனுடைய தகவல்களைக் கொண்டதாக இருக்கின்றன. இக்கட்டுரைகள் பயனர்களால் பரிந்துரைக்கப்படாமலும், பரிந்துரைக்கப்பட்டாலும் ஏதாவது ஒரு குறை தெரிவிக்கப்பட்டு ஏற்புடையதாகக் கருதாத நிலையிலும் இருக்கின்ற கட்டுரைகளாக முடக்கப்பட்டு இருக்கலாம்.

தமிழ் விக்கிப்பீடியாவில் முன்பு, முதற்பக்கக் கட்டுரைகள் பயனர்களால் பரிந்துரைக்கப்படாமல் நிருவாகி ஒருவரால் மட்டும் தேர்வு செய்யப்பட்டு முதற்பக்கத்தில் இடம் பெற்ற போது, அவை ஓரளவு தரமான, குறிப்பிடத்தக்க கட்டுரைகளாக இருந்தன. பரிந்துரைக்கப்படும் நிலை உருவான பின்பு, கட்டுரையைத் தொடங்கியவரே அந்தக் கட்டுரையைப் பரிந்துரைத்து அதை முதற்பக்கக் கட்டுரையாக இடம் பெறச் செய்யும் போக்கு அதிகரித்து விட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட சில கட்டுரைகள் முதற்பக்கக் கட்டுரைகளாக்கப்பட்டிருக்கின்றன. இதனால், முதற்பக்கக் கட்டுரைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் கட்டுரைகளில், தேர்வுக்கு மேலும் சில புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதனைப் பின்பற்றும் நடைமுறை கொண்டு வரப்பட வேண்டும் அப்போதுதான் பல சிறப்புக் கட்டுரைகளை உருவாக்க முடியும் என்று பயனர்கள் பலரும் விரும்புகின்றனர்.”

என்று எழுத வேண்டியதாகி விட்டது. வருந்துகிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 13:26, 26 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

வாக்கெடுப்பை நடத்தலாம் என நினைக்கிறேன். இது நல்ல தீர்வாகும். இதன்மூலம் கருத்து உள்வாங்கப்பட்டு பல வகையிலும் கட்டுரைகளை மேம்படுத்த உதவும் -- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 13:47, 26 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
பரிந்துரையாளரே தான் பரிந்துரைத்த கட்டுரைகளை தெரிவுசெய்வது பொருத்தம் இல்லை என்பது இன்றைய நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய ஒன்றே. முதற்பக்க கட்டுரைகளுக்கு பரிந்துரைக்கப்படும் தெரிவுசெய்யப்படும் கட்டுரைகள் ஒர் அடிப்படைத் தரத்தை எட்டி இருக்க வேண்டும். அது சிறப்புக் கட்டுரை தரத்தில் இருக்க வேண்டும் என்று இல்லை. சுட்டிக் காட்டியதற்கு நன்றி.--Natkeeran (பேச்சு) 15:56, 26 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]


தென்காசி சுப்பிரமணியனின் கருத்து

  1. முதலில் வாக்கெடுப்பு முறைக்கும் தரம் முன்னேற வேண்டும் என்று நினைத்ததற்கும் என் முழு ஆதரவு.
  2. ஆனால் தேனியார் கூறியது போல் பரிந்துரைத்தவரே முதற்பக்கக் கட்டுரையை தகுதிப் படுத்தியது என்று கூறியது நான் தற்போது தேடிப்பார்த்தவரை கூட உண்மை இல்லை. பெப்ரவரி 2012ல் இருந்து கட்டுரைகளை தகுதிப்படுத்தியவர் பார்வதி ஸ்ரீ மட்டுமே. அதற்கு முன்னர் நான் தேடிப் பார்க்கவில்லை. பார்த்தால் இன்னும் உறுதிப்படுத்தலாம் என்றே தோன்றுகிறது. இதை (Ctrl + F) செய்து அதில் வரும் வார முதற்பக்கக் கட்டுரைகள் மற்றும் அடுத்து இடம்பெற இருப்பவை போன்றவற்றை இட்டு தேடினாலே தெரிந்திடும். அப்படி ஒருவேளை அதில் வேறு பயனர்களின் பெயர் வருமாயின் அது வரும்வாரக் கட்டுரைப் பட்டியலில் சென்ற வாரம் காட்சிப்படுத்திய கட்டுரைகளை நீக்கும் பொருட்டும், பிழை திருத்தும் பொருட்டும், வார்ப்புரு தகவலை இற்றைப்படுத்தும் பொருட்டும் செய்யப்பட்ட பங்களிப்புகளே. அதனால் தேனியார் கூறிய பரிந்துரைத்தவரே கட்டுரையை தகுதிப் படுத்தியது, பரிந்துரைக்கப்படும் நிலை உருவான பின்பு, கட்டுரையைத் தொடங்கியவரே அந்தக் கட்டுரையைப் பரிந்துரைத்து அதை முதற்பக்கக் கட்டுரையாக இடம் பெறச் செய்யும் போக்கு அதிகரித்து விட்டது. போன்ற கருததுக்களை அவரே தேடிப்பார்த்து மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறேன்.
  3. கட்டுரைப் பட்டியலில் இன்னும் பரிந்துரைகளை இடுமாறு இரவி நிறைய பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் வார்ப்புரு இட்டிருந்தார். ஆனால் அது பலனளிக்க இல்லை. அதனால் தேனியார் நடக்காத ஒரு செயலுக்கு வருத்தப்படுவதை விட இன்னும் பரிந்துரைகளை தரலாம். இதை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும்.
  4. இந்த விடயத்தில் தேனியார் தன் ஐயப்படும் பயனர் யாரென்று நேராகக் கூறுவது தகும். இல்லை என்றால் வேறு யாராவது தாங்கள் தான் அந்த பயனர் என நினைத்தால் அது தேவை இல்லாத வாக்குவாதங்களை ஏற்படுத்தும். அதனால் உடனடியாக தன் கருத்தை தேனியார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
  5. மேலும் தமிழ், தமிழர் தொடர்பான பகுப்புகளில் உள்ள கட்டுரைகளுக்கும் உங்களுக்கு தெரியுமா தகவல்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது பற்றி அந்தந்த விக்கிப்பீடியாப் பக்கங்களிலேயே உள்ளன. பார்வதிஸ்ரீ வரும் முன்பே இதன் முக்கியத்துவம் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. கனக சிறீதரன் மட்டும் முன்பு ஒரு ஆளாக இருந்து நிறைய பொறுப்புகளை எடுத்துக் கொண்டு செய்து வந்தார். (விக்கிசெய்தியும் சேர்த்து) அதனால் தான் நான் நபர் பற்றிய கட்டுரைகளையே தேர்ந்தெடுத்ததாகவும் அது தனக்கு எளிதாக இருந்ததாகவும் அவரே ஒருபக்கத்தில் கூறியதாகவும் நினைவு. கனக சிறீதரன் பல பொறுப்புகளை செய்து வந்ததால் அதன் பளுவை குறைக்கும் பொருட்டே பார்வதி அதன் பொறுப்பை எடுத்துக் கொண்டார். சிறீதரன் இருந்த போது எல்லாம் நபர் பற்றிய கட்டுரை வாரம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதன்படிப் பார்க்கும் போது மற்ற துறையில் கட்டுரை எழுதுபவர்கள் கட்டுரை காட்சிப்படுத்தப்படாமல் போகலாம் என்று நான் தெரிவித்தேன். அதன்பிறகு தான் முறை வேறு மாதிரி மாற்றப்பட்டது.
  6. நான் விக்கிப்பீடியாவில் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. முதலாம் ஆண்டில் கட்டுரை எண்ணிக்கையில் மட்டுமே என் ஆர்வம் இருந்தது.(500 கட்டுரைகள் வரும் என நினைக்கிறேன்) இரண்டாவது ஆண்டு புதுக்கட்டுரைகள் எழுதுவதை 90% குறைத்துவிட்டேன். அதன்பிறகு என் அனைத்து ஆர்வமும் இலக்கும் முதற்பக்க கட்டுரை நோக்கி தான் இருந்தது. நான் முதலாண்டு எழுதிய கட்டுரைகளில் இருந்து தமிழ் தமிழர் தொடர்பான கட்டுரைகளை தேர்ந்தெடுத்து விரிவாக்கி பல நூல்களில் இருந்து தகவல்களைத் தேடி மேற்கோள் கொடுத்து விரிவாக்கி பரிந்துரைத்து அந்த கட்டுரையில் உள்ள சிறப்பு அம்சங்களை பரிந்துரைகளின் வலப்பக்கத்திலேயே தந்துவிடுவது வழக்கம். அதனால் பார்வதியின் வேலைப்பளு குறைந்ததால் அவர் நான் பரிந்துரைத்த கட்டுரையில் கவனம் செலுத்தி அவருக்கு தெரிந்த தகவல்களையும் நூல்களில் இருந்து தேடிப் பிடித்து சேர்த்த கட்டுரைகள் நிறைய. அதனால் தேனியார் மறைமுகமாக குற்றம் சாட்டுவது என்னைத் தான் என்ற ஐயமாக உள்ளது. ஒருவேளை தேனியார் கூறிய பயனர் நானாக இருந்தால் அவருக்கு நான் கூறும் பதில்களும் கேட்கும் கேள்விகளும் இதுதான்.
    1. முதற்பக்கக் கட்டுரைகளைப் பரிந்துறைக்கும் போது பரிந்துரையை மட்டும் தராமல் அதில் உள்ள முக்கிய அம்சங்களை பரிந்துரையின் பக்கத்திலேயே கொடுங்கள். அப்போதுதான் பரிந்துரையை தகுதிப்படுத்துபவர் பழு குறையும்.
    2. இனிமேல் இதைப் போல் பரிந்துரைத்தவரே கட்டுரையை தகுதிப் படுத்தியது போன்ற கருத்துகளை கூறும் முன்பு நன்கு ஆராய்ந்து விட்டுக் கூறவும்.
    3. //பரிந்துரைக்கப்பட்டாலும் ஏதாவது ஒரு குறை தெரிவிக்கப்பட்டு ஏற்புடையதாகக் கருதாத நிலையிலும் இருக்கின்ற கட்டுரைகளாக முடக்கப்பட்டு இருக்கலாம்.// அப்படி செய்யப்பட்ட கட்டுரைகள் குறைவு. அப்படி செய்யப்பட்ட கட்டுரைகளும் தொடர் முயற்சி மூலம் விரிவாக்கப்பட்டு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறை தெரிவிக்கப்பட்ட கட்டுரைகளில் குறையை களைந்து அதை மேம்படுத்தினால் நிச்சயம் அது காட்சிப்படுத்தப்படும். முயற்சி தேவை.
    4. தமிழ். தமிழர் ஆர்வம் செலுத்தும் கட்டுரைகளாக தேர்ந்தெடுத்து அதை விரிவுப்படுத்தி நான் பரிந்துரைத்ததன் விளைவாக மட்டுமே என் பரிந்துரைகள் அதிகம் தேர்ந்தெடுக்கப்பட்டது போல் உங்களுக்கு காட்சியளித்து இருக்கலாம். நான் பரிந்துரைத்த கட்டுரைகளில் அதிகமாக தமிழ், தமிழர் வரலாறு, தொல்லியல் துறை கட்டுரைகளே அதிகம். ஏனென்றால் முதற்பக்க கட்டுரைகள் தான் என் இரன்டாம் ஆண்டு இலக்கு.
    5. // தமிழ் விக்கிப்பீடியாவில் முன்பு, முதற்பக்கக் கட்டுரைகள் பயனர்களால் பரிந்துரைக்கப்படாமல் நிருவாகி ஒருவரால் மட்டும் தேர்வு செய்யப்பட்டு முதற்பக்கத்தில் இடம் பெற்ற போது, அவை ‘’’ஓரளவு தரமான,’’’ குறிப்பிடத்தக்க கட்டுரைகளாக இருந்தன. // ஓரளவு தரமான என்றால் என்ன? அப்படி என்றால் இப்போது காட்சிப்படுத்தப்படும் கட்டுரைகள் எல்லாம் சிறிது கூட தரமில்லதவையா?
    6. // தமிழ் கம்ப்யூட்டர் இதழில் நான் எழுதி வரும் “விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க” எனும் தொடருக்கான 18 ஆம் பகுதிக்காக “முதற்பக்கக் கட்டுரைகள்” எனும் தலைப்பில் எழுதுவதற்காக இது தொடர்பான பக்கங்களைப் பார்வையிட்ட போதுதான் இதைக் கண்டறிந்தேன். தமிழ் விக்கிப்பீடியாவில் இடம் பெறும் முதற்பக்கக் கட்டுரைகள் அனைத்தும் குறிப்பிடத் தகுந்த அல்லது சிறந்த கட்டுரைகள் என்று எழுத வேண்டிய நான், வேறு வழியின்றி; ................ என்று எழுத வேண்டியதாகி விட்டது. வருந்துகிறேன்.// இந்த கருத்துக்கள் கம்யூட்டர் மலரில் காட்சிப்படுத்தப் படப்போகிறது என்றால் உடனே தடுக்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:45, 26 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் ஏன் //..வேறு வழியின்றி// ?? தேவையான கருத்துகளை இங்கு இட்டு வழி வகுக்கலாமே. பற்பல வழிகள் இருக்கும்பொழுது ஏன் 'வேறு வழியின்றி' என்று கூறி இப்படி எதிர்மறையான கருத்தை இடவேண்டும்? முடிந்தால் தேனி சுப்பிரமணி இதனைத் திருத்தி வெளியிட வேண்டும். --செல்வா (பேச்சு) 20:51, 26 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

சிறப்பு/சிறந்த கட்டுரைகள் பற்றி

  1. தேனியார் கொடுத்த தலைப்பே கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும். முதற்பக்கக் கட்டுரைகள் சிறந்த கட்டுரைகளா? முதலில் சிறந்த கட்டுரைகள் எனக் கூறியது சிறப்புக் கட்டுரைகளையா என்று உறுதிப்படுத்த வேண்டுகிறேன்.
  2. //அது சிறப்புக் கட்டுரை தரத்தில் இருக்க வேண்டும் என்று இல்லை.// நக்கீரன் கூறிய இக்கருத்துகளுக்கு என் கேள்வி இது தான். முதலில் சிறப்புக் கட்டுரைத் தரம் பின்பற்றப்படுகின்றனவா? அதிலுள்ள 11 கட்டுரைகளில் உள்ள ஒவ்வொரு வாக்கியத்தையும் மீளாய்வுக்கு உடபடுத்த வேண்டும். சிறப்புக்கட்டுரைகள் அனைத்தும் அனைத்து நிர்வாகிகளின் கவனிப்புப் பட்டியலில் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் தான் அதில் மேற்கோள் தேவை என்று வார்ப்புரு இடப்படும் போது எல்லாம் அதற்கான வாக்கியம் மாற்றப்பட வாய்ப்பு வரும். தற்போதுள்ள சிறப்புக்கட்டுரைகளிலும் பரிந்துரைகளிலும் உள்ள கட்டுரைகளின் தரத்தை முதலில் கவனியுங்கள் அதற்குப் பிறகு நாம் முதற்பக்க கட்டுரைகள் தரம் பற்றி பேசலாம்.
  3. //பரிந்துரையாளரே தான் பரிந்துரைத்த கட்டுரைகளை தெரிவுசெய்வது பொருத்தம் இல்லை// அப்படி யாரும் செய்யவில்லை என்று நக்கீரன் கூறாததற்கு நான் மிக வருந்துகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:45, 26 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

என் நிலைப்பாடு

  1. பரிந்துரைத்தவரே கட்டுரையை தகுதிப் படுத்தியது, பரிந்துரைக்கப்படும் நிலை உருவான பின்பு, கட்டுரையைத் தொடங்கியவரே அந்தக் கட்டுரையைப் பரிந்துரைத்து அதை முதற்பக்கக் கட்டுரையாக இடம் பெறச் செய்யும் போக்கு அதிகரித்து விட்டது. போன்ற கருத்துகள் ஆராயப்படாமல் கூறப்பட்டவை என்பது உறுதி. இந்த இரண்டுக் கருத்துகளை தேனியார் கூறியது தவறு.
  2. தேனியார் கூறிய பயனர் நானா என்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை நானாக இருந்தால் தேனியார் கூறியது தவறானதும் இனி பின்பற்றக் கூடாத கருத்துகளும் ஆகும். இப்படி விக்கிப்பீடியாவில் நிர்வாகியாகவும் அதிகாரியாகவும் இருப்பவர்கள் இடம் உள்ள குறைகளைக் காட்டி நிறைய பேர் விமர்சிக்கப்பட்ட இடத்தில் தன் பங்களிப்புகளை நிறுத்தி விடுவார்கள். சில பேர் விக்கியில் இருந்து விலகிவிடுவார்கள். ஆனால் நான் இரண்டையும் செய்யப்போவதில்லை. இனியும் என் இலக்கு சிறப்புக் கட்டுரையும் முதற்பக்க கட்டுரையும் தான்.
  3. இப்போதும் என்னால் உறுதியாகக் கூற முடியும் நான் பரிந்துரைத்த கட்டுரைகளில் அனைத்தும் முதற்பக்கக் கட்டுரைக்கு ஏற்ப தரமானவையே. பல சிறப்புக் கட்டுரைக்கும் தகுதி பெறும். இதில் எவருக்கும் ஐயம் இருந்தால் தற்போதும் அவற்றை மீள் பரிசோதனை செய்யலாம்.
  4. முதற்பக்கக் கட்டுரையும் சரி சிறப்புக் கட்டுரையும் சரி. அதை தகுதிப்படுத்தும் பயனர்கள் அதிகமானாலும் சரி. விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டாலும் சரி. விதிகள் மாற்றப்பட்ட பிறகும் நான் பரிந்துரைக்க/பங்களிக்கப் போகும் கட்டுரைகள் தான் அதிகம் சிறப்புக் கட்டுரைகளாகவும் முதற்பக்கக் கட்டுரைகளாகவும் தேர்ந்தெடுக்கப் படப் போகின்றன. இது உறுதி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:42, 26 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

இரவியின் கருத்து

வெகு காலம் சிறீதரன் இப்பணியைச் செய்து வந்தார். அதன் பிறகு சில காலம் நான் இப்பொறுப்பை மேற்கொண்டிருந்தேன். அதன் பொருட்டு, ஒருவரே ஒரு பணியைத் தொடர்ந்து செய்யாமல் பலரும் பகிர்ந்து செய்து, தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கு என்று ஒரு பொறுப்பு உள்ளதாக உணர வேண்டும் என்ற அடிப்படையில் இப்பணியைத் தொடர்ந்து செய்ய இயலுமா என்று பார்வதியைக் கேட்டுக் கொண்டேன். அதன் அடிப்படையிலேயே அவர் தொடர்ந்தார். இதற்கான பரிந்துரை முறைகளையும் முன்மொழிந்தேன் என்ற முறையில் சில விளக்கங்களைத் தர விரும்புகிறேன்.

  • முதற்பக்கக் கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவின் சிறந்த கட்டுரைகளாக இருக்கத் தேவையில்லை. சிறப்புக் கட்டுரை தரத்திலும் இருக்கத் தேவையில்லை. தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்க காலத்தில் ஒரு சில பத்திகள் உள்ள கட்டுரைகளைக் கூட முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறோம். தமிழ் விக்கிப்பீடியா வளர வளர, முதற் பக்கக் கட்டுரைகளின் தரமும் பரப்பும் கூடி வருவதாகவே கருதுகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவின் பல்வேறு வகையான உள்ளடக்கத்தை உங்களுக்குத் தெரியுமா, செய்திகளில், இன்று போன்ற பகுதிகளில் காட்சிப்படுத்துவது போலவே இவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதன் காரணமாகவே, வழிசெலுத்தல் பட்டியலில் உள்ள இணைப்புக்கு "தேர்ந்தெடுத்த கட்டுரைகள்" என்று பெயர் இட்டேன். ஏதாவது ஒரு கட்டுரையாக இல்லாமல், இருப்பவற்றில் இருந்து தேர்ந்தெடுத்துக் காட்சிப்படுத்துகிறோம். அவ்வளவு தான்.
  • சிறப்புக் கட்டுரைத் தரத்தை இறுக்கமாக வரையறை செய்து தற்போதைய சிறப்புக் கட்டுரைகளின் தரத்தை மீளாய்வு செய்ய வேண்டும்.
  • விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள்#முதற்பக்கக் கட்டுரைத் தகுதிகள் பக்கத்தில் சில தகுதிகளை முன்மொழிந்துள்ளேன். வேண்டுமானால், மேலும் பல தகுதிகளை அனைவரும் முன்மொழியலாம். இத்தகுதிகள் இல்லாத கட்டுரைகளை விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள்#மேம்பாடு தேவைப்படும் பயனர் பரிந்துரைகள் பகுதியில் சுட்டிக் காட்டுவது அனைவரின் கடமையும் ஆகும். யாரும் சுட்டிக் காட்டாத போது, கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்த போதுமான தரம் உள்ளதாகவே கருதப்படும். காட்சிப்படுத்தும் ஒருவரின் தனிப்பட்ட முடிவைக் காட்டிலும் விக்கி சமூகத்துக்கு இந்த முடிவெடுப்பில் பங்கு இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பரிந்துரை முறையே தொடங்கப்பட்டது.
  • கடந்த ஆறு, ஏழு மாதக் கட்டுரைகளைப் பார்த்த போது பரவலான துறைகளில் இருந்து கட்டுரைகள் காட்சிப்படுத்தப்படுவதாகவே உணர்கிறேன்.

தமிழ், தமிழர், கணிதம் போன்ற ஒரு சில துறைகள் சார்ந்த கட்டுரைகள் மட்டுமே பரிந்துரைக்கப்படுகின்றன, காட்சிப்படுத்தப்படுகின்றன என்பது அக்கட்டுரைகளுக்குப் பங்களிப்போரின் தவறு கிடையாது. அப்படித் தோன்றும் பட்சத்தில், பரிந்துரைப் பட்டியலின் பேச்சுப் பக்கத்தில் சுட்டிக் காட்டி வேண்டுகோள் இட்டிருந்தாலே சரி செய்யப்பட்டிருக்கும். காட்சிப்படுத்துபவர் அடுத்தடுத்து ஒரே மாதிரியான கட்டுரைகள் வராமல் பல்வேறு துறைகளையும் சுழற்சி முறையில் இட்டாலே போதுமானது.

  • மேற்கண்ட இரண்டு படிமுறைகளும் பின்பற்றப்பட்டால் ஒருவரே தான் பெரிதும் பங்களித்த கட்டுரைகளைப் பரிந்துரைத்து, தானே தேர்ந்தெடுத்து, தானே காட்சிப்படுத்துவதும் கூட ஒரு பிரச்சினையே இல்லை. யார் பரிந்துரைக்கிறார்கள், யார் தேர்ந்தெடுக்கிறார்கள், யார் காட்சிப்படுத்துகிறார்கள் என்பதும் பிரச்சினை இல்லை. சர்ச்சையும் தெளிவான கருத்து வேறுபாடுகளும் இருக்கும் இடத்தில் வாக்கெடுப்பு நடத்துவது நன்று. இது போன்ற விசயங்களுக்கு, சரியான வழிமுறைகளை உருவாக்குவதும் பின்பற்றுவதுமே தொடர்ந்து இச்செயற்பாடுகளை நடுநிலையாகச் செய்ய உதவும். ஆகவே, வாக்கெடுப்பு தேவை இல்லை.
  • தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தொடர்பு இல்லாதவர்கள், நம்மைப் புரிந்து கொள்ளாதவர்கள் ஊடகங்களில் விமரிசனக் கருத்துகளை இட்டால் பரவாயில்லை. ஆனால், பங்களிப்பாளர்களாகிய நாம் நமக்குத் தெரியும் குறைகளை இங்கேயே சுட்டிக் காட்டிச் சரி செய்ய முனைவோம். நாம் வெளியில் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தும் போது நிறைகளை மட்டும் அறிமுகப்படுத்துவது நன்றாக இருக்கும். வாசகர்களைக் குழப்பாமலும் இருக்கும்.
  • தென்காசி சுப்பிரமணியன், இந்த உரையாடலைத் தனிப்பட எடுத்துக் கொள்ள வேண்டாம். வழமை போல் தொடர்ந்து சிறப்பாக பங்களியுங்கள். முதற்பக்க இற்றைப்படுத்தல் ஒருங்கிணைப்பிலும் உதவுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 19:10, 26 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

சஞ்சீவி சிவகுமார் கருத்து

  • முதலில் தென்காசி சுப்பிரமணி இக்கருத்துக்குகளை தனிப்பட்ட கருத்துக்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
  • விக்கிப் பங்களிப்பாளர்கள் தங்கள் கருத்துக்களையும் ஐயங்களையும் விக்கியில் விவாதிப்பதும் மேம்படுத்துவதும் தான் பொருத்தம், திறந்த உரையாடலுக்கும் திருத்தம் செய்வதற்கும் விக்கியில் வாய்ப்பிருக்கும் போது வெளியில் நின்று குற்றம் கூறுவது முறையல்ல.
  • பரிந்துரைத்தவர்களே காட்சிப்படுத்தவும் செய்கின்றார்கள், தம் பங்களிப்புகள் அதிகமுள்ள அல்லது தாங்கள் தொடங்கிய கட்டுரைகளையே பரித்துரைக்கின்றார்கள் ஆகிய கருத்துக்களை தேனி சுப்பிரமணி மீள்பரிசீலனை செய்யவேண்டும்,
  • முதற்பக்கத்தை இற்றைப்படுத்துவதில் தனிப்பட்ட பணிப்பழு காரணமாக தாமதங்கள் ஏற்படுதல் முதலான சூழலே த.வி யில் பெரிதும் உள்ளது. இதை தவிக்க நம் முயற்சிகளே பெரிதும் தேவை என்பதையும் பொறுப்புடன் பயனர்கள் உணர வேண்டும். வெளியில் நல்லதையே கொணர்வோம்.தவறுகளை நம்முள் திருத்துவோம். நன்றி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:44, 26 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
தனிப்பட்டவையாக நான் எடுத்துக் கொள்ளாதலால் தான் அதை தவிர்க்க என்ன என்ன செய்ய வேண்டும் (எ.கா. Ctrl+F) என்று கூறினேன். சிறப்புக் கட்டுரைகளின் பரிந்துரைகளை தகுதிப்படுத்தும் போதும் இதே அவசரக் கருத்து கூடாது அல்லவா? என் கருத்து இதைப் போன்ற கருத்துகளை எழுதுபவர்கள் ஆராய்ந்து பார்த்து எழுத வேண்டும் என்பதே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:18, 27 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

பொதுவான கருத்து

  • தமிழ் விக்கி வளர்ந்துவரும் இவ்வேளையில் முதற்பக்கக் கட்டுரைகள் தரத்தில் சற்றுக் கவனமெடுப்பது நன்று. முதற்பக்கக் கட்டுரைகள் பல சிறப்புக் கட்டுரைகளாக வளரக்கூடியவை என்பதால், ஆரம்பத்திலேயே மேம்படுத்திவிடலாம்.
  • இரவி குறிப்பிட்டதுபோல் முன்னர் ஒரு சில பத்திகள் உள்ள கட்டுரைகளைக் முன்பக்க கட்டுரைகளாக இருந்தள்ளன. தற்போது அவற்றின் தரத்தை மீளாய்வு செய்ய வேண்டும். கூட்டாக அவற்றை மேம்படுத்தலாம். இல்லாதுவிடத்து ஆ.வி.யில் உள்ளது போன்று Delisted good article முன்னாள் முதற்பக்கக் கட்டுரைகள் என வகைப்படுத்திவிடலாம்.
  • சிறப்புக் கட்டுரைகள் முன்பக்கத்தில் காட்சிப்படுத்துவது பற்றியும் முடிவெடுக்கலாம்.

--Anton (பேச்சு) 10:21, 27 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

சிறப்புக் கட்டுரைகள் அனைத்தையுமே ஏற்கனவே முதற்பக்கத்தில் காட்டியுள்ளோம். ஒரு கட்டுரை ஒரு முறை தான் முதற்பக்கத்தில் காட்டுவது என்பது வழக்கம். இனி வரும் சிறப்புக் கட்டுரைகளையும் முன்னுரிமை கொடுத்து முதற்பக்கத்தில் காட்டலாம். ஆங்கில விக்கியில் சிறப்புக் கட்டுரைகளை மட்டுமே முதற்பக்கத்தில் காட்டுகிறார்கள். அதற்கு ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளன. எனவே, அங்கு அத்தரம் இல்லாத போது அவ்வாறு குறிக்கிறார்கள். நாம் தரம் குறைவாக இருப்பதாக கருதும் முதற்பக்கக் கட்டுரைகளைத் தனிப்பகுப்பில் இட்டு முன்னேற்றுவதற்கு முன்னுரிமை தரலாம். அவற்றை முன்னாள் முதற்பக்கக் கட்டுரைகள் என்று குறிப்பிடத் தேவையில்லை. --இரவி (பேச்சு) 11:16, 27 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

சிறப்புக்கட்டுரைகளை இனியாவது கவனிக்கவும்

11 சிறப்புக்கட்டுரைகள் இப்போது உள்ளன. அதில் உள்ளகட்டுரைகளை இவ்விவாதம் நடக்கும் போதே கவனிக்கவும். ஏற்கனவே 3 முறை வேண்டியும் பலனில்லை. இல்லை என்றால் மீண்டும் இவ்வேண்டுதல் பலனளிக்காமல் போகும். முதலில் 11 கட்டுரைகளை மேம்படுத்த வாருங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:19, 27 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

நன்றி இரவி. தென்னாசியார், 11 கட்டுரைகளும் சிறப்புக் கட்டுரைகள்தானே? மேலும், சில விடயங்கள் விளங்கவில்லை அல்லது தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
  • முதற்பக்கக் கட்டுரையை எவ்வாறு சிறப்புக் கட்டுரையாக்குவது? விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு மூலம் சாத்தியமா? முன்மொழிவு நடைமுறையில் உள்ளதா?
  • முதற்பக்கத்தில் இடம்பெறாத கட்டுரையை எவ்வாறு சிறப்புக் கட்டுரையாக்கி காட்சிப்படுத்தலாம்?
  • சில ஏற்கெனவே காட்சிப்படுத்தப்பட்ட முதற்பக்க கட்டுரைகளை சிக்கல்கள் தவிர்த்து மேம்படுத்த விரும்பினாலும் தக்க பதில் கிடைப்பதில்லை. எ.கா: செம்மொழி, எல்லாளன். இவ்வாறான சந்தர்ப்பத்தில் சுயமாக மேம்படுத்தலாமா?

--Anton (பேச்சு) 13:39, 27 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

//11 கட்டுரைகளும் சிறப்புக் கட்டுரைகள்தானே? // அதை நீங்களே மீள் பரிசோதனை செய்யுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:08, 27 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

11 சிறப்புக் கட்டுரைகளும் இங்கு குறிப்பிட்ட தகுதிகளைப் பெரிதும் கொண்டுள்ளதாகவே தோன்றுகின்றது. சிலவற்றில் மேற்கோள்கள் போதுமானதாக இல்லை என்பது உண்மையே. இவற்றை மேலும் மேம்படுத்துவதை விட முக்கிய பணிகள் பல உள்ளன. ஓரளவு தரமாகவுள்ள மேலும் சில கட்டுரைகளை மேம்படுத்தி சிறப்புக் கட்டுரை எண்ணிக்கையை வேண்டுமானால் அதிகரிக்கலாம். --சிவகோசரன் (பேச்சு) 06:43, 28 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

அல்ல. சோழர் கட்டுரையில் ஆதாரம், சான்று தேவை வார்ப்புருக்களே ஐந்து உள்ளன. நீங்கள் கட்டுரையில் இணைக்கப்பட்டிருக்கும் பகுப்புகளை பாருங்கள். அக்கட்டுரை பற்றிய அதிக ஆர்வமுள்ளவரா அதிக தகவல் தெரிந்தவர்களோ அல்லது வரலாற்றுத் துறையினரோ பார்த்தால் ஆதாரம், சான்று தேவை வார்ப்புருக்களை போட முடிந்தது. அதே போல் மற்ற கட்டுரைகளுக்கும் செய்தால் இன்னும் குறைகள் தெரியவரும். துறை அறிவுடையோர் பார்க்காமல் சிறப்புக்கட்டுரை தெரிவு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. இனிவருவதில் முறை மாற்றப்பட வேண்டும் என்று என்னுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:30, 28 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கிப்பீடியாவில்

ஆங்கில விக்கிப்பீடியாவில் சில சிக்கல்கள் எழுந்தது. தமிழ் விக்கிப்பீடியா இதுமட்டில் எனக்கு ஆலோசனை வழங்க முடியுமா? பார்க்க: Village pump (miscellaneous) User:SpacemanSpiff --Tamil23 (பேச்சு) 19:44, 27 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

சுருக்கமாக, காப்புரிமைச் சிக்கல் உள்ள படங்களை சிறப்புக் கட்டுரையில் (தகவல் பெட்டி உட்பட) சேர்க்க விடமாட்டார்கள் என்று தெரிகிறது. இது ஒரு பொது விதியாகத் தெரிகிறது. --Natkeeran (பேச்சு) 19:56, 27 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

அரிய தமிழ் நூல்கள் பற்றிய கட்டுரைகள்

Annotated bibliography for Tamil studies conducted by Germans in Tamilnadu during 18th and 19th centuries: A Virtual Digital Archives Project. என்ற இணைப்பில் 18 (1700கள்) ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பல அரிய தமிழ் நூல்கள் பற்றிய விரிவான குறிப்புக்கள் கிடைக்கின்றன. இவற்றில் பல ஆவணங்களில் இன்னும் உள்ளன. இவற்றைப் பற்றிய குறுங்கட்டுரைகளை எழுதி உதிவிட ஆர்வம் உள்ளோரை அழைக்கிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:37, 28 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

  • நற்கீரன், இந்த நூல் தொகுப்பு, மேனாட்டவர் தமிழ்க் கலாச்சாரத்தை எவ்வாறு பார்த்தனர் என்பதைக் காட்டுகின்ற கண்ணாடி போல் உள்ள அரிய கருவூலம். தமிழகம் வந்த செருமானியர் தம் மொழியில் தொகுத்த இந்த அறிக்கைகளையும் குறிப்புகளையும் சுருக்கமாகவாவது தமிழில் கொடுப்பது பயனுள்ளது என்றே நானும் கருதுகிறேன்.--பவுல்-Paul (பேச்சு) 17:02, 28 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:32, 30 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

லீலாவதியின் மகள்கள் - ஒரு தொகு-பந்தயம்

இந்திய அறிவியல் கழகம் "லீலாவதியின் மகள்கள்" என்ற பெயரில் ஒரு நூலை வெளியிட்டுள்ளது. அதில் 50+ பெண் அறிவியலாளர்களைப் பற்றிய பல குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. அந்நூலிலிருந்து பலவற்றைக் கட்டுரையாக்கும் முனைப்பில் ஆங்காங்கில் நடைபெற்ற விக்கிமேனியாவில் ஒரு பேச்சும் தரப்பட்டுள்ளது. அதற்காக ஒரு திட்டப்பக்கம் தொடங்கப்பட்டு கட்டுரைகள் பல விக்கிகளிலும் எழுதப்பட்டு வருகின்றன. இப்போதைக்கு இந்திய அளவில் தெலுங்கு விக்கியில் அதிகப்படியான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. வளாக வேலைவாய்ப்புகள் நடந்து கொண்டிருப்பதால் தொடர்ந்து எழுத முடியாத சூழல். முடிந்தவரை எழுத இயல்கிறேன்.

விருப்பம் உள்ளவர்கள் இந்த இணைப்பைச் சொடுக்கித் தகவலைப் பெறவும். (ஆங்கில விக்கி இணைப்புகளும் அதே பக்கத்தில் தரப்பட்டுள்ளன)

நன்றி -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 11:53, 29 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கியிலும் இந்த பக்கம் உள்ளது. பார்க்கவும் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:28, 30 ஆகத்து 2013 (UTC).[பதிலளி]

Calling for participation: CIS-A2K's Train The Trainer Program

CIS-A2K is organising a 4 day Train the Trainer (TTT) program in Bangalore during first week of October 2013. The idea of the program is to build capacity and enable community members to conduct outreach sessions independently or with minimal support to introduce Wikipedia to prospective editors in their respective Indian languages.

By way of this program, CIS-A2K wants to support and enable community members who might be interested to conduct Wikipedia outreach sessions in their own cities/languages. The event is open to all Wikimedia volunteers from India who can and want to support outreach events in the coming year.

CIS-A2K is calling for applicants for it's Train the Trainer Program. If you'd like to be part of this program please make sure that you meet the selection criterion and submit Train the Trainer Program Application From by 13th September, 2013.

To know more about the program, rationale, overview, timeline etc. please visit the Meta page.


We look forward to hearing from you soon. For any further queries please mail at a2k@cis-india.org. Thanks --Nitika.t (பேச்சு) 13:33, 30 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

தமிழாக்கம்: விக்கிப்பீடியா பரப்புரைகள், பயிற்சிப் பட்டறைகள் நடத்துவதில் ஆர்வம் மிக்கவரா நீங்கள்? பெங்களூரில் உள்ள CIS-A2K அமைப்பு சிறப்பாக பயிற்சிப் பட்டறைகள் நடத்துவது தொடர்பாக பயிற்சி அளிக்க விரும்புகிறது. தங்குமிடம், உணவு, பயணச் செலவு அவர்கள் பொறுப்பு. அக்டோபர் முதல் வாரம் இந்தப் பயிற்சி இருக்கும். ஆர்வமுள்ளோர் Train the Trainer Program Application From பக்கத்தில் செப்டம்பர் 13க்கு முன்பு விண்ணப்பியுங்கள். குறைந்தது 200 தொகுப்புகள் செய்திருக்க வேண்டும், 5 கட்டுரைகளைத் தொடங்கி இருக்க வேண்டும் என்பது இப்பயிற்சியில் சேர்வதற்குத் தேவைப்படும் தகுதி.--இரவி (பேச்சு) 16:28, 30 ஆகத்து 2013 (UTC) Thank you sir.[பதிலளி]


விக்கிப்பயனர் விபரம்

நான் எழுதும் கட்டுரைக்கு யார் யார் முதலில் இருந்து பங்களிக்கிறார்கள், எத்தனை கட்டுரைகள் பங்களித்துள்ளார்கள் என்ற விபரம் தேவைப்படுகிறது (1000 கட்டுரைகளுக்கு மேல் தொடங்கியவர்கள்). தெரிந்தவர்கள் விபரத்தை பகிரவும் அல்லது சுட்டியை தரவும். நிரோஜன், டெரன்ஸ, கோபி போன்றவர்கள் முன்பு அதிகம் பங்களித்து தற்போது குறைவு அ இல்லை என்று சொல்லாம் என்று நினைக்கிறேன். --குறும்பன் (பேச்சு) 15:55, 31 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

1000 கட்டுரைகளுக்கு மேல் தொடங்கியவர்கள்
  • பயனர்:Rsmn
  • பயனர்:Theni.M.Subramani
  • கோபி
2000 கட்டுரைகளுக்கு மேல் தொடங்கியவர்கள்
  • பயனர்:Kanags
  • பயனர்:Sengai Podhuvan
  • பயனர்:நிரோஜன் சக்திவேல்
3000 கட்டுரைகளுக்கு மேல் தொடங்கியவர்கள்
  • பயனர்:Mayooranathan (3760+ கட்டுரைகள்)
  • பயனர்:P.M.Puniyameen
  • பயனர்:Natkeeran

விடுபட்டிருந்தால் சேர்க்கவும். --Anton (பேச்சு) 05:33, 1 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டியில் மாற்றங்கள்

கடந்த மூன்று மாதமாக கட்டுரைப் போட்டி நடந்ததில் இரண்டு முக்கிய கருத்துகள் முன்வைக்கப்பட்டன:

  • இன்னும் கூடுதல் தலைப்புகள் தேவை. போட்டியில் பங்கெடுக்க ஆர்வம் இருந்தாலும் தங்களுக்குத் தெரிந்த, ஆர்வமூட்டும் துறைகளில் கட்டுரைத் தலைப்புகள் போதுமான அளவு இல்லை.
  • இன்னும் கூடுதலான பரிசுகள் தந்தால் நன்றாக இருக்கும். ஏனெனில், ஒருவர் போட்டியில் முந்துகிறார் என்றால் இரண்டாம் நிலையில் வருபவருக்குத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்க ஆர்வம் குன்றுகிறது. இன்னொன்று, போட்டியில் மிகத் தாமதமாக வருபவர்களுக்கு மற்றவர்களை விரட்டிப் பிடிக்க முடியாது என்று உறுதியாக தெரிவதால் விட்டு விடுகிறார்கள்.

இந்த இரண்டு கருத்துகளையும் கருத்தில் கொண்டு போட்டியில் மாற்றங்களைப் பரிந்துரைத்துச் செயற்படுத்தியுள்ளேன்.

  • கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகள் விரிவாக்குவதில் இரண்டாம் இடம் பிடிப்பவருக்கும் பரிசு.
  • மிக விரிவாக கட்டுரைகளை விரிவாக்குபவருக்கான சிறப்புப் பரிசு. இதன் மூலம் தாமதமாக வந்து ஒரே ஒரு கட்டுரையை விரிவாக்கிக் கொண்டே போனாலும் பரிசு உறுதியாகும். எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் தரமான கட்டுரைகள் படைக்க விரும்புவோருக்கும் தக்க வாய்ப்பைத் தரும்.
  • 9000+ புதிய முக்கியத் தலைப்புகள் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆக மொத்தம் ஆண்டு முழுதும் சேர்த்து மொத்தம் 36 பரிசுகள். 2 வாகையர் பரிசுகள். மொத்தப் பரிசுத் தொகை 30,000 இந்திய ரூபாய்/- மேற்கண்ட புதிய பரிசுகள் யாவும் கடந்த மூன்று மாதங்களில் பங்கெடுத்தோருக்கும் முன்தேதியிட்டு அறிவிக்கப்படும் :) இப்போட்டி தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்டங்களில் ஒன்றாக முன்வைக்கப்பட்டு நல்கைத் தொகையும் வேண்டியுள்ளோம். அவர்கள் இப்போட்டியின் வீச்சைக் கவனித்து வருகிறார்கள். இப்போட்டியின் வெற்றி நமது அடுத்தடுத்த முயற்சிகளை முன்னெடுக்க உதவும். மற்றபடி, எப்படியிருந்தாலும் இந்தப் போட்டி தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்த உதவும். ஆகவே, விக்கிமார்கள் அனைவரும் இப்போட்டியில் தொடர்ந்து பங்கேற்று பெரு வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 22:26, 31 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:29, 1 செப்டம்பர் 2013 (UTC)
👍 விருப்பம் கட்டுரையின் தரத்திற்கான பரிசு வரவேற்க தக்கது.ஏனெனில் மிக விரிவாக தொகுக்கப்பட கூடிய கட்டுரைகளையும் போட்டியின் எண்ணிக்கைக்காக 15 kb ஐ எட்டியவுடன் தொகுத்தலை நிறுத்துவதை தவிர்க்கும். இது கட்டுரை தரத்திற்க்கான மிக சிறந்த முடிவு. முத்துராமன் (பேச்சு) 16:29, 1 செப்டம்பர் 2013 (UTC)
ஏற்கனவே போட்டியில் இடப்பட்ட சிறிய கட்டுரையை விரிவக்கலாமா? முத்துராமன் (பேச்சு) 16:29, 1 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி, ஆதவன், முத்துராமன். ஏற்கனவே போட்டியில் எவர் கணக்கில் வந்த கட்டுரையாக இருந்தாலும் 30 கிலோ பைட்டுக்கு குறைவாக இருந்தால் அவற்றை விரிவாக்கலாம். --இரவி (பேச்சு) 06:29, 2 செப்டம்பர் 2013 (UTC)

பயனுள்ள இணைப்பாக த.வி இணைப்பும்

தே.க.நி வலைப்பக்கம்

இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி வலை இணைப்புகளின் கீழ் ஆ.வி, சிங்கள விக்கி ஆகியன காட்டப்பட்ட நிலையில் இதுபற்றி அதன் பணிப்பாளருக்கு மின்மடலிட்டேன். தமிழ் விக்கியையும் சேர்த்துள்ளார்கள். பணிப்பாளருக்கு நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:56, 3 செப்டம்பர் 2013 (UTC)

👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 09:30, 3 செப்டம்பர் 2013 (UTC)
👍 விருப்பம் - விடுபட்டிருந்த தமிழ் விக்கிப்பீடியாவைச் சுட்டிக் காட்டிச் சேர்க்கச் செய்த தங்களும், உடனடியாகச் சேர்த்து உதவிய நிறுவகப் பணிப்பாளரும் பாராட்டுக்குரியவர்கள்தான்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:35, 3 செப்டம்பர் 2013 (UTC)
👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:39, 3 செப்டம்பர் 2013 (UTC)
👍 விருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 11:46, 3 செப்டம்பர் 2013 (UTC)
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 16:41, 3 செப்டம்பர் 2013 (UTC)
நல்லது சஞ்சீவி சிவகுமார். -- சுந்தர் \பேச்சு 17:15, 3 செப்டம்பர் 2013 (UTC)
மிகவும் பயனுள்ள ஒரு நடவடிக்கை. சிவகுமார், உங்களுக்கு எனது பாராட்டுக்கள். பணிப்பாளருக்கு எனது நன்றிகள். ---மயூரநாதன் (பேச்சு) 17:57, 3 செப்டம்பர் 2013 (UTC)
👍 விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 08:43, 4 செப்டம்பர் 2013 (UTC)
👍 விருப்பம் --கலை (பேச்சு) 10:03, 4 செப்டம்பர் 2013 (UTC)
👍 விருப்பம் --தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:05, 13 செப்டம்பர் 2013 (UTC)

WikiProject: Lilavati's Daughters

Excuse me for writing in English. The Indian Academy of Sciences brought out a book titled Lilavati's Daughters. The book concentrates on 50 Women of Sciences in India. A few people attended Wikimania 2013 in Hong Kong and few people watched it on live stream, a talk by User:Keilana on articles on Women Scientists and thought this might be a good idea to an edit-a-thon on. This page is a placeholder for the event. I request user contributions on the topic and also listing the same on this page. Hindustanilanguage (பேச்சு) 09:22, 3 செப்டம்பர் 2013 (UTC).

அண்மைய மாற்றங்களில் ஆங்கிலம்

சில நாட்களாக அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் சில தொகுப்புக்களுக்கு வரலாறு என்றும் சில தொகுப்புகளுக்கு history என்றும் வருகிறதே ! விக்கிமீடியா பதிப்பு மேம்படுத்தலால் விளைந்ததா ?--மணியன் (பேச்சு) 11:58, 8 செப்டம்பர் 2013 (UTC)

தமிழின் சீர்மை குறித்த இந்தி-யர் பேச்சு

உத்திரகண்ட் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் தமிழின் நிலைக்குறித்தும், இந்தியாவில் தமிழுக்குத் தரப்படவேண்டிய முக்கியத்துவம் குறித்தும் பேசி, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திகைப்புள்ளாக்கினார். --≈ உழவன் ( கூறுக ) 08:53, 10 செப்டம்பர் 2013 (UTC)

👍 விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 04:51, 11 செப்டம்பர் 2013 (UTC)
👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:44, 12 செப்டம்பர் 2013 (UTC)

விக்கிப்பீடியா-விக்சனரி

விக்கிப்பீடியாக் கட்டுரைகளில் இணைப்பு இல்லாத எந்தச் சொல்லின்மீது சொடுக்கினாலும் அது விக்சனரிக்கு இணைப்புக் கொடுப்பதை சில நாட்களுக்கு முன்புதான் கவனித்தேன். இந்த வசதி எப்போதிருந்து உள்ளது? ஆங்கிலம் போன்ற மொழிகளுக்குச் சிறப்பாகப் பொருந்தும் இந்த வசதி, தமிழைப் போன்ற மொழிகளுக்குத் தற்போதைய நிலையில் முழுப் பயனையும் தருவதாக இல்லை. ஏனென்றால் தமிழ்க் கட்டுரைகளில் பெயரோ. வினையோ தனிச் சொற்களாக வருவது குறைவு பெரும்பாலும், பால், இடம், எண், காலம் போன்றவற்றுக்கான விகுதிகளுடன் சேர்ந்தோ, வேற்றுமை உருபுகளுடன் சேர்ந்தோதான் வருகின்றன. இதனால் சொற்கள் மீது சொடுக்கும்போது பெரும்பாலும் சொற்கள் விக்சனரியில் இல்லை என்றே வருகிறது. அத்துடன் வினையெச்சம், பெயரெச்சம் போன்றவைகளும் இதற்கு அகப்படுவது இல்லை. விக்சனரியில் ஏதாவது மேம்பாடுகளைச் செய்து இப்பிரச்சினையைத் தீர்க்கலாமா என்று ஆராய வேண்டும். வழிமாற்றுகள் உருவாக்கலாம். ஆனால் பல மடங்கு வழிமாற்றுக்களை உருவாக்கவேண்டி இருக்கும். வேறு ஏதாவது வழிகள் உண்டா? ---மயூரநாதன் (பேச்சு) 10:44, 13 செப்டம்பர் 2013 (UTC)

நீங்கள் சிவப்பு இணைப்பைச் சொல்கிறீர்களா? நீங்கள் கூறியவாறு இருப்பதாகத் தெரியவில்லையே. உதாரணம் தர முடியுமா? எனக்குத் தெரிந்த வரை தமிழ் விக்சனரிக்கென இணைப்புக் கொடுத்த சொற்களிலேயே அவ்விணைப்பு விக்சனரிக்குச் செல்கிறது என நினைத்திருந்தேன்.--Kanags \உரையாடுக 11:49, 13 செப்டம்பர் 2013 (UTC)
மயூரநாதன், நீங்கள் சொல்வது ஜாவாஸ்கிரிப்ட் வசதியை என நினைக்கிறேன். ஒரு சோல்லை இரு முறை சொடுக்கினால் விக்சனரிக்கு இணைப்பு போகும் படி வசதி உள்ளது, முன்பிருந்தே!. ஒருவேளை, தற்போதே நீங்கள் அமைப்புகளில் அதையும் இயக்கியிருக்கக் கூடும். ஆகவே, மாற்றத்தை உணர்ந்திருக்கிறீர்! மேலும், நீங்கள் கேட்ட பெயரெச்சம், வினையெச்சம் போன்றவற்றுக்கு வழிமாற்று உருவாக்குவது சரியான யோசனை இல்லை. stemmer என்ற ஒரு வசதி மொழியியலில் (இயன்மொழியாக்கம், nlp) உண்டு. இதை, மென்பொருள்களின் மூலம் செயற்பாட்டிற்கு கொண்டு வர முடியும். எந்த ஒரு சொல்லை எடுத்தாலும், அதை எடுத்தபின்னர், வேர்ச்சொல்லை/மூலச்சொல்லை மட்டும் வெட்டி எடுக்கும்வகையில் செய்யலாம். பின்னர், வழக்கம்போல் அதற்கான இணைப்பைத் தரலாம். ஏற்கனவே, தமிழ் மொழியில் இது செயல்பாட்டில் உள்ளதே! :) நிரலாக்கத்தில் நன்கறிந்தவர் உதவக் கூடும். எனக்கு இதற்கு மேல் தெரியாது. aksharamuka கண்டுபிடித்த வினோத்தை கேட்டுப் பார்க்கலாம். அவர் உதவக் கூடும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:49, 13 செப்டம்பர் 2013 (UTC)
சிறீ, விக்கிப்பீடியாவில் இணைப்பில்லாத எந்தச்சொல்லின் மீதும் இரட்டைச் சொடுக்குச் செய்யும்போது விக்சனரிக்கு இணைப்பு வருகிறது. தமிழ்க் குரிசில் சொல்வது போல் இது முன்னரே இருந்திருக்கலாம். நான் சொடுக்கிப் பார்த்ததில்லை. தற்செயலாகச் சொடுக்கியபோதே இதை அறிந்தேன். இது ஒரு நல்ல வசதிதான் ஆனால், சொடுக்கும்போது மூலச்சொல்லுக்குச் செல்லும்படி செய்ய வேண்டும். வழி மாற்றுக்களை உருவாக்குவதில் எனக்கும் உடன்பாடு இல்லை. தமிழ்க்குரிசில் சொல்வதுபோல் மென்பொருட்களைப் பயன்படுத்தி இதைச் செய்வது நல்லது. ----மயூரநாதன் (பேச்சு) 15:21, 13 செப்டம்பர் 2013 (UTC)
மயூரன், இருந்திருக்கலாம் இல்லை! இது ஏற்கனவே இருந்தது, பல முறை தெரியாமல் இரண்டு முறை சொடுக்கி விக்சனரிக்கு இட்டுச் சென்றுள்ளது. ஸ்டெம்மர் என்ற வசதி மூலச் சொல்லில் இருந்து முன்னொட்டு, பின்னொட்டு சேர்த்து சொற்களை உருவாக்கும் கருவி என நினைக்கிறேன். இதைக் கொண்டு சிறப்பாக செயல்படுத்தலாம். பைத்தான் கற்றோருக்கு வசதியாய் இருக்குமாம். nltk என்ற பொதி இதை எளிதாக்கும் என்று வினோத் கூறுகிறார். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:51, 13 செப்டம்பர் 2013 (UTC)