விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு14

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குரோம்[தொகு]

குரோம் உலாவியில் Firefox 3 உலாவியைக் காட்டிலும் த.வி பார்க்க, தொகுக்க கூடுதல் வேகமாக இருப்பது போல் தோன்றுகிறது. அனைவரும் பயன்படுத்திப் பார்க்கலாம்.--ரவி 02:16, 3 செப்டெம்பர் 2008 (UTC)

ஆம், பார்க்கவும் எழுத்துகள் அழகாக உள்ளன. (ச'வாரியில் இன்னும் அழகாக உள்ளன.) பக்கங்கள் விரைவாக தரவிறங்குவது போலத் தோன்றுகிறது. பயன்படுத்திப் பார்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 03:30, 3 செப்டெம்பர் 2008 (UTC)

தமிழில் உள்ளிடுவது எப்படி? நான் பயர்பாக்சில் தமிழ்விசை பயன்படுத்துகிறேன். --சிவக்குமார் \பேச்சு 14:25, 4 செப்டெம்பர் 2008 (UTC)

NHM writer, எ-கலப்பை போன்றவை நிறுவிப் பயன்படுத்துவது தான் ஒரே வழி. அதுவும் NHM writerல் மட்டுமே phonteic முறையிலும் உள்ளிடலாம். எ-கலப்பை தமிழ்99 முறை மட்டும் வேலை செய்யும். இது குரோமில் உள்ள வழு. வருங்காலத்தில் firefox நீட்சிகளையும் பயன்படுத்த ஏற்பு தருமானால் நன்றாக இருக்கும். --ரவி 14:42, 4 செப்டெம்பர் 2008 (UTC)

ஓ அப்படியா. நன்றி ரவி. சரி அது வரைக்கும் நான் நரிச் சவாரி தான் :)--சிவக்குமார் \பேச்சு 14:48, 4 செப்டெம்பர் 2008 (UTC)
தமிழில் உள்ளீடு செய்யதில் உள்ளபிரச்சினை சம்பந்தமாக வழு அறிக்கை சமர்ப்பித்துள்ளேன். பார்க்க http://code.google.com/p/chromium/issues/detail?id=1097 --உமாபதி \பேச்சு 15:25, 4 செப்டெம்பர் 2008 (UTC)
NHM Writer என்லைட் முறையில் நிறுவதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். வெற்றியளிக்கும் என்ற எதிர்பாப்புடனேயே தொடங்கியுளேன். மேலதிக விபரங்களைப் பின்னர் அறியத் தருகின்றேன் --உமாபதி \பேச்சு 13:53, 7 செப்டெம்பர் 2008 (UTC)
என் எச் ரைட்டர் என்லைட் முறையில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவும் பொழுதே நிறுவக் கூடியாதான முயற்சி வெற்றியத்துள்ளது. தற்போதைக்குத் தமிழ் மொழியையே default மொழியாக எடுத்துக் கொள்ளும் தவிர இயங்கு தளத்தை நிறுவிக் கொள்ளும் பொழ்து Task Bar இல் என் எச் எம் ரைட்டர் ஐ நிறுவமுடியாதுள்ளதாக ஓர் பிழைச் செய்தி வருகின்றது ஆயினும் விண்டோஸ் நிறுவப்பட்டதும் எதுவித பிரச்சினையும் இன்றி வேலை செய்கின்றது. இதைப் பதிவிறக்க http://cid-afe0590778dade55.skydrive.live.com/self.aspx/nLite/NHMWriter.cab ஊடாகவும் இது பற்றிய வலைப்பதிவை http://tamilcomputing.blogspot.com/2008/09/blog-post.html இலும் காணலாம்.--உமாபதி \பேச்சு 04:04, 21 செப்டெம்பர் 2008 (UTC)வலைச்சமுதாயங்களில் பங்களிப்பு விகிதம்[தொகு]

வலைச்சமுதாயங்களில் பங்களிப்பு விகிதம்--ரவி 23:09, 6 செப்டெம்பர் 2008 (UTC)

Clay Shirky: Institutions vs. collaboration[தொகு]

இணைப்பிற்கு நன்றி நற்கீரன். இது நீங்கள் ஏற்கனவே தந்த இணைப்புத்தானே? அல்லது புதிதான இணைப்பா?--உமாபதி \பேச்சு 06:24, 11 செப்டெம்பர் 2008 (UTC)

விக்கிப்பீடியா முழுமைக்குமான கலைச்சொல் மாற்றங்கள்[தொகு]

விக்கிபீடியா - > விக்கிப்பீடியா என்று பெயர் மாற்றிய பிறகு தளம் முழுக்க இம்மாற்றங்களைச் செய்ய வேண்டி வந்தது. இது போல் கலைச்சொல் பயன்பாடுகளிலும் ஒரு புரிந்துணர்வுக்குப் பிறகு தளம் முழுக்க மாற்ற வேண்டி வரலாம். எடுத்துக்காட்டுக்கு, தபால் - > அஞ்சல் என்று தளம் முழுக்க மாற்றலாம் என்றால் இதைத் தானியக்கமாக எப்படிச் செய்வது? இதற்கு ஒரு நிலையான தானியங்கி செய்து, வேண்டிய சொல் மாற்றங்களை விண்ணப்பித்து பொது இணக்கத்துக்குப் பிறகு மாற்றுமாறு அமைத்தால் நன்றாக இருக்கும். வருடம் - > ஆண்டு போன்ற ஒரே வகை உரை திருத்த்ததைப் பல கட்டுரைகளிலும் திரும்பத் திரும்ப கைப்பட செய்ய வேண்டி உள்ளதால் இத்தகைய ஏற்பாடு மிகவும் உதவும்--ரவி 05:08, 11 செப்டெம்பர் 2008 (UTC)

சொல் இலக்கணம்[தொகு]

நிர்வாகம் - > நிருவாகம்; கர்நாடகம் - கருநாடகம்; செர்மனி - > செருமனி என்று எழுதும் வழக்கம் இருப்பது ஏன்? சொல்லின் இடையில் ர் போன்ற மெய்கள் தனியே வரலாகாதா? இதற்கான இலக்கணம் என்ன?

  • சொல்லின் முதலில் மெய்யெழுத்து வராது
  • சொல்லின் இறுதியில் க், ச், ட், ப், த், ற் முதலிய எழுத்துகள் வராது.

மேற்கண்டவை போன்ற இலக்கண வழிகாட்டுக் குறிப்புகளைத் தொக்குதால் நடைக்கையேட்டில் இட்டு வைக்கலாம்--ரவி 05:09, 11 செப்டெம்பர் 2008 (UTC)

இது பயனுள்ள ஒரு நடவடிக்கை. எனக்குத் தெரிந்தவற்றைத் தொகுக்க முயல்கிறேன். மயூரநாதன் 14:20, 11 செப்டெம்பர் 2008 (UTC)


விக்கிப்பீடியா:தமிழ் இலக்கணக் கையேடு --Natkeeran 17:32, 11 செப்டெம்பர் 2008 (UTC)

அவன்[தொகு]

மன்னர்கள், புலவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் போன்றோரை அவன், இவன் என்று விளிக்கும் பேச்சு வழக்கில் உண்டு. எழுத்து வழக்கிலும் மன்னர்கள், புலவர்களுக்கு இது பயன்படுகிறது. விக்கிப்பீடியாவைப் பொறுத்த வரை என்ன நிலைப்பாடு எடுக்கலாம்? இது வரை மன்னர்கள் குறித்த கட்டுரைகளில் மட்டும் அவன் என்று குறிப்பிடுகிறோம். எல்லாரையும் அவர் என்றே குறிப்பிட்டு விடலாம் என்பது என் பரிந்துரை --ரவி 05:35, 11 செப்டெம்பர் 2008 (UTC)

தரக் கண்காணிப்பு[தொகு]

இது வரை த.வி தரக்கண்காணிப்பு என்பது பிற இந்திய விக்கிகளோடு ஒப்பிட்டும், கட்டுரை அளவு, ஆழம் போன்ற அடிப்படைகளிலுமே இருக்கி்றது. அண்மையில் கட்டுரைகளின் முக்கியத்துவம் குறித்த வார்ப்புருகளை தெரன்சு உருவாக்கினார். கட்டுரைகளின் முக்கியத்துவம் அடிப்படையில் தரக் கண்காணிப்பு வார்ப்புருகளை பேச்சுப் பக்கங்களில் இடுவதன் மூலம் நம் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் காலம் வந்து விட்டதோ எனத் தோன்றுகிறது. அனைவருக்கும் உடன்பாடு என்றால் கொஞ்சம் கொஞ்சமாக இப்பணிகளைத் துவக்கலாம். ஒரு சிறு வரையறையை முன்வைத்து இணங்கி, ஆர்வமுடையோ முக்கியத்துவ வார்ப்புருகளை இடத் துவங்கலாம்--ரவி 05:38, 11 செப்டெம்பர் 2008 (UTC)

கட்டுரைகளின் முக்கியத்துவம் என்பது எந்த அடிப்படையில்? எதுவாயிருந்தாலும் இத்தகைய ஒரு அளவீடு தேவைதான். எழுதப்படும் கட்டுரைகளின் முக்கியத்துவம் மற்றும் தரம் சார்ந்த அளவீடுகள் இருப்பது பயனர்கள் நல்ல கட்டுரைகளை எழுதுவதற்குத் தூண்டு கோலாக அமையும். இன்றைய நிலையில் நாம் முன்னர் கவனம் செலுத்திய கட்டுரை எண்ணிக்கை, அவற்றின் அளவு, நீளம், ஆழம் போன்றவற்றிலும் கூட நாம் போதிய அளவு வளர்ச்சியடைவதாகத் தெரியவில்லை. சில இந்திய மொழிகள் இவ்விடயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுவருவதைக் காண முடிகிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கவேண்டிய கட்டுரைகளை (இதற்கு ஒரு பட்டியல் உண்டா?) இனம் கண்டு அத் தலைப்புக்களில் தரமான கட்டுரைகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தலாம். எல்லா விக்கிப்பீடியாக்களிலும் இருக்க வேண்டிய கட்டுரைகள் பட்டியல் என இங்கு உள்ள 1039 கட்டுரைகளில் 409 கட்டுரைகள் இதுவரை தமிழில் எழுதப்படவில்லை. உண்மையில் இந்தப் பட்டியலில் உள்ள தலைப்புக்கள் பல எல்லா விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டியவை தானா என்னும் ஐயம் இருந்தாலும், பிற உலக மொழிகளுடன் ஒப்பிடுவதற்கு இது உதவியாக இருக்கும். மயூரநாதன் 13:28, 11 செப்டெம்பர் 2008 (UTC)

ஆங்கில விக்கி நோக்கில் தமிழ், தமிழ்நாடு கட்டுரைகள் இரண்டாம் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கலாம். ஆனால், நம் நோக்கில் இவை முதல் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே, தரக்கண்காணிப்பு தமி்ழர் நோக்கிலும் இருக்க வேண்டும் என்பது முக்கியம். அப்புறம், இந்திய ஊர்கள், தமிழ்த் திரைப்படங்கள் என்று ஒரே போன்று ஆயிரக்கணக்கில் கட்டுரைகள் உள்ளன. இவற்றின் முக்கியத்துவம் கிட்டத்தட்ட ஒரே போல் தான் இருக்கும். இவற்றுக்கு கைப்பட முக்கியத்துவ வார்ப்புரு இடுவதை விட, பகுப்பின் முக்கியத்துவத்தை உரையாடி அறிவித்து விட்டு, பகுப்பு முழுமைக்கும் தானியக்கமாக வார்ப்புருக்கள் இட்டால் வேலை இலகுவாக முடியும். நற்கீரன், சுந்தர், தெரன்சு முதலியோர் இத்தகைய தானியங்கி உருவாக்கத்தில் உதவினால் நன்று.--ரவி 20:35, 11 செப்டெம்பர் 2008 (UTC) AWBயில் தரக் கண்காணிப்பிற்கான வார்ப்புரு இடுவதற்கான ஒரு நிரல் உண்டு. இதில் சிறு மாற்றங்களைச் செய்தால் தவியில் பயன்படுத்தலாம். ஆங்கில விக்கியின் முக்கியத்துவங்கள் ஐரோப்பிய அமெரிக்க நோக்கு கொண்டவையே. எனினும் உலக நோக்குள்ள முக்கியத்துவங்களை அங்கிருந்து பெறலாம்.--Terrance \பேச்சு 00:28, 12 செப்டெம்பர் 2008 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்க வேண்டிய முக்கிய கட்டுரைகளுக்கான பட்டியல்களான விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2, விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள் ஆகியன இன்னமும் முழுமையாகத் தமிழாக்கப்படாமல் இருக்கின்றன. அவற்றை முழுமையாகத் தமிழாக்கி அனைத்துச் சிவப்பு இணைப்புக்களுக்கும் கட்டுரைகள் எழுதுவதோடு அந்த ஏறத்தாழ ஆயிரம் கட்டுரைகளையும் தம்மளவில் முழுமையானவையாக விரித்து எழுதுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கோபி 02:19, 12 செப்டெம்பர் 2008 (UTC)

Carl Sagan - A thousand years of darkness[தொகு]

--Natkeeran 19:57, 13 செப்டெம்பர் 2008 (UTC)

இந்திய மொழிகளுக்கான தமிழ் எழுத்துப்பெயர்ப்பு கருவி[தொகு]

--Natkeeran 17:58, 15 செப்டெம்பர் 2008 (UTC)

மீடியா விக்கி quiz நீட்சி[தொகு]

மீடியா விக்கி quiz நீட்சியை (http://www.mediawiki.org/wiki/Extension:Quiz) பயன்படுத்தி கேள்வி விடைகளை உருவாக்கினால் நன்றாக இருக்கும். இந்த நீட்சி வேறு இடத்தில் பரிசோதனை செய்து பார்த்தேன். இலகுவாக வேலை செய்கிறது (http://tamilscitech.org/wiki/index.php5?title=Main_Page#quiz0). இதை தமிழ் விக்கி Folders சேர்க்க வேண்டும். பின்னர் LocalSettings.php சிறு மாற்றம் செய்ய வேண்டும். இதற்கு அனுமதி உண்டா. இருந்தால் எப்படி நிறைவேற்றலாம். --Natkeeran 20:10, 15 செப்டெம்பர் 2008 (UTC)

இணைப்பு பற்றி[தொகு]

பெரிங் நீரிணை கட்டுரையில் வலைப்படக்கருவிகான இணைப்பை கொடுத்தேன்; வேலை செய்யவில்லை. ஏன் என்று தெரியவில்லை. உதவி தேவை --கார்த்திக் 19:07, 17 செப்டெம்பர் 2008 (UTC)

படம் இப்போது பதிவேற்றி உள்ளேண். சில படங்கள் commons இல்லாமல் ஆங்கில விக்கியில் இருந்தால் இங்கு நாம் மீண்டும் பதிவேற்ற வேண்டும். வெளி இணைப்பு வேலை செய்யவில்லை என்றால் நாம் எதுவும் செய்ய முடியாது. --Natkeeran 19:28, 17 செப்டெம்பர் 2008 (UTC)

தமிழ்க் கலைக்களஞ்சியம் வரலாறு[தொகு]

--Natkeeran 01:33, 19 செப்டெம்பர் 2008 (UTC)

தகவலுக்கு மிக்க நன்றி. கோபி 04:47, 19 செப்டெம்பர் 2008 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவை தெளிவு படுத்தல் எளிமைப் படுத்தல்[தொகு]

  • உதவி - help
  • கையேடு - guide (or is it how to ?)
  • நிர்வாகம் - நாளாந்தம் செய்ய வேண்டிய பணிகள் (எ.கா இன்றைப்படுத்தல்)
  • கூறுகள் - Wikipedia features ?? , elements

இந்த தகவல்களை சற்று இறுக்கமாக வரையறை செய்ய வேண்டும். பல பக்கங்களில் தகவல்களை சிதறடிக்காமல் இருப்பதும் நன்று. --Natkeeran 01:32, 20 செப்டெம்பர் 2008 (UTC)

உண்மைதான் நற்கீரன், தவி வளர்ச்சியடைந்து செல்லும்போது இவ்வாறான தகவல்கள், சரியானவையாகவும், எளிமையான முறையில் ஒழுங்குபடுத்தப் பட்டவையாகவும் இருக்கவேண்டியது அவசியம். நீண்டகாலம் தவியுடன் தொடர்பில் இருக்கும் எனக்குக்கூடப் பல சமயங்களில் சில குறிப்பிட்ட தகவல்களையோ பக்கங்களையோ கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. புதியவர்கள் என்றால் சொல்லத் தேவையில்லை. முதலில் மேற்படி பக்கங்களில் எத்தகைய மேம்பாடுகள் தேவை, எங்கெங்கே இறுக்கமான வரையறைகள் வேண்டும், இவ்வாறாக பக்கங்களில் சிலவற்றை ஒன்றிணைத்துப் பக்கங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமா போன்ற விடயங்கள் பற்றி உரையாட வேண்டும். பயனர்கள் இப்பக்கங்களின் செய்யவேண்டிய வேலைகள் குறித்து அடையாளங்கண்டால் மேம்படுத்துவது இலகுவாக இருக்கும். மயூரநாதன் 14:09, 20 செப்டெம்பர் 2008 (UTC)
உதவி பக்கங்களுக்கும் கையேடுகளுக்கும் என்ன வித்தியாசம்? வித்தியாசம் தேவையா? கையேடு என்றால் how to/செய்முறை என்றே நினைக்கிறேன். அல்லது Guide Line/வழிகாட்டியா?
உதவி ஒத்தாசைப் பக்கங்கள், அ.கே.கே, புதுப் பயனர் பக்கங்கள், எப்படி பங்களிப்பது போன்ற பக்கங்களை கொண்டிருக்கலாம்.
விக்கிப்பீடியா கூறுகள் ஓரளவு புரியத்தக்கவை. ஆலமரத்தடி என்றால் என்ன? என்ற மாதிரி. ஆனால் அவற்றை consolidate செய்து எழுத வேண்டும். ஒவ்வொரு கூறுக்கும் ஒரு தனி பக்கம் அவசியமா?
நிர்வாகம் என்று நான் இறைப்படுத்தல் பணிகள், துப்பரவு பணிகள், மற்றும் அன்றாடம் பண்கள் தொடர்புடையது.
எவ்வளவுக்கு நாம் தெளிவாக எளிமையாக ஒரு புதுப் பயணருக்கு எடுத்துச் சொல்ல முடியுமோ,அவ்வாறு செய்ய வேண்டும். --Natkeeran 14:18, 20 செப்டெம்பர் 2008 (UTC)

கருவி, உபகரணம், சாதனம், பொறி, ஆயுதம்[தொகு]

இதில் வடி, அரிதட்டு என்பவற்றை utensils என்கிறார்கள். தமிழ் என்ன? உரல், அம்மி போன்றவற்றை சமையல் கருவிகள் எனலாமா? உபகரணம் என்பது சமஸ்கிருத சொல்லா? மாற்று தமிழ் சொல் உண்டா? --Natkeeran 21:46, 20 செப்டெம்பர் 2008 (UTC)

உபகரணம் என்பது கருவி என்ற பொருள் தருவது இல்லையா? --குறும்பன் 20:24, 24 செப்டெம்பர் 2008 (UTC)

தமிழ் உச்சரிப்பு[தொகு]

விக்கிப்பீடியா வருகையும் பயன்பாடும்[தொகு]

தரக்கண்காணிப்புடன் வருகையையும் அவ்வப்போது நோக்க வேண்டும். ஐம்பத்தேழாயிரத்துக்கும் மிகுதியானோர் மிகுதியான முறை நம் தளத்தைப் பார்வையிட வருவது மகிழ்ச்சியான தகவல். இவர்களில் ஒரு விழுக்காட்டினரையாவது பங்களிக்க வைக்க வேண்டும். எப்படிச் செய்வது? தெளிவாகத் தெரியும்படியும் பங்களிக்கத்தூண்டும் வகையிலும் பங்களிப்பது எவ்வளவு எளிது என்பதை விளக்கும் வகையிலும் அறிவிப்பு ஒன்றை வெளியிடலாமா? -- சுந்தர் \பேச்சு 07:57, 24 செப்டெம்பர் 2008 (UTC)

விக்சனரி

தமிழ் விக்கிப்பீடியா மீது விமர்சனம்[தொகு]

Micro-corpus codification in the Hebrew Revival[தொகு]

--Natkeeran 00:34, 25 செப்டெம்பர் 2008 (UTC)

கட்டுரைகள் எண்ணிக்கை - வழு[தொகு]

கட்டுரைகள் எண்ணிக்கை சில நாட்களாகவே இற்றைப்படுத்தப்படுவது இல்லை. ஏன்? மயூரநாதன் 04:10, 27 செப்டெம்பர் 2008 (UTC)

ஆமாம். சுந்தர் கவனிக்க வேண்டும்.--Kanags \பேச்சு 23:31, 27 செப்டெம்பர் 2008 (UTC)
பக்க உள்ளடக்கத்தின் இடைக்காலச் சேமிப்பின் விளைவாக இவ்வாறு நடக்கிறது என்று நினைத்து அதை நீக்கிப் பார்த்தேன், பயனில்லை. வேறு என்ன சிக்கல் என்று அறிய முயல்கிறேன். -- சுந்தர் \பேச்சு 03:38, 28 செப்டெம்பர் 2008 (UTC)
இப்போது இயங்குகிறது. ஆனாலும் கடைசி மூன்று நான்கு நாட்களில் உருவான கட்டுரைகள் எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.--Kanags \பேச்சு 10:10, 28 செப்டெம்பர் 2008 (UTC)

தமிழ் விக்கிபீடியாவுக்கு அகவை 5[தொகு]

  • தமிழ் விக்கிபீடியா தொடங்கி இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி தமிழ்ப் விக்கிப் பயனர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஆரம்பகாலத்தில் இருந்து விடாது விக்கியில் தனது பங்களிப்பை அளித்து வரும் எமது அன்புக்குரிய மயூரநாதனுக்கு எனது சிறப்பான வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.--Kanags \பேச்சு 09:11, 30 செப்டெம்பர் 2008 (UTC)
நன்றி கனகு, தமிழ் விக்கிப்பீடியா மேலும் சிறப்பாக வளர்ந்து எதிர்காலத் தமிழ் வளர்ச்சியில் முன்னணிப் பங்காற்ற வேண்டும் என்பது எனது ஆசை. மயூரநாதன் 13:23, 30 செப்டெம்பர் 2008 (UTC)


தெரியுமா உங்களுக்கு[தொகு]

முதற்பக்கத்தில் ஆங்கில விக்கியில் இருப்பது போல் தெரியுமா உங்களுக்கு பகுதியைத் தொடங்கப் பரிந்துரைக்கிறேன். சில கட்டுரைகள் சிறிதாயிருப்பினும் சுவை மிக்க செய்திகள் இருக்கக் கூடும். அவற்றை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவது பயனர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தலாம். இது போன்ற பட்டியலை உருவாக்கி ஒவ்வொன்றாக காட்சிப் படுத்தலாம். மற்ற பயனர்களின் கருத்தை வேண்டுகிறேன். முதற்பக்கத்தை அடிக்கடி இற்றைப்படுத்தும் கனகர், நற்கீரன் ஆகியோரின் கருத்தையும் அறிய ஆவல். --சிவக்குமார் \பேச்சு 18:18, 30 செப்டெம்பர் 2008 (UTC)

ஒரு கட்டுரைக்கு பதிலாக, இரு துணுக்குகளை இடலாம். முன்னர் இப்படி செய்தோம். மீண்டும் செய்யலாம். --Natkeeran 12:56, 2 அக்டோபர் 2008 (UTC)

ஆம் நல்லதோர் விடயமே, தலைப்பை உங்களுக்குத் தெரியுமா? என்றவாறு வைக்கலாமே--உமாபதி \பேச்சு 13:07, 2 அக்டோபர் 2008 (UTC)

நற்கீரன், உமாபதி உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. தலைப்பை உங்களுக்குத் தெரியுமா என்று வைப்பதே சரியாக இருக்கும். பரிந்துரையை ஏற்றுச் செயல்படுத்தியமைக்கு நன்றி நற்கீரன். --சிவக்குமார் \பேச்சு 14:25, 5 அக்டோபர் 2008 (UTC)
நல்ல ஆர்வமூட்டும் பகுதியை மீண்டும் துவக்கியதற்கு நன்றி, நற்கீரன். பெட்டக்குறும்பரைப் பற்றிய தகவல்களைச் சான்றுடன் அளித்தமைக்கு நன்றி, சிவா. -- சுந்தர் \பேச்சு 16:29, 5 அக்டோபர் 2008 (UTC)

கோவை - expression ?? கோவை ?? - array[தொகு]

சரியான தமிழ் தேவை! --Natkeeran 00:20, 9 அக்டோபர் 2008 (UTC)

கோவை என்பதற்கு expression என்னும் பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. வரிசை, ஒழுங்கு, வரிசைப்படுத்தல், ஒழுங்குபடுத்தல் போன்ற பொருள்களில்தான் கோவை என்னும் சொல் பயன்படுத்தப்படுகின்றது. கோவை ஒருவகைக் கொடியின் பெயரும்கூட. மயூரநாதன் 03:45, 10 அக்டோபர் 2008 (UTC)

Featured article mouse-over text[தொகு]

When you mouse-over interwiki links to featured articles in other languages, it shows a little pop up box that says "This is a featured article in another language." For example if you go here: கூடைப்பந்தாட்டம் and mouse over the interwiki language links to Croatian, Italian, etc. (the ones with yellow stars) you will see this pop up box. Is there a way to translate that into Tamil so it displays in Tamil when you mouse over? Not really a big deal, but I figured since everything else has been translated to Tamil in Tamil Wikipedia it makes sense for that to be translated too...Werklorum 04:07, 10 அக்டோபர் 2008 (UTC)

Done.--Terrance \பேச்சு 04:36, 10 அக்டோபர் 2008 (UTC)

இலங்கைத்தமிழ் - இந்தியத்தமிழ்[தொகு]

இலங்கைத்தமிழ் - இந்தியத்தமிழ் கையேடு உண்டா? சில இடங்களில் பிழைகளை (எனக்கு பிழையாக தெரிபவை) திருத்தலாம் என்றால் அது இலங்கைத்தமிழாக இருக்குமோ என்று தயக்கமாக இருக்கிறது. --குறும்பன் 15:52, 10 அக்டோபர் 2008 (UTC)

தற்போது அவ்வாறான கையேடு இல்லை என்றே எண்ணுகிறேன். ஒன்றை உருவாக்குவது நல்லது. மயூரநாதன் 16:26, 10 அக்டோபர் 2008 (UTC)

சனாதிபதி - குடியரசு தலைவர்[தொகு]

பல கட்டுரைகளில் சனாதிபதி என குறிப்பிடப்பட்டுள்ளது, அதை குடியரசு தலைவர் என மாற்றலாமா? நாடு குடியரசாக இருக்கும் போது அதன் தலைவரை சனாதிபதி என்பதற்கு பதில் குடியரசு தலைவர் எனலாம். --குறும்பன் 16:06, 10 அக்டோபர் 2008 (UTC)

எல்லா சனாதிபதிகளுமே குடியரசுகளின் தலைவர்கள் அல்ல. அதனால் எல்லா சனாதிபதிகளையுமே குடியரசுத் தலைவர்கள் என்று சொல்ல முடியாதென்றே தோன்றுகிறது. மயூரநாதன் 16:34, 10 அக்டோபர் 2008 (UTC)

அண்மைய ஆக்கங்கள்[தொகு]

அண்மையில் சிவா, மயூரநாதன், கனகு, செல்வா, உமாபதி, வெர்க்குலோரம், கனகு, குறும்பன், தெரன்சு உட்பட பலரும் வரிந்து கட்டிக் கொண்டு கட்டுரைகளை ஆக்கி வருவதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. :-) -- சுந்தர் \பேச்சு 01:53, 17 அக்டோபர் 2008 (UTC)

முக்கிய அறிவிப்பு[தொகு]

சில நாட்கள் முன்பாக விக்கிமீடியா சார்பாக விக்கிக்கு வரும் பயனர்களிடம் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தும் திட்டத்தைத் துவக்கினர். அதைத் தமிழில் மொழிபெயர்ப்பதில் மயூரநாதனும் செல்வாவும் நானும் அவர்களுக்கு உதவினோம். இப்போது அந்தத் தகவல் சேர்ப்புக் கருத்துக்கணிப்பு துவங்குகிறது. அனைவரும் தவறாமல் மேலே பின்வருவதுபோல் உள்ள இணைப்பைச் சொடுக்கித் தகவல்களைத் தாருங்கள். நன்றி. -- சுந்தர் \பேச்சு 09:36, 17 அக்டோபர் 2008 (UTC)