விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு34

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சாதி, சமயம், வாழும் ஆட்கள் கட்டுரைகளுக்கான வழிகாட்டல்கள்[தொகு]

சமயம், சாதி சார் கட்டுரைகளை எப்படி எழுதுவது என்பது குறித்து வழிகாட்டல் உருவாக்க வேண்டும். இத்தகைய அண்மைய பல கட்டுரைகள் கலைக்களஞ்சிய நடைக்கு ஒவ்வாதவையாக உள்ளன. அதே போல் வாழும் ஆட்கள் தங்களைப் பற்றி தாங்களே எழுதிக் கொள்ளும் கட்டுரைகளிலும் விளம்பர நெடி தூக்கலாக உள்ளது. இதனைச் சரி செய்யாவிட்டால் தமிழ் விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும். ஏற்கனவே சில நண்பர்கள் இதனைச் சுட்டிக் காட்டி விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர்--ரவி 19:09, 17 ஏப்ரல் 2010 (UTC)

ரவி சொல்வது உண்மைதான் சாதி, சமயம் குறித்த கட்டுரைகளில் எவை இடம் பெற வேண்டும். எவை இடம்பெறக் கூடாது. என்பதை இங்கு கல்ந்தாலோசித்து முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். சாதி, சமயக் கட்டுரைகளில் அந்த சாதி, சமயத்தில் முக்கியமான நபர்களையெல்லாம் பட்டியலிட்டு விடுகிறார்கள். அவர்கள் அந்த சாதி, சமயத்தவர்களுக்கு முக்கியமானவர்களாக இருக்கலாம். அவர்கள் பிறருக்குத் தெரிந்தவராகவாவது இருக்க வேண்டாமா? கட்டுரையிலிருந்து அவர்களை நீக்கும் போது கடுமையான விமர்சனத்தையும் சந்திக்க வேண்டியுள்ளது. பார்க்க பேச்சு:வொக்கலிகர் . மேலும் என்னைப் போன்ற பயனர்கள் மீதான தனிப்பட்ட விமர்சனங்களை நீக்கத் தயக்கம் காட்டுவதும் குறிப்பிட்ட விசமிகளுக்கு ஆதரவாக அமைந்து விடுகிறது. இதுகுறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். --Theni.M.Subramani 03:00, 18 ஏப்ரல் 2010 (UTC)

கூகுள் கட்டுரைகள் நிறுத்த வேண்டும்[தொகு]

தற்சமயம் தவியில் கூகுள் தானியக்கி மொழிபெயர்ப்பு வழியாக சுமார் ~100 கட்டுரைகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இக்கட்டுரைகள் தரத்தளவில் மிகவும் தாழ்ந்துள்ளது. கட்டுரைகள் துவங்கி முதல் நிலை மொழி பெயர்ப்பு மட்டுமே தங்கள் பங்கு என்று கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் பல கட்டுரைகளை எழுதுக்கொண்டே போகிறார்கள். இக்கட்டுரைகள் தானியங்கி மூலம ஆங்கில கட்டுரைகளை அப்படியே மொழி பெயர்ப்பதால் பல நூறு பிழைகள், தவறான வாக்கிய அமைப்பு, பல ஆயிரம் சிகப்பு இணைப்புகள், தேவையற்ற பகுப்புகள் என்று தவியின் அடிப்படை தரத்தையே கேள்விக்குறியாக்குகிறது. மேலும் இக்கட்டுரைகளை சரி செய்வது என்பது மிகவும் கடினமான பணியாகும். மேலும் யாதொரு மொழி பெயர்ப்பாளர்களும் தங்களது பயனர் பக்கத்தில் விவரம் ஏதும் தரவில்லை மற்றும் அவர்கள் எந்த உரையாடல்களிலும் கலந்து கொள்ளவில்லை. இவை அனைத்தும் விக்கி கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாக கருதுகிறேன். அதனால் கூகிள் மொழி பெயர்ப்பை உடனை நிறுத்தவேண்டும் என நினைக்கிறேன். அதற்காக இந்த உரையாடலையும் வாக்கெடுப்பையும் தொடங்குகிறேன்.--கார்த்திக் 04:37, 20 ஏப்ரல் 2010 (UTC) கூகிள் மொழிபெயர்ப்பு தொடர்பாக ரவியின் கருத்துகளை இங்கு விக்கிப்பீடியா_பேச்சு:கூகுள்_கட்டுரை_மொழிபெயர்ப்புத்_திட்ட_ஒருங்கிணைப்பு#.E0.AE.AE.E0.AF.86.E0.AE.AF.E0.AF.8D.E0.AE.AF.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.B2.E0.AF.8D_.E0.AE.A8.E0.AF.8B.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AF.81 பார்க்கவும்

உடனே நிறுத்த வேண்டும்[தொகு]

இன்னும் சில காலம் பார்ப்போம்[தொகு]

வலுவான அணுகுமுறை தேவை[தொகு]

கருத்து[தொகு]

  • விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் அனைவரும் முதலில் விக்கிப்பீடியர்களே. எனவே, கூகுள் மொழிபெயர்ப்பாளர்களுக்குச் சிறப்பு விதிவிலக்குகள் தேவை இல்லை. (அதுவும் கூகுள் இத்திட்டம் குறித்து வெளிப்படையாக அறிவித்து முறையாக திட்டத்தை வகுக்காமல் இருக்கும் நிலையில்). இத்திட்டம் மெய்யியல் நோக்கில் பெரும் உறுத்தலாக உள்ளது. எனவே, இத்திட்டத்தைத் 'தற்காலிகமாக' நிறுத்தி வைக்க என் ஆதரவைத் தெரிவிக்கிறேன். பின்வரும் சூழ்நிலையில் இத்திட்டத்தைத் தொடர்வது குறித்துச் சிந்திக்கலாம்:
    • அனைத்து கூகுள் மொழிபெயர்ப்பாளர்களும் நேரடியாகப் பேச்சுப் பக்க உரையாடல்களில் பங்கு கொள்ளல்.
    • இது வரை தாங்கள் எழுதிய கட்டுரைகளை தாங்களே முழுமையாகத் திருத்திச் சீர் செய்ய வேண்டும். இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாம் நல்கலாம்.--ரவி 06:00, 20 ஏப்ரல் 2010 (UTC)
  • நிறுத்துவது என முடிவு செய்தால், அதை உறுதிபடத் தெளிவாகவும் நயமாகவும் எடுத்துரைப்போம். ஏற்கனவே சேர்க்கப்பட்ட கட்டுரைகளைத் தனிப் பெயர்வெளிக்கு நகர்த்தி விடலாம். (கடைசி முயற்சியாகச் சில மாற்று ஏற்பாடுகளையும் பரிந்துரைக்கலாம், அவர்கள் ஏற்பதற்கான வாய்ப்பு குறைவுதான்.) -- சுந்தர் \பேச்சு 06:08, 20 ஏப்ரல் 2010 (UTC)
  • நான் துவக்கத்தில் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக் கொண்டிருந்தாலும் சுந்தரின் உரையாடலிற்குப் பிறகு சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காண்கிறேன். இருப்பினும் பல கட்டுரைகள் உறுத்தல்களாகவே உள்ளன.இரவி கூறியவாறு பதிவேற்றியக் கட்டுரைகளின் தரம் உயர்த்துவதற்கு முன்னுரிமை அளிக்கச்சொல்லி அதுவரைப் புதுக்கட்டுரைகளை பதிவேற்றுவதைத் தடை செய்யலாம். இத்தகைய மொழிபெயர்ப்பால் கூகிள் நிறுவனத்திற்கும் பயனில்லை என்பதையும் அவர்களது உயர்நிலைத்தலைவர்களுக்கு எடுத்துரைக்கலாம். 15 மே இறுதி நாளாக வரையுறுக்க பரிந்துரைக்கிறேன்.--மணியன் 06:19, 20 ஏப்ரல் 2010 (UTC)
உடனடியாக கூகுள் மொழிப்பெயர்ப்பாளர்களின் பயணர் கனக்கை தடை செய்வதோடு, கட்டுரைகளையும் நீக்க வேண்டும். இதுவே எனது கருத்து. பயணர்கள் தங்கள் தனிப்பட்ட விளம்பரங்களுக்கு விக்கியை பயன்படுத்தக் கூடாது எனில், கூகுள் மட்டும் எப்படி பயன்படுத்தலாம்? நாளை கண்டிப்பாக இந்த கட்டுரைகள், தங்கள் மொழிபெயர்ப்பு கருவியின் தர மேற்கோளாக கூகுளால் காட்சிப்படுத்தப்படும். பொதுவாக எல்லா மேலை நாட்டு கண்டுபிடிப்புகளின் சோதனைகளும் இந்தியாவில்தான் மேற்கொள்ளப்படும். காரணம் இங்குதான் எலிகள் அதிகம். தமிழ் விக்கியும் அந்த எலிகளில் ஒன்றாக இருக்க வேண்டுமா?? மற்றபடி கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என்பதெல்லாம் சும்மா.. --அராபத்* عرفات 06:46, 20 ஏப்ரல் 2010 (UTC)
  • http://news.google.com தளத்தில் செய்திகளுக்கு ஆங்கில விக்கிபீடியா தொடுப்பை கொடுக்கிறார்கள். தமிழிலிலும் இதுபோன்று தமிழ் செய்தி தளத்தில் இணைப்பு கொடுக்கும் எண்ணமாகவும் இருக்கலாம். இது விக்கிபீடியாவிற்கு நல்லதுதான் என்றாலும், தமிழ் விக்கிபீடியாவில் ஆள்வைத்து வேலை வாங்குவதென்பது தமிழ் விக்கிபீடியாவை கடத்தும் முயற்சிகளில் ஒன்றாக கூட இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். அதனால் ஆரம்பத்திலேயே கிள்ளிவிட வேண்டும். ஆங்கில விக்கி நடைமுறையையும் பின்பற்றலாம்.-- மாஹிர் 07:37, 20 ஏப்ரல் 2010 (UTC)
  • கூகுள் தமது கருவியைச் சோதிக்கும் தளமாக விக்கியைப் பயன்படுத்துகிறார்கள். வாரத்துக்கு ஒன்றிரண்டு கட்டுரைகள் என்றால் அவற்றைத் திருத்தியிருக்க முடியும். ஆனால், இப்போது அவை கட்டுக்கடங்காமல் போய் விட்டது. உடனடியாக இத்திட்டம் (தற்காலிகமாகவேனும்) தடை செய்யப்பட வேண்டும். மேலும், சுந்தர் கூறியபடி, இக்கட்டுரைகளை இனம் கண்டு அவற்றைத் தனிப்பெயர்வெளி ஒன்றின் கீழ் நகர்த்தலாம்.--Kanags \உரையாடுக 11:04, 20 ஏப்ரல் 2010 (UTC)
  • தெளிவான பரிந்துரைகள் தந்து அவற்றை ஏற்று செயல்படாவிடில் நிறுத்துவதென்று முடிவெடுக்கலாம் என்பது என் நினைப்பு. எல்லாக் கட்டுரைகளையுமே திருத்த இயலும் ஆனால் அதற்காகும் நேரம் கட்டுரையை புதிதாக உருவாக்குவதற்கு ஆகும் அளவு இருப்பது ஏற்புடையதன்று. இன்னொரு மாற்று முறை என்னவென்றால், சிறுபகுதியை மட்டும் வைத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை நீக்கியோ, எங்கேனும் சேமித்தோ வைக்கலாம். கழிப்புகளைத் துணிவாகச் செய்ய வேண்டும். சில கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு இன்றைய நிலையில் தேவையே இல்லை. பணமும் பெற்று தமிழையும் விக்கிப்பீடியாவின் நற்போக்கையும் கெடுப்பதாக இருப்பது கொடுமை!! மாகிர் சொல்வது போல தமிழ் விக்கிபீடியாவை கடத்தும் முயற்சிகளில் ஒன்றாக கூட இருக்கலாம் என்பதனையும் எண்ணிப்பார்க்க வேண்டும். கட்டாயம் தெளிவான ஒரு முடிவை எடுத்தல் வேண்டும். --செல்வா 11:51, 20 ஏப்ரல் 2010 (UTC)

@கார்த்தி, கூகுள் கட்டுரைகளின் எண்ணிக்கை எப்படியும் ~500ஐத் தாண்டும். பார்க்க: பகுப்பு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள். இன்னும் அனைத்துக் கட்டுரைகளுக்கும் வார்ப்புரு இடவில்லை.

@சுந்தர், நீங்கள் கருதும் மாற்று வழிகளையும் குறிப்பிட்டால் உரையாடலாம்.

@மணியன், மே 15 போன்ற ஏதாவது ஒரு தேதியைக் குறிப்பிட்டு அதற்கு முன் இன்னின்ன மாற்றங்களை வேண்டுகிறோம் என்று சொல்வதில் உடன்பாடு தான். உடனே நிறுத்தவேண்டும் என்றால் இன்றே அல்ல.

@அராப்பத், //பயனர்கள் தங்கள் தனிப்பட்ட விளம்பரங்களுக்கு விக்கியை பயன்படுத்தக் கூடாது எனில், கூகுள் மட்டும் எப்படி பயன்படுத்தலாம்?// என்பது நியாயமான கேள்வி. இந்திய மொழி விக்கிகள் அனைத்திலும் இந்த மொழிபெயர்ப்புப் பணி நடைபெறுகிறது.

@மாகிர், கூகுள் செய்திகள் போன்றவற்றிலும் இடம்பெறலாம். இத்திட்டத்தால், கூகுள் பெறக் கூடிய பயன்கள் பல்வேறாக இருக்கலாம்: மொழிபெயர்ப்புக் கருவி மேம்பாடு, ஆங்கிலம் - தமிழ் அகராதி மேம்பாடு, தமிழ் adsense (வருங்காலத்தில்) போன்றவை மேலோட்டமாகத் தெரிபவை. சுருக்கமாகச் சொன்னால், இணையத்தில் நல்ல தேடல் முடிவுகளைப் பயனர்கள் பெற முடிந்தால் தான் கூகுளுக்கு நல்லது. அதன் மூலம் தொடர்ந்து கூகுளைப் பயன்படுத்துவார்கள். நல்ல தேடல் முடிவு இல்லா நிலையில் கூகுளே அதற்கான உள்ளடக்கத்தை உருவாக்க முனைவதாகவே புரிகிறது. கூகுளின் நோக்கத்தால் தமிழ் இணையத்துக்கும் ஓரளவு நன்மை கிட்டலாம் என்றாலும், அதற்கான களமாக விக்கி இருக்கத் தேவை இல்லை. கூகுள் knol திட்டத்தில் கூட இது போன்ற பணிகளைச் செய்யலாம். தமிழ் விக்கியைக் கடத்துதல் என்ற அளவுக்குக் கவலை இல்லை. எனினும், நாம் கவனமாகச் செயற்படுத்தும் பல கொள்கைகள், நடைமுறைகளை நீர்த்துப் போகச் செய்யும் அபாயம் உண்டு தான். எப்படி இருப்பினும், கூகுளின் நோக்கம் - பயன் என்னவாக இருந்தாலும், அதன் செயற்பாடு விக்கி நடைமுறைகளுக்கு ஒத்து வருகிறதா என்பதே தற்போதைய கேள்வி. --ரவி 12:00, 20 ஏப்ரல் 2010 (UTC)

கூகிள் மொழிபெயர்ப்பாளர்களின் கட்டுரைகள் த.வி. தரத்தைப் பாதிக்கின்றன. ஆகையால் அவற்றை முதன்மைப் பெயர்வெளியிலிருந்து நகர்த்த வேண்டும். அத்துடன் அவற்றின் உள்ளிணைப்புக்களைத் தவிர்க்க nowiki இட்டுக் கொள்ளலாம். அவர்களை ஒரேயடியாகத் தடுக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். (கூகிளிடமில்லாத பணமா? யாரேனும் நாலு பேர் பயன்பெறட்டுமே...) ஆனால் அவர்களது கட்டுரைகள் முதன்மைப் பெயர்களிலிருந்து நீக்கப்படுவதையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி விடலாம்.

//சிறுபகுதியை மட்டும் வைத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை நீக்கியோ, எங்கேனும் சேமித்தோ வைக்கலாம். கழிப்புகளைத் துணிவாகச் செய்ய வேண்டும்// என்பது பொருத்தமான அணுகுமுறையாக இருக்கும். ஆயினும் முதலில் வேறொரு பெயர்வெளிக்கு அனைத்தையும் நகர்த்திவிட்டுப் பயனர்கள் நேரங்கிடைக்கும்போது போதுமான பகுதிகளை முதன்மைப் பெயர்வெளிக்கு நகர்த்தலாம். கூகிள் மொழிபெயர்ப்பாளர்களின் முயற்சிகளில் ஒரு 10% தானும் தேறும். அத்தகையவற்றை நாம் விக்கிப்படுத்திப் பயன்படுத்தலாம். கூகிள் கட்டுரைகள் என ஒட்டுமொத்தமாக அணுகாமல் தனித்தனிக் கட்டுரைகளாக அணுகலாம். நன்றி. -- கோபி 12:03, 20 ஏப்ரல் 2010 (UTC)

(கோபி தொகுத்த நேரத்தில் தொகுத்தது, அதனால் உள்ளிட மறுத்து விட்டது)தமிழ் விக்கியைக் கடத்தும் முயற்சியெல்லாம் இருக்குமா எனத் தெரியவில்லை. ரவி சொன்னது போல, அவர்களது நோக்கம் இந்திய மொழிகளிலுள்ள உள்ளடக்கத்தைக் கூட்டி, இந்திய மொழிகளில் தேடுவதற்குத் தூண்டுவது, அதன் பின்னர் அங்கு விளம்பரங்களை இட்டுப் பணம் ஈட்டுவது. இந்திய மொழிகளில் விளம்பரமிடும் நுட்பத்திலும் முறைமைகளிலும் அவர்கள் போட்டியாளர்களைக் காட்டிலும் முன்னணியில் உள்ளதாகத் தெரிகிறது.
மாற்று ஏற்பாடாக நான் எண்ணியவை
  1. வேறு தளத்திலோ, பெயர்வெளியிலோ இட்டு தேவைப்படுபவற்றை மட்டும் நாம் எடுத்துக் கொள்வது. இதில் பயன் குறைவு.
  2. சென்னையிலுள்ள செம்மொழித்தமிழ் நடுவம் போன்றவற்றில் பல திட்டங்கள் ஓய்வுபெற்ற தமிழாசிரியர்களுக்கு வருவாய் அளிக்கும் வகையில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அவர்களிடம் கூகிள் இப்பணியை ஒப்படைத்தால் இதைக் காட்டிலும் பல மடங்கு நன்றாக அமைய வாய்ப்புள்ளது. உரை வடிவத்தில் தந்து விக்கியில் ஏற்றுவதற்கு தானியங்கியைக் கூடப் பயன்படுத்தலாம்.

வேறு மாற்றுப் பரிந்துரைகள் இருந்தாலும் எண்ணிப் பார்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 12:16, 20 ஏப்ரல் 2010 (UTC)


@கார்த்திக் "இக்கட்டுரைகள் தரத்தளவில் மிகவும் தாழ்ந்துள்ளது"

இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ஆங்கில விக்கியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளவையால், அவை பொதுவாக விக்கி கட்டமைப்புகளை பின்பற்றுகிறன. அந்த விஷயத்தில் அவை தமிழ்விக்கி கட்டுரைகளை விட 100 மடங்கு மேல். சில சொற்கலையும், வாக்கியங்களையும் நிச்சயமாக பரிசீலனை செய்யலாம். இங்கு செயல்படும் - அதாவது கருத்து தெரிவித்த எவரும் எந்த ஆங்கில கட்டுரையையும் மொழி பெயர்க்க முயலாததால் சிலர் முயல்கின்றனர் . அது வரவேற்க்க வேண்டியது

@கார்த்திக் மேலும் யாதொரு மொழி பெயர்ப்பாளர்களும் தங்களது பயனர் பக்கத்தில் விவரம் ஏதும் தரவில்லை மற்றும் அவர்கள் எந்த உரையாடல்களிலும் கலந்து கொள்ளவில்லை. இவை அனைத்தும் விக்கி கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாக கருதுகிறேன்.

இதுவும் ஆதாரமற்றாது. விக்கி கொள்கைகள் எங்கேயும் அப்படி குறிப்பிடவில்லை


@கார்த்திக் "மேலும் இக்கட்டுரைகளை சரி செய்வது என்பது மிகவும் கடினமான பணியாகும்." உங்கள் சோம்பேறித்தனத்திற்க்கும், திறமையின்மைக்கும் வெலை செய்பவர்களை தூற்றாதீர்கள்

@ரவி "இது வரை தாங்கள் எழுதிய கட்டுரைகளை தாங்களே முழுமையாகத் திருத்திச் சீர் செய்ய வேண்டும்". உங்களுக்கு திராணி இருந்தால் நீங்கள் செய்யுங்கள்


@ அராபத்"இதுவே எனது கருத்து. பயணர்கள் தங்கள் தனிப்பட்ட விளம்பரங்களுக்கு விக்கியை பயன்படுத்தக் கூடாது எனில், கூகுள் மட்டும் எப்படி பயன்படுத்தலாம்? " கூகிளுக்கு தேவையான விளம்பரங்களை எங்கேயாவது பார்த்தீர்களா?


@Kanags "வாரத்துக்கு ஒன்றிரண்டு கட்டுரைகள் என்றால் அவற்றைத் திருத்தியிருக்க முடியும். ஆனால், இப்போது அவை கட்டுக்கடங்காமல் போய் விட்டது" உங்கள் சக்தி அவ்வளவுதான் என்றால், ஏன் மற்றவர்கலை சாடுகின்றீர்?


@செல்வா "சில கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு இன்றைய நிலையில் தேவையே இல்லை" எது தமிழ்விக்கிப்பீடியாவிற்க்கு தேவை என யார் சொல்வது. அது பொது விக்கி கொள்கைகளினால் செய்யப்படுகிறது . உதாரணம் Notability . சிலரின் தனி அபிப்பிராயத்தினால் அல்ல.ஆங்கிலத்தில் இருக்கும் கட்டுரைகள் தமிழில் வருவதில் தவறே இல்லை. அதைத்தானே இந்த மொழி பெயர்ப்பாளர்கள் செய்கின்றனர் ??

@செல்வா"பணமும் பெற்று தமிழையும் விக்கிப்பீடியாவின் நற்போக்கையும் கெடுப்பதாக இருப்பது கொடுமை" அப்படிப் பார்த்தால் தமிழக அரசும் மாணவர்களுக்கு பனம் மற்றும் இதற பரிசுகளை கொடுக்கப் போகிறது, அது தப்பில்லையா??--217.169.51.254 13:00, 20 ஏப்ரல் 2010 (UTC)

@217.169.51.254 உங்கள் உண்மை அடையாளத்துடன் உங்கள் கருத்துகளைப் பதிந்தால் நன்று. இல்லாவிட்டால், உங்கள் அடுத்தடுத்த கருத்துகளுக்கு உரிய பதில் வராமல் போகலாம்.

//அதாவது கருத்து தெரிவித்த எவரும் எந்த ஆங்கில கட்டுரையையும் மொழி பெயர்க்க முயலாததால் சிலர் முயல்கின்றனர் . அது வரவேற்க்க வேண்டியது//

தமிழ் விக்கியில் உள்ள பல பங்களிப்பாளர்களும் தேவைப்படும் நேரத்தில் ஆங்கில விக்கி கட்டுரைகளை மொழிபெயர்த்தும் எழுதுகின்றனர். இங்கு மொழிபெயர்ப்பை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், மொழிபெயர்க்கப் பயன்படும் வரும் கருவி, முறையால் வரும் குறையையே சுட்டுகிறோம்.

//விக்கி கொள்கைகள் எங்கேயும் அப்படி குறிப்பிடவில்லை//

பயனரைப் பற்றிய விவரங்களைத் தருவதால் அவரைப் பற்றிய நம்பகத்தன்மையும் விக்கி சமூகத்தில் உள்ள நட்புணர்வும் கூடுகிறது. பேச்சுப் பக்க உரையாடல்களில் கலந்து கொள்வதன் மூலம் ஒரே வகையான தவறுகள் திரும்பத் திரும்ப வருவதைத் தவிர்க்கலாம். விக்கி ஒரு கூட்டு முயற்சி. இந்தக் கூட்டு முயற்சி வெற்றிகரமாகச் செயல்பட இது போன்ற அணுகுமுறைகள் இன்றியமையாதவை.

//உங்கள் சோம்பேறித்தனத்திற்க்கும், திறமையின்மைக்கும் வெலை செய்பவர்களை தூற்றாதீர்கள்//

//உங்களுக்கு திராணி இருந்தால் நீங்கள் செய்யுங்கள்//

நீங்கள் இது வரை எத்தனை கூகுள் கட்டுரைகளைச் சீராக்கி உள்ளீர்கள்? உங்கள் வீட்டு வாசலில் ஒருவர் நாளும் குப்பை கொட்டிக் கொண்டே இருந்தால், நீங்களே அதை அகற்றிக் கொண்டே இருப்பீர்களா அல்லது "இங்கே குப்பை போடாதீர்கள்" என்று சொல்வீர்களா?

//கூகிளுக்கு தேவையான விளம்பரங்களை எங்கேயாவது பார்த்தீர்களா? //

கூகுள் இத்திட்டத்தைச் செய்வதே கூகுளின் நன்மை கருதித் தான். கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மேம்பாடு உட்பட பல பயன்கள் உள்ளன. இல்லை என்றால், அக்கருவி இல்லாமல் பங்களிக்க வேண்டியது தானே? ஒரு பயனர் தனது நலன் கருதி விக்கியில் ஈடுபடக்கூடாது எனில் ஒரு நிறுவனம் மட்டும் அப்படிச் செயற்படலாம் என்பது முரணே.

//தமிழக அரசும் மாணவர்களுக்கு பனம் மற்றும் இதற பரிசுகளை கொடுக்கப் போகிறது, அது தப்பில்லையா//

இந்தப் போட்டிக்கு வரும் கட்டுரைகள் அனைத்தும் http://tamilint2010.tn.gov.in தளத்திலேயே பதிவேற்றப்படுகின்றன. அங்கிருந்து தரம் உறுதி செய்யப்பட்ட கட்டுரைகள் மட்டுமே விக்கிப்பீடியர்களால் இங்கு பதிவேற்றப்படும். இத்திட்டத்தின் தொடக்கம் முதலே தமிழ் விக்கியின் வழிகாட்டலின் படியே நடக்கிறது. எனவே, இப்போட்டியால் தமிழ் விக்கியின் தரம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. கூகுள் திட்டத்தின் இத்தகைய கூட்டு நடவடிக்கை ஏதும் இல்லை.

பங்களிப்பை ஊக்குவிக்க போட்டி நடத்துவது வேறு. எழுதும் ஒவ்வொரு கட்டுரைக்கும் பணம் தருவது வேறு.

இவ்வளவு பேசுகிறீர்களே? ஆங்கில விக்கியில் இதே போன்று பணம் பெற்றுக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகள் (தமிழ் -> ஆங்கிலம், பிரெஞ்சு-> ஆங்கிலம்) சிலவற்றைச் சேர்த்து விட்டுப் பேச்சுப் பக்கத்தில் உரையாட மாட்டோம் என்று சொல்லிப் பாருங்கள். தடை நிச்சயம்.--ரவி 13:44, 20 ஏப்ரல் 2010 (UTC)

@ரவி "பயனரைப் பற்றிய விவரங்களைத் தருவதால் அவரைப் பற்றிய நம்பகத்தன்மையும் ..." நாம் விக்கியில் தனிமனிதர் நம்பகத்தன்மையையா பார்க்கிறோம், ஒருவர் எப்படி எழுதுகிறார், என்ன எழுதுகிறார், அவ்வளவுதான் இங்கு வேண்டியவை.


@ரவி "உங்கள் வீட்டு வாசலில் ஒருவர் நாளும் குப்பை கொட்டிக் கொண்டே இருந்தால்...". இது "உங்கள் வீடு" என யார் சொன்னார்கள்; விக்கியில் எவரும் கட்டுரைகலை எழுதலாம். இதில் "உங்கள் வீடு, எங்கள் வீடு" என ஒன்றும் இல்லை, இது யாரின் சொத்தும் அல்ல. மற்ற பயன்ர்களுக்கு, உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கோ இங்கே எழுதுவதற்க்கு, அவ்வளவு இருக்கு.

@ரவி "ஒரு பயனர் தனது நலன் கருதி விக்கியில் ஈடுபடக்கூடாது எனில் ஒரு நிறுவனம் மட்டும் அப்படிச் செயற்படலாம் என்பது முரணே." யார் எந்த நோக்கத்துடன் விக்கியில் எழுதினாலும், விக்கி நடைமுறைகளுக்கு உட்பட்டால், அதைப் பற்றி ஏன் கேள்வி கேக்க வேண்டும். சிலருக்கு தமிழில் எழுதுவது அவர்களது நலன். அது தவறா?

@ரவி "ஆங்கில விக்கியில் இதே போன்று பணம் பெற்றுக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகள் .." யார் எவ்வளவு பனம் பெருகின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படிப்பார்த்தால், சிலர் தங்கள் பணி நேரத்தில் அலுவல் செய்ய வேண்டும் நேரத்தில், தமிழ் விக்கியில் எழுதினால் அதுவும் தவறா? நாம் பார்க்க வேண்டியது, தமிழ்விக்கியில் என்ன எழுதுகின்றனர் என்பதுதான், பின்னணி என்னவாக இருந்தால் என்ன? 'பூமி' என்ற தலைப்பில் 220K கட்டுரை உள்ளது, நீங்கள் எத்தனை 220K கட்டுரை எழுதுயுள்ளீர்கள்? என்ன ஊக்கமோ அல்லது என்ன நோக்கமோ, நல்ல கட்டுரைகள் வந்தால் சரி.--217.169.51.254 14:39, 20 ஏப்ரல் 2010 (UTC)

@217.169.51.254 //மற்ற பயன்ர்களுக்கு, உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கோ இங்கே எழுதுவதற்க்கு, அவ்வளவு இருக்கு.// ஆம், உரிமை இருக்கிறது. ஆனால், செய்வதை ஒழுங்காகச் செய்யும் கடமையும் இருக்கிறது. கூகுள் கருவி கொண்டு தான் எழுதுவோம், பேச்சுப் பக்கங்களில் உரையாட மாட்டோம், இருக்கிற பிழையைத் திருத்தாமல் எழுதிக் கொண்டே இருப்போம் என்று சொல்வது சமூகத்தோடு இயங்கும் செயற்பாடு இல்லை.

//'பூமி' என்ற தலைப்பில் 220K கட்டுரை உள்ளது, நீங்கள் எத்தனை 220K கட்டுரை எழுதுயுள்ளீர்கள்?//

கட்டுரை எழுதுவது மட்டுமே விக்கிப்பணி அல்ல. விக்கியாக்கம், உரை திருத்தம், படம் சேர்ப்பு, உதவிப் பக்கங்கள் உருவாக்கம் என்று எத்தனையோ விக்கிப்பணிகளை எல்லாரும் கூடிச் செய்தால் தான் விக்கி முழுமை அடையும். அனைத்துப் பங்களிப்பாளர்களின் விக்கிப் பங்களிப்புகளையும் அவரவர் பயனர் பக்கத்தில் காணலாம்.

//சிலர் தங்கள் பணி நேரத்தில் அலுவல் செய்ய வேண்டும் நேரத்தில், தமிழ் விக்கியில் எழுதினால் அதுவும் தவறா//

//சிலருக்கு தமிழில் எழுதுவது அவர்களது நலன். அது தவறா?//

என்று விதண்டாவாதமாகத் தொடர்வதால், உங்கள் அடுத்தடுத்த உரையாடல்களுக்குப் பதில் அளிக்காமல் விலகிக் கொள்கிறேன்--ரவி 15:18, 20 ஏப்ரல் 2010 (UTC)

@ரவி "சமூகத்தோடு இயங்கும் செயற்பாடு இல்லை...." உங்களுடன் ஒத்துப்போவதுதான் "இயங்கும் செயற்பாடா"?? அப்படித்தான் செய்ய வேன்டுமென எந்த விக்கி பரிவில் உள்ளது என எடுத்துக் காட்டுக.

@ரவி "விக்கிப் பங்களிப்புகளையும் அவரவர் பயனர் பக்கத்தில் காணலாம்." உங்கள் சராசரி பங்களிப்பு ஒரு கட்டுரையில் 2K இருக்கலாம். அதனால் 150K, 200K, 250K கட்டுரைகளை ஒரே மூச்சில் நீங்கள் தாழ்த்துவது சரியில்லை. எழுதுபவர்களை. கூகிள் கருவுயில் , அப்படி ஆங்கிலம் போட்டால் உடனே தமிழ் வராது. மொழி பெயர்ப்பாளரும் மிக்க சிரத்தை எடுத்துத்தான் மொழி பெயர்க்க முடியும். நீங்களே ஒவ்வொரு கட்டுரையிலும் பார்க்கலாம் எ.கா. "95% மனித மொழி பெயர்ப்பு என்று".


@ரவி "என்று விதண்டாவாதமாகத் தொடர்வதால், ..." எது விதண்டாவாதம், விக்கி எதோ சொந்த சொத்து போல பாவித்து உழைப்பவர்களையும், ஆக்கம் செய்பவர்களையும் தூற்றுவதா ?அல்லது சில தவறான போக்க்குகளை சுட்டிக் காண்பிப்பதா?--217.169.51.254 15:37, 20 ஏப்ரல் 2010 (UTC)

@217.169.51.254

// உங்கள் சராசரி பங்களிப்பு ஒரு கட்டுரையில் 2K இருக்கலாம். அதனால் 150K, 200K, 250K கட்டுரைகளை ஒரே மூச்சில் நீங்கள் தாழ்த்துவது சரியில்லை. எழுதுபவர்களை. கூகிள் கருவுயில் , அப்படி ஆங்கிலம் போட்டால் உடனே தமிழ் வராது. மொழி பெயர்ப்பாளரும் மிக்க சிரத்தை எடுத்துத்தான் மொழி பெயர்க்க முடியும். நீங்களே ஒவ்வொரு கட்டுரையிலும் பார்க்கலாம் எ.கா. "95% மனித மொழி பெயர்ப்பு என்று". //

எல்லாரும் கூகுள் காரர்கள் மாதிரி கட்டுரை மட்டும் எழுதிக் கொண்டிருந்தால் அவற்றைச் சீர்திருத்துதல் போன்ற மற்ற பணிகளைக் கவனிப்பது யார்? காசு வாங்காமல் தன்னார்வத்தின் பேரில் 2K கட்டுரையாவது எழுதுவதும் காசு வாங்கிக் கொண்டு 100K கட்டுரை எழுதுவதும் ஒன்றா? தன்னார்வத்தின் பேரில் எழுதுபவர் இருக்கிற தகவலைச் சரி பார்த்து, தேவையான கூடுதல் தகவல்களைச் சேர்த்து மேம்படுத்தி எழுதுவார்கள். அரைகுறையாக விட மாட்டர்கள். கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் கட்டுரையை ஏற்றிய பின் ஒரு முறையாவது அதைப் படித்துப் பார்த்தால் அவற்றின் குறைபாடுகள் விளங்கும்.

இங்கு தன்னார்வமாக பங்காற்றுபவர்கள் பலரும் தொழில்முறையில் சிறப்பாக இருப்பவர்கள். அவர்களின் ஒவ்வொரு மணித்துளியும் மிகப் பெறுமதி வாய்ந்தது. அதைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். தவிர, கட்டுரை எழுதுவது மட்டுமே விக்கிப்பணி அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். தெரன்சு மட்டும் தனியாளாக ஆயிரக்கணக்கான படிமங்களின் உரிமங்களைச் சீர் செய்தார். இது போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பங்களிக்கிறார்கள்.

கூகுள் மொழிபெயர்ப்பாளர்களின் தரத்தைக் குறைத்துச் சொல்வது நோக்கம் அல்ல. பல பிழைகள், கட்டாயங்கள் கூகுள் மொழிபெயர்ப்புக் கருவியால் நேர்வன. கூகுள் கருவி இல்லாமல் மொழிபெயர்த்தால் அவர்களே கூட இன்னும் சிறப்பாக மொழிபெயர்க்கலாம். ஆனால் கூகுள் கருவி மூலம் தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் யாரின் நலன்?--ரவி 16:00, 20 ஏப்ரல் 2010 (UTC)

நல்ல நடையில், பொறுப்பான முறையில், கருத்துச் செறிவான கட்டுரைகள் யார் எழுதினாலும் வரவேற்பே. இதிலென்ன ஐயம்? ஆனால் பொறுப்பற்ற முறையில் எழுதப்படும் கட்டுரைகளைப் பற்றித்தான் பேச்சு. விக்கி நடைமுறைகளுக்கு உட்பட்டால் என்று கூறுகின்றீர்களே பெயர் அறிவிக்காத பயனரே (217.169.51.254), அதைத்தான் பலரும் எடுத்துக்காட்டுகின்றனர் (உட்படவில்லை என்று). கூகுளுக்கு இல்லாத பணமா என்று கோபி கேட்கிறார். கூகுளைப் பற்றிக் கூறவில்லை, பணம் பெற்றுக்கொண்டு தாறுமாறாக மொழிபெயர்ப்பவர்களைப் பற்றித்தான் பேச்சு. சில கட்டுரைகள் நன்றாக தேறும்படியாக இருப்பது பற்றியும் முன்னரே நான் குறிப்பிட்டுள்ளேன். எவ்வகையான குறைபாடுகள் உள்ளன என்று ஏற்கனவே பலரும் விரிவாக பட்டியலிட்டுக் காட்டியுள்ளனர், பார்க்கவும்:விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு. பெயர் அறிவிக்காத பயனரே (217.169.51.254), விக்கி நடைமுறைகளுக்கு உட்பட்டு, நல்ல முறையில் செயல்பட்டால் இப்பேச்சுகள் எழ வேண்டிய தேவையையே இல்லையே? நீங்கள் எது "விதண்டாவாதம்" என்று கேட்கின்றீர்கள், அது நீங்கள் செய்வதுதான்! எ.கா. விக்கி எதோ சொந்த சொத்து போல பாவித்து என்றெல்லாம் பேசுவதும், அப்படி ஆங்கிலம் போட்டால் உடனே தமிழ் வராது (என்ன பொருளோ??!!) என்றெல்லாமும் எழுதியும் வீணே சொல்லாடல்களை வளர்த்தலும் போன்றவை. அருள்கூர்ந்து வளர்முகமாக, இணக்க முடிவு நோக்கி நகருமாறும், புரியும் படியாக கருத்துகளை முன் வைக்கவும் வேண்டுகின்றேன். இங்கு பலருடைய நோக்கமும், இந்த கூகுள் மொழிபெயர்ப்புகள் நன்றாக இருக்க வேண்டும், அவர்களும் பயன் பெறட்டும், விக்கிப்பீடியாவும் பயன்பெறட்டும் என்பதுதான். --செல்வா 16:05, 20 ஏப்ரல் 2010 (UTC)
@செல்வா "அப்படி ஆங்கிலம் போட்டால் உடனே தமிழ் வராது (என்ன பொருளோ??!!) " கூகிள் மொழி பெயர்ப்பு கருவியில், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன் அக்கிய மொழிகளுக்கு , ஆங்கிலத்தை மேல் பெட்டிடில் பொட்டால் உடனே கீழ் பெட்டியில் மொழி பெயர்ப்பு வரும். ஆனால் தமிழில் அது சாத்தியமில்லை. 98% - 100% (தமிழ்) மொழி பெயர்ப்பாலர்தான் மொழி பெயர்க்க வேண்டும். ஆனால் கூகிள் எஹ்.டி.டி.பி, விக்கி ஆகியவற்றின் உள்ளெழுத்தை (code)அப்படியே காத்து, வைக்கிரது. அந்த உதவிதான் கூகிளில் கிடைக்கும். தமிழ் 'மொழி' அளவில், ஆள்தான் மொழிபெயர்க்க வேண்டும். எதிர்காலத்தில் இது மாறலாம், ஆனல் இப்போது இல்லை. பலர் எதோ கூகிள் தமிழ் மொழிபெயர்ப்பாலர் சொகுசாக மேல் பெட்டியில் ஆங்கிலம் போட்டு , உடனே கீழ் பெட்டியில் தமிழ் கட்டுரை எடுக்கிறார் என்றால் அது தவறு.--217.169.51.254 11:01, 21 ஏப்ரல் 2010 (UTC)
@217.169.51.254 கூகுள் தமிழ் மொழிபெயர்ப்பாளர் சொகுசாக மொழிபெயர்க்கிறார் என்று எங்காவது சொன்னோமா? அவர்கள் சும்மா மொழிபெயர்ப்பதை விட கருவி வழியாக மொழிபெயர்ப்பது சிரமம் என்பது அறிவோம். ஆனால், அவர்கள் சொகுசாக மொழிபெயர்ப்பாக மொழிபெயர்க்கிறார்களா சிரமப்பட்டு மொழிபெயர்க்கிறார்களா என்பது தேவையில்லாத விசயம். மொழிபெயர்ப்பின் தரம் என்ன என்பதே பிரச்சினை. George46 சுட்டிகாட்டியபடி இது எந்திரத்தனமான மொழிபெயர்ப்பாகவே உள்ளது. ஜெய்சால்மர் கட்டுரையில் ஒரு வரி:

//இந்த வழியானது இந்தியா மற்றும் மத்திய ஆசியாவை இணைத்தது, எகிப்து, அரபியா, பெரிசியா, ஆப்ரிக்கா மற்றும் மேற்கு//

மேற்கண்டது போல் பிழையான சொற்றொடர் அமைப்புள்ள வரிகள் ஏராளம் உள்ளன. மேற்கண்ட பிழை சுட்டிக்காட்டிய பிறகும் திருத்தப்படவில்லை. இத்தகைய பிழைகள் வருவதற்கு கூகுள் கருவி பயன்படுத்துவதே காரணம்.--ரவி 12:15, 21 ஏப்ரல் 2010 (UTC)

//அப்படி ஆங்கிலம் போட்டால் உடனே தமிழ் வராது. மொழி பெயர்ப்பாளரும் மிக்க சிரத்தை எடுத்துத்தான் மொழி பெயர்க்க முடியும். நீங்களே ஒவ்வொரு கட்டுரையிலும் பார்க்கலாம் எ.கா. "95% மனித மொழி பெயர்ப்பு என்று// இதன் பொருள்: "மொழிபெயர்ப்பாளரும் சிரமப்பட்டுத் தான் மொழிபெயர்க்க முடியும். தானியக்கமாக அப்படியே மொழிபெயர்த்து விடாது". ஆனால், 58% மட்டுமே மனித முறையில் மொழிபெயர்க்கப்பட்ட சிடி-ரோம் கட்டுரையும் உண்டு. இது விதிவிலக்கு அல்ல இது தான் இலக்கு :) எவ்வளவு சிரமப்பட்டு மொழிபெயர்த்திருந்தால், hording என்பதை "பதுக்கல்" என மொழிபெயர்ப்பார்கள் :) இது தானா தொழில்முறை மொழிபெயர்ப்பாளரின் தரம்? பார்க்க: விஜய் மல்லையா கட்டுரையில் Kingfisher hording என்ற படிமச் சிகப்பு இணைப்பின் கீழ் உள்ள உரை).
தமிழ் விக்கியின் மற்ற பக்கங்களில் பிழையே இல்லையா என்று கேட்க வேண்டாம். தமிழ் விக்கியைப் பள்ளிக் குழந்தைகளும் பயன்படுத்தும் ஒரு கலைக்களஞ்சியம். எனவே, இதில் உள்ள ஒவ்வொரு சிறிய பிழையும் கவலைக்குரியது. தமிழ் விக்கியின் இயல்பான (organic) வளர்ச்சியை உறுதி செய்தால் தான் தரத்தை உறுதிப்படுத்த முடியும். இயல்பான வளர்ச்சி என்பது கட்டுரையை எழுதுபவர்கள், திருத்துபவர்கள், திருத்தப்படும் வேகம் ஆகியவற்றுக்கு இடையே சீரான விகிதம் இருந்தால் தான் சாத்தியம். கூகுள் திட்டம் இவ்வியல்பான வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை. --ரவி 16:20, 20 ஏப்ரல் 2010 (UTC)
ஆங்கில மூலத்தில் கொடுத்த வார்த்தைக்கு hording 'பதுக்கல்' சரிதான். அது hoarding என இருக்க வேண்டும்.--217.169.51.254 11:03, 21 ஏப்ரல் 2010 (UTC)
கட்டுரையில் உள்ள வரி:

//விஜய் மல்லையாவின் கையெழுத்தோடு கிங்க்பிஷர் விமான நிறுவனத்தின் ஒரு பதுக்கல்.//

hording = விளம்பரப் பலகை

ஆங்கிலச் சொல் என்னவாக வேண்டுமானால் இருக்கட்டுமே? விமான நிறுவனத்தின் ஒரு பதுக்கல் என்றால் என்ன ஐயா பொருள்? விமான நிறுவனத்தின் விளம்பரப் பலகை என்ற பொருளே இங்கு பொருந்தி வரும் (படத்தை நீக்கி இருப்பதால் துல்லியமாகச் சொல்ல முடியவில்லை). ஒரு வழமையான விக்கிப்பீடியர் இது போன்ற நேரத்தில் சூழலுக்கு ஏற்ப சரியான பொருளைத் தேடித் தருவார். அல்லது, குறிப்பிட்ட வரியையே நீக்கி எழுதுவார். ஆனால், கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கிலத்தில் என்ன இருந்தாலும் அப்படியே எழுதுவது என்ற அடிப்படையில் இயங்குவது தரத்தைக் குறைக்கிறது.--ரவி 12:15, 21 ஏப்ரல் 2010 (UTC)

  • இந்த கூகிள் கட்டுரைகள் பல பெரிய கட்டுரைகளையும் கொண்டிருப்பது நல்லதுதான். ஆனால் அவை கூடிய திருத்தத்துடன் இருந்தால், மேலும் சிறந்த விக்கிக் கட்டுரையாக இருக்க முடியும்.

கூகிள் மொழிபெயர்ப்பு கருவிகொண்டு ஆக்கப்பட்ட கட்டுரைகள் சிலவற்றை சீர்செய்யும் நோக்கில் சில கட்டுரைகளைப் பார்த்தேன். ஏற்கனவே பலரும் குறிப்பிட்டிருந்ததுபோல், முறையாக இணைப்புக்கள் கொடுக்கப்படாமையால் மிக அதிகளவில் சிவப்பு இணைப்புக்கள் இருப்பதுடன், அனாவசியமான சொற்களிலும் அதே சிவப்பு இணைப்புக்கள் உள்ளது. மேலும் பல சொற்றொடர்களின் கருத்து புரியவே இல்லை. அதனைப் புரிந்து கொள்ள, ஆங்கிலக் கட்டுரையைப் போய்ப் பார்த்து, நாமாக மொழிபெயர்க்க வேண்டியதாயுள்ளது. அப்படி அதிக சொற்றொடர்களை ஆங்கிலக் கட்டுரை சென்று, பார்த்து, நாமாகவே மொழிப்பெயர்த்துத்தான் திருத்தம் செய்ய வேண்டுமாயின், அது சிரமமானதும், இரட்டிப்பு வேலையுமாதலால் நேர விரயமுமாகும். உண்மையில், அப்படி செலவு செய்யும் நேரத்தில், புதிதாக ஒரு கட்டுரையை மொழிபெயர்க்க முடியும் என்றே தோன்றியது. நான் பல கட்டுரைகளுக்கு ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து மொழிபெயர்த்துத்தான் போட்டிருக்கிறேன். அது நானே உருவாக்கிய கட்டுரையாகவோ அல்லது ஏற்கனவே இருந்த கட்டுரையை அதிக தகவல்களைச் சேர்த்து மேம்படுத்திய கட்டுரையாகவோ இருந்திருக்கிறது. பொதுவாக நாங்கள் எவ்வகையிலாவது பங்களித்த கட்டுரைகளை எமது கவனிப்பு பட்டியலில் இட்டு வைத்து, அவற்றை மேலும் திருத்தவோ, மேம்படுத்தவோ, அதுபற்றிய கருத்துக்களை அந்த அந்த பக்கங்களுக்குரிய உரையாடல் பக்கங்களில் பார்த்து, அவற்றை திருத்திக் கொள்ளவோ செய்வதுதான் நல்லது. ஆதலால், கூகிள் மொழிபெயர்ப்பு செய்கிறவர்கள், தாம் எழுதிய கட்டுரைகளை மீள்பார்வை செய்து, திருத்தங்களை செய்வதுதானே நல்லது. ஆதலால், புதிய கட்டுரைகள் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, எழுதப்பட்ட கட்டுரைகளை சீர்செய்தபின் புதிய கட்டுரைகளை எழுதுவது நல்லதென்பது எனது கருத்து. --கலை 22:59, 20 ஏப்ரல் 2010 (UTC)

தானியங்கி மூலம் கூகுள் மொழிபெயர்ப்பு செய்து, அப்படியே பதிவிறக்கம் செய்வது பொருத்தமாகாது. இது தொடர்பாக விரிவான, ஆழமான கருத்துப் பகிர்வு ஆலமரத்தடியில் நடந்துவருகிறது. அது மிகவும் நன்று. ஆனால், தமிழ் மொழியின் இலக்கிய, இலக்கண, எழுத்து முறைப் பாணிகளை ஓரங்கட்டிவிட்டு, வேற்று மொழி நடையில், இயந்திரப் போக்கில் மொழியாக்கம் செய்வது தமிழுக்கும் தமிழருக்கும் இழுக்கு என்றே கருதுகின்றேன். "சுந்தரவனக்காடுகள்" என்னும் இடுகையைப் பார்த்தேன். அதில் வருகின்ற எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை, நடை மயக்கம், கருத்துத் தடுமாற்றம் போன்றவை மிகப் பல. மாணவர்களுக்கும் சரி, பிற பயனர்களுக்கும் சரி, இத்தகைய நேரடி, இயந்திரப் போக்கான தமிழாக்கம் பயன் தராது என்பது மட்டுமல்ல, பெரும் தீங்காக அமையும் என்றே நினைக்கின்றேன். தானியங்கி மூலம் மொழிபெயர்ப்போர் மொழிபெயர்த்த கட்டுரைகளைத் தாங்களே பிழை திருத்தி, பதிவிறக்கம் செய்வதுதான் செய்தித் துறை அறம்.--George46 18:11, 20 ஏப்ரல் 2010 (UTC)
கோபி சொல்வது போல அவர்கள் நாலு காசு சம்பாதிப்பதற்கு நாம் ஏன் குறுக்கே நிற்க வேண்டும்? எனது பரிந்துரை: இவர்களது கட்டுரைகளைத் தடை செய்யாமல், இனி வரும் கட்டுரைகள் ஒவ்வொன்றையும் விக்கிப்பீடியா:கூகுள் திட்டம்/கட்டுரைத்தலைப்பு என்ற பெயர்வெளிக்கு நகர்த்தி தகுந்த வார்ப்புரு ஒன்றையும் இடலாம். கட்டுரை எழுதியவர்களோ அல்லது வேறு யாரும் பயனரோ இவற்றை முடிந்தால் திருத்தி மீண்டும் விக்கிக் கட்டுரையாக நகர்த்தி விடலாம்.--Kanags \உரையாடுக 09:48, 21 ஏப்ரல் 2010 (UTC)
மன்னிக்கவும், யாருடைய வணிக நலனையும் கருத்தில் கொண்டு நாம் முடிவு செய்வது சரி இல்லை. கூகுளுக்கு வேண்டும் என்றால் இக்கட்டுரைகளை கூகுள் Knol திட்டத்தில் ஏற்றலாமே?
சுந்தரும் நானும் கூகுளிடம் பேசிப் பார்த்ததில் இருந்து இது போல இன்னும் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் வந்து குவிவதற்கான வாய்ப்பு நிறைய உண்டு. எத்தனை கட்டுரைகள் எழுதப் போகிறார்கள் என்பதைக் கூட வெளிப்படையாகச் சொல்ல மறுக்கிறார்கள். அத்தனை கட்டுரைகளையும் விக்கியில் குவிப்பது குப்பையையே கூட்டும். வேறு பெயர்வெளிக்கு நகர்த்தல், வார்ப்புரு இடல் எல்லாமே விக்கியர் உழைப்பு வீணாக்கவே வழி கோலும். கூகுள் தேடலில் கட்டுரைப் பக்கங்கள் மட்டும் அல்ல, விக்கியின் பிற பெயர்வெளிப் பக்கங்களும் வருகின்றன. விக்கியில் எது கட்டுரை எது பிற பக்கங்கள் என்று அறியாதோர் இந்தப் பக்கங்களின் தரத்தைக் கண்டு மயங்க வாய்ப்புண்டு. தவிர, கட்டுரையைச் சீர் செய்யாமல் நீங்கள் பாட்டுக்கு எழுதிக் கொண்டே இருங்கள் என்று சொல்வது மிகவும் தவறான சமிக்ஞை. தனியொரு பயனர் இது போல் செயல்பட்டால் அவருக்கு இச்சலுகை கிட்டுமா? இல்லை எனில், கூகுள் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் சலுகை தேவை இல்லை.
சிறிது காலம் பொறுப்போம் என்று வாக்களித்து இருப்பவர்கள், எவ்வளவு காலம், எப்படி அணுகலாம் என்பது குறித்துச் சற்று விரிவாக எழுதினால் உதவும்.
பார்க்க: இது பற்றிய இந்திய விக்கிமீடியர் சமூக உரையாடல்
என் பரிந்துரை:
  • மே 1 (அல்லது தேவைப்படால் மே 15 வரை) முதல் புதிய கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் பதிவேற்றத் தடை.
  • அடுத்த மூன்று மாத காலத்துக்குள் ஏற்கனவே கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் எழுதியுள்ள கட்டுரைகளை முழுமையாக சீர் செய்ய வேண்டும்.
    • எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை, சொற் பிழை, சிகப்பு இணைப்புகள், தேவையற்ற ஆங்கிலச் சொற்கள், தகவல் பிழை நீக்கம்
    • வார்ப்புரு, படங்கள் சேர்த்தல்
  • மூன்று மாத காலத்துக்குப் பிறகும் கூகுள் மொழிபெயர்ப்பாளர்களின் செயற்பாடுகள் நிறைவு இல்லை என்றால் கூகுள் பங்களிப்பை ஒட்டு மொத்தமாகத் தடை செய்வது + கூகுள் கட்டுரைகளின் முதல் பத்தி அல்லது சுருக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற பகுதிகளை பேச்சுப் பக்கத்துக்கு நகர்த்துவது. இந்தச் சுருக்கத்தை மட்டும் முதற்கட்டமாக நாம் கூட்டாக உரை திருத்த முயலலாம்.
இருக்கிற கட்டுரைகளைச் சீராக்க முனையாமல் மேலும் மேலும் அதே பிழைகளை உடைய கட்டுரைகளைச் சேர்த்துக் கொண்டே போவது சரி இல்லை--ரவி 12:15, 21 ஏப்ரல் 2010 (UTC)
  1. கூகிள் மொழிபெயர்ப்பாளர்கள் தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களாக இருப்பார்கள் என ஊகிக்கிறேன். ஒரேயடியாக உடனடியாக அவர்களைத் தடுப்பது தனிப்பட அவர்களைப் பாதிக்கும் என்பதையே தெரிவித்தேன். (கூகிளின் வணிக நலத்துக்காகவல்ல) ஆனால் அவர்கள் இன்னும் தரமானதாக மொழிபெயர்த்தால் அவர்களுக்கும் நல்லது; விக்கிப்பீடியாவுக்கும் நல்லது என்பதனை நான் மறுக்கவில்லை.
  2. அத்துடன் வசனத்துக்கு வசனம் மொழிபெயர்ப்பதென்பது நடைமுறையில் மிகச் சிக்கலானது. ஆனால் கூகிளுக்கு அதுவே தேவையெனத் தெரிகிறது. ஆதலால் தொலைநோக்கில் கூகிள் மொழிபெயர்ப்பதென்பது பயனற்ற தொன்று. ஆனால் அவற்றில் 10% தானும் தேறுமென்றால் ஒரேயடியாக அவர்களைத் தடுக்காமல் அந்த 10% ஐ வைத்துக் கொண்டு ஏனையவற்றை நீக்கிவிடலாம். ஒரு கட்டத்தில் கூகிள் தன் செயற்பாட்டை நிறுத்திக் கொள்ளும்.

ஆதலால் ஒட்டுமொத்த கூகிள் மொழிபெயர்ப்புக்கள் என்று பார்க்காமல் கட்டுரைக்குக் கட்டுரை அணுகலாம் என்ற கருத்தை முன்வைத்தேன்.

ஆனால் இதுவரை எழுதப்பட்ட கட்டுரைகள் எல்லாவற்றிலும் //எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை, சொற் பிழை, சிகப்பு இணைப்புகள், தேவையற்ற ஆங்கிலச் சொற்கள், தகவல் பிழை நீக்கம்// என்பது நடைமுறைச் சாத்தியமென்று தெரியவில்லை. இதுவரை காலமும் இப்பணியிலேயே ஊறிய விக்கிப்பீடியர்களாலேயே அது முடியவில்லை.

அவர்கள் ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து மொழிபெயர்க்காமல் இலகு ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து மொழிபெயர்த்தால் மொழிபெயர்ப்பின் தரம் பேணுவது அவர்களுக்கும் இலகுவாயிருக்கும்; உரைதிருத்துவதும் சுலபமாயிருக்கும். பிரிட்னி ஸ்பியர்ஸ் போன்ற கட்டுரைகள் 200கி.பைட்டு அளவிருந்து யாருக்கும் எப்பயனுமில்லை. ஆனால் அதே கட்டுரை இலகு ஆங்கில விக்கியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருந்தால்

  • உள்ளடக்கம் போதியதாயிருந்திருக்கும்.
  • மொழிபெயர்ப்பு தரமாயிருந்திருக்கும்.
  • இலகுவாக உரை திருத்தியிருக்கலாம்.

-- கோபி 14:30, 21 ஏப்ரல் 2010 (UTC)

சராரி கட்டுரைகள் 2K - 5K தான் உள்ளன. அதிலேயே பிழைகள் உள்ளன. அதனால் 200K கட்டுரைகளில் சராசரியை விட 60 மடங்கு பிழைகள் இருக்க வய்ப்பு இருக்கு. ஆனால் பெரிய கட்டுரைகள் தான் படிப்பவர்களுக்கு பொருள் செரிவாக, பயனுள்ளதாக இருக்கும். பிழைகளுக்கு பயந்து, கட்டுரைகள் 5K தான் இருக்க வேண்டும் என்பது கோழைத்தனம்.--217.169.51.254 14:48, 21 ஏப்ரல் 2010 (UTC)
உங்களுக்கு பயனில்லை என சொல்லுங்கள். பிரிட்னி ஸ்பியர்ச் இப்போது எம்.ஜி.ஆர். சிவாஜியை விட அதிகமாக , உலகளவில் தெரியப்படுகிறர்;அவர்களைவித அதிகமாக ரசிகர்கள் உள்லனர், அவர்கலை விட அதிகமாக வியாபாரம் செய்கிறார். அதனால் கட்டுரைகளின் 'பயனை'ப் பற்றி பேச முடியாது . விக்கியின் கொள்கை 'தெரியப்படுவது' தான் (notability), அப்படிப்பார்த்தால் பிரிட்னி நன்றாக , தெரியப்படுபவர். --217.169.51.254 14:59, 21 ஏப்ரல் 2010 (UTC)

வணக்கம் 217.169.51.254,

  • நீங்கள் கூகிள் மொழிபெயர்ப்பு முயற்சியுடன் சம்பந்தப்பட்டவரென்றால், குறித்த முயற்சியை ஒழுங்குபடுத்த முயற்சியுங்கள். இலகு ஆங்கில விக்கியிலிருந்து மொழிபெயர்ப்பது இலகுவானது என்பதனையும் நீங்கள் கவனிக்கலாம்.
  • நீங்கள் வழக்கமாக தமிழ் விக்கிப்பீடியாவில் வந்து விதண்டாவாதம் செய்பவர்களில் ஒருவரென்றால், கருத்து எழுத முன்னர் அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதென்பதையாவது விளங்கிக் கொள்ள நீங்கள் முயற்சிக்கலாம். உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

நீங்கள் யாராக இருந்தாலும் கூகிள் மொழிபெயர்ப்புக்கள் மிக விரைவில் தடுக்கப்படுவதை ஊக்குவிக்கின்றீர்கள் :) வாழ்த்துக்கள். -- கோபி 14:58, 21 ஏப்ரல் 2010 (UTC)

இது என்ன மொழிபெயர்க்கும் பயனர்களுக்கு ஒரு மிரட்டலா ? ? --217.169.51.254 15:20, 21 ஏப்ரல் 2010 (UTC)

கோபி, நானும் கூகுளின் வணிக நலனைச் சொல்லவில்லை. மொழிபெயர்ப்பு நிறுவனத்தின் நலனைத் தான் குறிப்பிட்டேன். ஆனால், அதற்காக விக்கியின் நலனை விட்டுக் கொடுக்க முடியாது. கூகுள் கருவியின் எல்லைகளுக்கு உட்பட்டு, கூகுள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு வழிகாட்டல்களுக்கு உட்பட்டுச் செயல்படுவதால் தான் இப்பிரச்சின்னை. கருவி இல்லாமல் சுதந்திரமாக மொழிபெயர்த்தால் இதே நிறுவனங்களே இன்னும் தரமான மொழிபெயர்ப்பு வழங்க முடியும்.

இத்திட்டத்தின் அடிப்படையே மிகக் கூடுதலான உரையை கூகுள் கருவிக்குத் தந்து அதனைப் பழக்குவதே (learning algorithm from mass input) இந்த நோக்கத்துக்கு simple english விக்கி உதவாது.

ஒவ்வொரு கட்டுரையாகத் தான் இதனை நோக்க வேண்டும் என்ற அணுகுமுறையில் உள்ள நியாயத்தை உணர்கிறேன். ஆனால், அதற்கு ஒவ்வொரு கூகுள் பங்களிப்பாளரும் தன்னால் இயன்ற அளவு உதவ வேண்டும். அவர்களும் இதில் ஈடுபட்டால் தான் அடுத்தடுத்த கட்டுரைகளில் அதே பிழைகள் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். ஒருவர் பிழையாக எழுதிக் கொண்டே இருப்பார், மற்றவர் மண்டையைப் பிய்த்து சீர்திருத்த வேண்டும் என்பது சரியா? விக்கி நடைமுறைக்கு உட்பட்டதா?

//ஆனால் இதுவரை எழுதப்பட்ட கட்டுரைகள் எல்லாவற்றிலும் //எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை, சொற் பிழை, சிகப்பு இணைப்புகள், தேவையற்ற ஆங்கிலச் சொற்கள், தகவல் பிழை நீக்கம்// என்பது நடைமுறைச் சாத்தியமென்று தெரியவில்லை. இதுவரை காலமும் இப்பணியிலேயே ஊறிய விக்கிப்பீடியர்களாலேயே அது முடியவில்லை.//

விக்கிப்பீடியர்களாலேயே முடியவில்லை என்பது தவறு. விக்கிப்பீடியர்கள் இதைச் செய்யத் தேவை இல்லை என்பதே சரி. ஒவ்வொரு கட்டுரையையும் சீராக்க குறைந்தது 3 மணி நேரம் ஆகும். கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் விடும் பிழைகளுக்கு நமது நேரத்தை வீணடிக்க முடியாது. தமிழ் விக்கி போன்ற சிறிய சமூகத்தில் ஒவ்வொரு பயனரும் இயன்ற அளவு முழுமையான பங்களிப்பு வழங்குவதே உகந்தது. நாம் எத்தனையோ பெரிய கட்டுரைகளை உரை திருத்திக் கொண்டு தான் இருக்கிறோம். இந்தக் கட்டுரைகளை உரை திருத்துவதை விட முதலில் இருந்தே எழுதி விடுவது இலகு. --ரவி 15:32, 21 ஏப்ரல் 2010 (UTC)

தவறாக மொழிபெயர்ப்பது கூகுளுக்கும் நல்லதல்ல. மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் கட்டுரையை திருத்துவார்கள் என்று எதிர்பார்ப்போம். தற்போது தடை விதிப்பதே தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நல்லது. --குறும்பன் 16:35, 21 ஏப்ரல் 2010 (UTC)

தானியங்கி மூலம் கூகுள் மொழிபெயர்ப்பு செய்து, அப்படியே பதிவிறக்கம் செய்வது பொருத்தமாகாது. இது தொடர்பாக விரிவான, ஆழமான கருத்துப் பகிர்வு ஆலமரத்தடியில் நடந்துவருகிறது. அது மிகவும் நன்று. ஆனால், தமிழ் மொழியின் இலக்கிய, இலக்கண, எழுத்து முறைப் பாணிகளை ஓரங்கட்டிவிட்டு, வேற்று மொழி நடையில், இயந்திரப் போக்கில் மொழியாக்கம் செய்வது தமிழுக்கும் தமிழருக்கும் இழுக்கு என்றே கருதுகின்றேன்.

அண்மையில் தமிழ் விக்கிப்பீடியாவில் கூகிள் மொழிபெயர்ப்பு இடுகை ஒன்றினை ஆய்ந்து பார்த்தேன். அதில் வருகின்ற எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை, நடை மயக்கம், கருத்துத் தடுமாற்றம் போன்றவை மிகப் பல. மாணவர்களுக்கும் சரி, பிற பயனர்களுக்கும் சரி, இத்தகைய நேரடி, இயந்திரப் போக்கான தமிழாக்கம் பயன் தராது என்பது மட்டுமல்ல, பெரும் தீங்காக அமையும் என்றே நினைக்கின்றேன். தானியங்கி மூலம் மொழிபெயர்ப்போர் மொழிபெயர்த்த கட்டுரைகளைத் தாங்களே பிழை திருத்தி, பதிவிறக்கம் செய்வதுதான் செய்தித் துறை அறம். --George46 19:36, 21 ஏப்ரல் 2010 (UTC)

முனைவர் பவுல் வறுவேல் (Geroge46), நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே. மிகுந்த அக்கறை கொண்டு நீங்கள் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி. மொழிபெயர்ப்பாளர்கள் நீங்கள் கூறுவனவற்றை நேர்மையுடன் கூர்ந்து எண்ணிப்பார்த்து ஆவன செய்ய வேண்டும் என்பதே என் போன்ற பயனர்களின் வேண்டுகோள். அவர்கள் பணி செம்மையாக அமைய வேண்டும் என்பதே அவா. கூகுள் நிறுவனத்தையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். ஆனால் அதில் பணியாற்றும் மேலாளர்கள் இங்கு வைக்கப்படூம் நேர்மையான கருத்துகளை உட்கொண்டு, ஏற்ற திருத்தத்துடன் செயல்பட்டால் அது கூகுளுக்கும் நல்லது விக்கிப்பீடியாவுக்கும் நல்லது. பொறுப்பான முறையில், அதிகப் பயன் விளையுமாறு செயல்பட வேண்டுகிறேன். மீண்டும் உங்கள் தெளிவான, பயனுடைய கருத்துப்பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.--செல்வா 20:06, 21 ஏப்ரல் 2010 (UTC)
  • நான் நடுநிலமை (Arbitration; negotiation) என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளேன். கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்ப்பு என்ற அளவில் மட்டுமே இயங்குகின்றனர். நாமோ உணர்வு பூர்வமாகவும் தகவல் களஞ்சியமாகவும் த.வி.யைப் பார்க்கின்றோம். இருந்தும் நாம் உணர்ச்சி வயப்பட வேண்டாம். இன்னும் மூன்று மாதங்களோ நான்கு மாதங்களோ பார்ப்போம்.
  • கூடிய விரைவில் கூகுள் மொழிபெயர்ப்பியில் [1] தமிழும் சேரும். (இது என் கணிப்பு!) அதைப் பயன்படுத்தும் நபர்கள் - ஏன் நானே கூட அதைப் பயன்படுத்தத் தயங்க மாட்டேன், சரியானதை எடுத்துக் கொள்வேன் - அதிலுள்ள நிறை குறைகளைப் பொறுத்து அக்கருவியை மக்கள் மதிப்பிடுவர்.
  • கூகுள் மொழிபெயர்ப்பாளர்களின் மொழிபெயர்ப்பு மோசமாக உள்ளது என்று என்னால் கூறவே இயலாது. கிட்டத்தட்ட டிசுகவரி நிலையத்தடம் போல பிரவாகமான நடை -- தவறுகள் வரும்; ஆனால் டிசுகவரியில் காட்டும் சிறப்பான நிகழ்ச்சிகளை இப்போது பாமரனும் புரிந்து கொள்கின்றானே!
  • கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை (இவ்வாறு ஏன் பிரித்து வர்ணம் பூச வேண்டும்? கலைக்களஞ்சிய நடையில் உள்ளனவே அவை) எழுத அவற்றை எழுதியவர்கள் உழைத்திருப்பது தெரிகிறது; 98 விழுக்காடு மனிதமுயற்சி செய்துள்ளேன், கருவியைப் பயன்படுத்தவில்லை என்று தன் ஆதங்கத்தை ஒருவர் வெளிப்படுத்தியுள்ளாரே! மேலும்

Shanthalan என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்து வந்த சாந்தகுமார் தன் மொழிபெயர்ப்பு ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளார், நேர்ப்போக்கான கருத்துகளையும் தெரிவித்து உள்ளார் -- நாம் சற்று பொறுமையாக இருத்தல் வேண்டும். --பரிதிமதி 19:06, 21 ஏப்ரல் 2010 (UTC)

217.169.51.254! பெயர் குறிப்பிட விரும்பாத கூகுள் மொழிபெயர்ப்பாள அன்பரே!

  • வாதத்திற்கு எதிர் விவாதம் ... என்று நாம் தொடர வேண்டாம். தமிழ் விக்கி ஒரு வளர்ந்து வரும் இயக்கம்; இப்பொழுது தான் எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளது. பாலிற்கு சிறிதளவு சேர்த்தாலும் சீனி போல நீங்கள் செயல்பட வேண்டும்; அதிகமான நீரை ஊற்றி பாலை நீர்க்கச் செய்யக்கூடாது. நீங்கள் மொழிபெயர்ப்பு என்ற தளத்திலேயே நின்று செயல்படுகின்றீர்கள். த.வி.யைப் பொறுத்தவரை நான் அதை ஒரு தகவல் களஞ்சியமாகவும் அதற்கும் மேலாக தமிழுக்கு

தொண்டு என்று உணர்வு பூர்வமாகப் பார்க்கின்றேன். உங்கள் உழைப்பும் தெரிகிறது - அதையெல்லாம் சுட்டிக்காட்ட வேண்டாம்.

  • சில விசயங்கள், அவற்றைச் சரி செய்து கொள்ளலாமே? சிவப்பு இணைப்புகள்,

தலைப்புத் தேர்வுகள், போன்றவை.

  • புதிய சொல்லாக்கங்களில், சொல் தெரிவுகளில் மிகவும் கவனம் தேவை; தமிழ் விக்சனரி, சென்னைப் பல்கலையின் தமிழ்ப் பேரகரமுதலி உள்ளிட்ட பல தளங்களைக் கண்டு தெளிந்து, சொல்லாக்க விதிகளையெல்லாம் பின்பற்றி எழுதுங்கள். வணக்கம். --பரிதிமதி 19:06, 21 ஏப்ரல் 2010 (UTC)

@பரிதிமதி, இத்திட்டம் கடந்த செப்டம்பர் முதல் நடக்கிறது. ஏற்கனவே 8 மாதங்கள் ஆகி விட்டன. சுந்தரும் நானும் கூகுள் நிறுவனத்துடன் தொடர்பில் தான் உள்ளோம். எனவே, பேசிப் பார்க்காமல் (negotiation / arbitration என்ற அணுகுமுறை கூட தவறு. கூட்டுழைப்பு (collaboration) தான் உகந்தது) இந்த வாக்கெடுப்பு நடக்கவில்லை. இப்போது கூட முழுமையாகத் தடை செய்யக் கோரவில்லை. ஏற்கனவே இருக்கிற கட்டுரைகளைச் சீர்திருத்தச் சொல்லிக் கேட்பது தவறா? கட்டுரைகளில் பிழை உள்ளன என்று ஒத்துக் கொள்பவர்கள் அவற்றைத் திருத்துவதற்கான போதிய முயற்சிகளைத் தொடங்கவில்லை.

இப்பொழுதே விக்கி சமூகத்தை எடுத்தெறிந்தும் அவதூறாகவும் பேசுபவர்கள் இத்திட்டம் வளர்ந்தால் என்ன செய்வார்கள் என்று யோசித்துப் பார்த்தீர்களா?

தமிழுக்கு கூகுள் மொழிபெயர்ப்புச் சேவை கிடைக்குமானால் நன்று தான். ஆனால், அதற்காக விக்கியைச் சோதனை எலியாக்க முடியாது. அவர்களே இதே திட்டத்தை ஏன் கூகுள் Knolல் செய்யக் கூடாது?

Discovery தமிழ் ஒளிபரப்பின் தரம் கூகுள் மொழிபெயர்ப்பின் தரத்தைக் காட்டிலும் 100 மடங்கு மேல் என்று சொல்வேன். கூகுள் கருவிக்கு கட்டுப்பட்டு சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பதால் மிகவும் செயற்கையான, வழுவான தமிழ் நடையே கிட்டுகிறது. தொலைக்காட்சி ஒளிபரப்பில் கூட தவறுகள் இருக்கலாம். ஆனால், விக்கிப்பீடியா என்பது ஒரு கலைக்களஞ்சியம். இதன் தரத்தில் தெரிந்தே சமரசம் செய்ய முடியாது. --ரவி 04:13, 22 ஏப்ரல் 2010 (UTC)

நீண்ட உரையாடல் ஒருகுவியத்திற்கு வராது சுற்றுப்புறச் செய்திகளில் சிதறடிக்கப்படுகிறது. அடையாளம் காட்டாத பயனர் நமது விமரிசனங்களை அதன் அடிப்படையிலிருந்து புரிந்துகொள்ள முயலாமல் இங்குள்ளவர்கள் ஏதேச்சதிகாரமாக கூகுளை எதிர்க்கிறார்கள் என்ற தனது மனச்சார்புடன் உரையாடி வருகிறார். அவருக்கு வரிக்கு வரி பதிலளித்து நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை. எனது கருத்துக்கள்:
  • கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் படிப்பவருக்கு எந்தத் தகவலையும் விளங்குமாறு கொடுப்பதில்லை..அவை வார்ப்புருக்கள்,ஒளிப்படங்கள் இல்லாமையாலும் சிவப்பு உள்ளிணைப்புகளாலும் பிழையான தமிழ் நடையாலும் சொல்ல வந்ததை விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பது கலைக்களஞ்சியத்திற்கு ஒவ்வாத ஒன்றாகும். இதில் மாற்றுக் கருத்து இல்லை.
  • இப்பிழைகளைத் திருத்துமாறு கூகுள் குழுமத்துடன் கூட்டுழைப்பு நிலையில் எடுத்துச்செல்ல முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். பரிதிமதி கூறுவதுபோல ஓரிருவர் நேர்மறையாக எடுத்துக் கொண்டு தங்கள் ஆக்கங்களின் தரத்தை உயர்த்திட முயன்று வருகின்றனர். இவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.கூகுளுடனான புரிந்துணர்வை இன்னும் சீராக்க முடியுமா என்று சுந்தர்/ரவி ஆயலாம்.
  • பிற இந்திய விக்கி குமுகத்தினருடன் ஒன்றுபட்டு செயலாற்றலாம். இதற்கான பல்விக்கி பரிந்துரைக் குழுவொன்றிற்கு வித்திடலாம்.
  • மேற்கூறிய செயலாக்கங்களை மீளாய்வு செய்து மே 15 வாக்கில் ஓர் முடிவெடுக்கலாம்.
நமது தொலைநோக்கம் தரமான கட்டுரைகளை கூகுள் தமிழாக்கக் கருவியைப் பயன்படுத்தியும் பெறுவதாக இருக்கும். --மணியன் 04:43, 22 ஏப்ரல் 2010 (UTC)

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்: சும்மா உரையாடலை வளர்ப்பவர்களுக்குத் தீனி போட வேண்டாம். இந்த அடையாளம் காட்டாத பயனருக்கும் கூகுளுக்கும் தொடர்பு இல்லை என்றே நினைக்கிறேன். அவர் யாரென்பதையும் ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது. யாராக இருந்தாலும் பயன் விளைவிக்காமல் வேண்டுமென்றே எரிச்சலூட்டும் எண்ணத்தில் பேசுவதால் அவரைப் புறக்கணியுங்கள். -- 05:16, 22 ஏப்ரல் 2010 (UTC)

சரி சுந்தர். இங்கு மட்டுமல்லாம் முக்கியமான எல்லா கொள்கை உரையாடல்களிலும் அடையாளம் காட்டாமல் குதர்க்கமாக எழுதுபவர்களைப் புறக்கணிக்கலாம் என்று நினைக்கிறேன்.
மணியன், இந்திய விக்கி அளவிலும் விக்கிமீடியா நிறுவன அளவிலும் இந்தச் செயல்திட்டம் குறித்து அறிந்து இருக்கிறார்கள். அனைவரின் கருத்தும் அந்தந்த மொழி விக்கிப்பீடியா சமூகமே இதைப் பற்றி முடிவெடுக்கட்டும் என்பதாக இருக்கிறது. --ரவி 06:20, 22 ஏப்ரல் 2010 (UTC)


  • நான் இதுவரை கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் பார்க்கவில்லை. ரவி சொன்ன பிறகுதான் பார்த்தேன். முழுமையாக இல்லை. இதைச் சீர்திருத்திக் கொண்டிருப்பதை விட நேரடியாக மொழிமாற்றம் செய்து விடலாம். ஒரு நிறுவனத்தின் சோதனை முயற்சிக்கு ஒத்துழைக்கும் போது அதில் வரும் அனைத்துக் குறைபாடுகளையும் அவர்கள் சரிசெய்து கொடுக்க வேண்டும். அவர்கள் சரி செய்து கொடுக்க முடியாத நிலையில் இப்பணியை நிறுத்திவிடுவதே நல்லது.--Theni.M.Subramani 06:58, 23 ஏப்ரல் 2010 (UTC)


கூகிள் வழி மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகளில் பல தற்போதுள்ள நிலையில், தமிழ் விக்கிப்பீடியாவில் இடம்பெறுவதற்குத் தகுதி அற்றவை. ஏற்கெனவே இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ள கட்டுரைகளைத் திருத்துவதற்கு நம்மிடம் உள்ள வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தினால் கூட முழுமையாகத் திருத்து முடிப்பதற்குப் பல மாதங்கள் எடுக்கக்கூடும். தரத்தில் எவ்வித முன்னேற்றமும் இன்றி மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் தொடர்ந்தும் பதிவேற்றப்பட்டு வருவது கவலைக்குரியது. மேற்படி மொழிபெயர்ப்புத் திட்டத்தின் நல்ல அம்சங்களுட் சிலவாகப் பின்வருவன மேலுள்ள கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

  1. . சில மொழி பெயர்ப்பாளர்களுக்கு வருமானம் தரும் தொழிலாக இருக்கிறது. (அதை ஏன் கெடுக்க வேண்டும்?)
  2. . கூகிள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் மென்பொருளை உருவாக்க உதவும்.
  3. . தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நீளமான கட்டுரைகள் கிடைக்கின்றன.

மொழி பெயர்ப்பவர்கள் தமிழ் விக்கிப்பிடியாவுக்கு நல்ல கட்டுரைகளைத் தருவார்களேயானால் மற்றவர்கள் ஏன் அதைத் தடுக்கப்போகிறார்கள் (ரவி குறிப்பிட்டிருப்பதுபோல் நெறிமுறை சார்ந்த பிரச்சினைகள் இருந்தால் கூட)? அதற்கு அவர்கள் தங்கள் தொழிலைச் சரியாகச் செய்யவேண்டும். தனிப்பட்ட சிலர் வருமானம் பெறவேண்டும் என்பதற்காக, மற்றவர்கள் தமது நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து, தன்னார்வமாக உருவாக்கிவரும் கலைக்களஞ்சியத்தைச் சீரழிக்க அனுமதிக்க முடியாது. இந்த மொழிபெயர்ப்புத் திட்டம் பணம் செலுத்தும் கூகிளுக்கோ அல்லது அதன் விளைவுகளைப் பயன்படுத்தும் தமிழ் மக்களுக்கோ எவ்வித பயனும் இன்றி ஒழுங்கற்ற முறையில் நடத்தப்படுகிறது என்பதே எனது கருத்து. ஒருவர் பணம் கொடுத்து ஒரு சேவையைப் பெறுவதானால் அச் சேவையின் விளைவு தரமாக உள்ளதா என்று பார்த்துத்தான் பணம் கொடுக்க வேண்டும். ஆனால், மொழிபெயர்க்கப்படும் கட்டுரைகளின் தரத்தை கூகிள் தரப்பில் எவரும் மதிப்பீடு செய்வதாகத் தெரியவில்லை. எல்லாக் குப்பைகளையுமே தமிழ் விக்கிப்பீடியாவில் கொட்டிவிட்டுப் பணத்தையும் கொடுத்து விடுகிறார்கள் போல் தெரிகிறது. இதனால் தான் பல மொழிபெயர்ப்பாளர்கள் விக்கிப்பீடியாவின் நுட்பங்கள் எதையுமே அறிந்து கொள்ள முயலாமலும், தாங்கள் எழுதியவற்றைத் திரும்பப் பார்த்துப் பிழை திருத்தம் செய்யாமலும் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. தொழில் முறையில் மொழிபெயர்ப்புச் செய்ய விரும்புபவர்கள் அதற்குரிய தொழில் தர்மத்தைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். தமது வேலையின் விளைவுகள் உரிய பயன் விளைவிக்க வேண்டும் என்பதில் அக்கறை இருக்க வேண்டும். அதை விடுத்துப் பணத்தை மட்டும் குறியாகக் கொண்டால் மற்றவர்கள் அதற்கு ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.

இத் திட்டம், தமிழில் மொழிபெயர்க்கும் மென்பொருள் ஒன்றை உருவாக்க உதவும் என்பதனால்தான் எனக்கும் இத் திட்டத்தின் மீது ஆர்வம் இருந்தது. ஆனால், இத்தகைய மொழி பெயர்ப்புகளை வைத்து உருவாக்கும் மென்பொருளும் இவ்வாறான மொழி பெயர்ப்புகளைத்தான் கொடுக்கும். எனவே, இதில் எதிர் பார்க்கும் பயன் விளையும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. கூகிளுக்கு இதுதான் உண்மையான நோக்கமாக இருந்தால், மொழிபெயர்ப்புக்களை இன்னொருவர் வாசித்து மதிப்பீடு செய்வதற்கான ஒழுங்குகளைச் செய்யவேண்டும்.

நீளமான கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தேவைதான். அதற்காக, எழுத்துப்பிழை, சொற்பிழை, பொருட்பிழை எனப் பல நூறு பிழைகளுடன் கூடிய கட்டுரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. பல வேளைகளில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளைப் பதிவேற்றும்போது, ஏற்கெனவே பிற பயனர்கள் அதே தலைப்பில் எழுதிய கட்டுரைகளைத் தன்னியக்கமாகவே நீக்கிவிட்டுப் பல நூறு பிழைகளுடன் எழுதப்பட்ட கட்டுரைகள் அவ்விடத்தில் உட்கார்ந்து கொள்கின்றன. பொதுவாக ஒரு பயனர் எழுதிய கட்டுரைகளை நீக்குவதற்கு முன்னர் எடுக்கவேண்டிய எந்த வழிமுறைகளையுமே இத் திட்டம் மதித்து நடப்பதில்லை. பல மணி நேரத்தைச் செலவு செய்து ஒரு தன்னார்வ நோக்குடன் தான் எழுதும் ஒரு கட்டுரை ஒரு நாள் திடீரென மறைந்து போவதை எந்தப் பயனருமே விரும்ப மாட்டார்.


கட்டுரைகளைப் பற்றிக் கலந்துரையாடுவதும், அவற்றில் உள்ள குறை நிறைகள் தொடர்பான கருத்துக்களை எடுத்துக் கூறுவதும், இக் கருத்துக்களுக்கான பதில்களைக் கட்டுரை எழுதியவரிடம் இருந்து பெற்றுக்கொள்வதும், இவற்றின் விளைவாகக் கட்டுரை எழுதியவரோ பிற பயனர்களோ அவற்றை மேம்படுத்துவதும், விக்கிப்பீடியாவின் தரத்தைப் பேணுவதற்கான அடிப்படையான பொறிமுறைகள். கூகிள் மொழிபெயர்ப்பாளர்கள் இவை எதையும் பற்றிக் கவலைப்படாமல், விக்கிச் சமுதாயத்துக்கு வெளியில் நின்றுகொண்டு பிழைகள் மலிந்த கட்டுரைகளை எழுதிக் குவிப்பதும், அது பற்றிய பயனர்களின் கருத்துக்களுக்குச் செவி சாய்க்காமல் விடுவதும், திராணி இருந்தால் திருத்துங்கள் என்று சவால் விடுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல.


இத்தகைய ஒழுங்கு முறைப் பிறள்வுகள் ஒரு தனிப்பட்டவரிடமிருந்து வந்தால் கட்டுரைகளை நீக்குவதன் மூலம் அல்லது அவரது பயனர் கணக்கைத் தடைசெய்வதன் மூலம் பிரச்சினையைச் சுலபமாகத் தீர்த்துவிட முடியும். ஆனால், இது ஒரு ஒழுங்கமைவான அமைப்பினால் ஏற்படுத்தப்படுவது. ஒரு வேளை அவ்வமைப்பின் உயர் மட்டத்தினருக்கு அவர்களது திட்டம் செல்லும் திசை தெரியாது இருக்கலாம். அத்துடன் விக்கிமீடியா உயர் நிலை நிர்வாகிகளும் இத்திட்டத்துக்குக் கொள்கையளவில் ஒப்புதல் அளித்திருக்கக்கூடும். எனவே, உடனடியாகக் கட்டுரைகளை நீக்குவது, பயனர் கணக்குகளைத் தடை செய்வது போன்ற விடயங்கள் உரிய பயனை விளைவிக்காது என்பது எனது கருத்து. எனவே இப் பிரச்சினையை வேறு வழியில் அணுகுவது நல்லது. விக்கிப்பீடியா இந்திய அமைப்யையும் இதில் ஈடுபடுத்த வேண்டும். அவர்களூடாக விக்கிமீடியாவின் உயர்நிலை நிர்வாகிகளை அணுகி அவர்கள் மூலம் கூகிள் நிறுவனத்தை அணுக வைக்கலாம். தமிழ் விக்கிப்பீடியா சார்பிலும் நேரடியாக விக்கிமீடியா நிறுவனத்துக்கு எழுதலாம். நமது அணுகு முறை வலுவானதாக இருக்கவேண்டும் அல்லது நமது நடவடிக்கைகளை இலகுவாக முறியடித்து விடுவார்கள். நடவடிக்கைகளைக் கூடிய விரைவில் தொடங்கவேண்டும். (கட்டுரைப் போட்டிகள் முடிந்த பின்னர்?)

அதுவரை கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுக்கு அவற்றில் பொருட்பிழைகள், எழுத்துப்பிழைகள் போன்றவை இருப்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு ஒரு வார்ப்புரு இடுவதன் மூலம் அக்கட்டுரைகளைப் பயன்படுத்த விழைவோரை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தலாம். இது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதையும் அறியத்தரலாம். தற்போது பயன்படுத்தப்படும் வார்ப்புரு போதுமானது அல்ல.

மயூரநாதன் 07:02, 23 ஏப்ரல் 2010 (UTC)

ஆங்கில முகவரிகள்[தொகு]

கைப்பேசிகள் போன்ற கருவிகளிலும் பயன்படுத்தத்தக்க வகையில் மலையாள விக்கியில் ஆங்கில முகவரிகளும் பயன்படுத்தப்படுவதாக அறிய முடிகிறது. இது போல் தமிழிலும் செய்யலாமா? இது வரை தேவையற்ற ஆங்கில வழிமாற்றுப் பக்கங்கள்வைப்பத்தில் என்பது நமது நடைமுறையாக இருக்கிறது. சோதனைக்கு, மலையாளம் பக்கத்தின் வலமேல் முனையைப் பார்க்கவும்.--ரவி 16:38, 20 ஏப்ரல் 2010 (UTC)

cyclic link தேடுபொறிகள் தடுத்துவிட வாய்ப்பு உண்டு என்று நினைக்கிறேன். அநாவசியமானதாக தோன்றுகிறது. -- மாஹிர் 16:56, 20 ஏப்ரல் 2010 (UTC)

cyclic link பற்றி நினைவூட்டியதற்கு நன்றி. இது நாமாகவே ஒவ்வொரு பக்கத்திலும் தேவைப்பட்டால் மட்டுமே சேர்க்க வேண்டிய வார்ப்புரு. எனவே, இந்த வசதி தேவையில்லாவிட்டால் விட்டுவிடலாம்--ரவி 12:16, 21 ஏப்ரல் 2010 (UTC)